உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க…!!

Advertisements

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே…?!

 

 

நெட் ஜோக்

பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?


எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்…!!

புன்னகை பக்கம் – தொடர் பதிவு

 

 

கல்யாணமான புதுசில தேன்மாதிரி பேசுவா! –

டாக்டர், எனக்குத் தொடர்ந்து தினசரி கனவு வருகிறது!

உங்களுக்கு வந்திருப்பது மெகா சீரியல் கனவு.
பயப்படாதீங்க 100 எபிசோடில் முடிந்துவிடும்!

எஸ்.கிருஷ்ணன்

———————————-

நேத்து என்னை மானேஜர் என்னைக்  கூப்பிட்டு இந்த
ஆபிஸ்ல சிரிச்ச முகமா இருக்கிற ஒரே ஆள்
நான்தானாம், பாராட்டினார்!

டே….உன்னை மறைமுகமா இளிச்ச வாயன்னு சொல்றார்!

ஆர்.யோகமித்ரா

——————————————-

ஓடுற பஸ்ல ஏறக்கூடாதுன்னு தெரியாதா உனக்கு?

ஓடாத பஸ்ஸில் ஏறினால் எந்தக் காலத்தில நான் ஊர்
போய்ச் சேர்றது…!

அமுதா அசோக்ராஜா

—————————————

என் மனைவி கல்யாணமான புதுசில தேன்மாதிரி பேசுவா!

இப்ப?

தேனீ மாதிரி கொட்டுறா!

லட்சுமி ஆவுடைநாயகதம்

—————————————-
-தினமணி கதிர்

இதுக்கு முன்னால என்னவா இருந்தீங்க?

sm1

பாட்டி!….அப்பா ‘சோனி’ டி.வி.வாங்கப்போறதா சொன்னாரு…!

எதுக்குடா அது? நல்லா தெம்பா திடமா , இருக்குறதை
வாங்கச் சொல்லுடா…!!

ஆர்.யோகமித்ரா

——————————————–

நீ அம்மா செல்லமா? அப்பா செல்லமா?

அம்மா, அப்பா செல்லம்!

அம்மா யார் செல்லம்னு நான் கேக்கல….
நீ, யாரோட செல்லம்னுதான் கேட்டேன்?

வி.ரேவதி

—————————————

ஏண்டா மாவு பாத்திரத்தை கையிலே வெச்சுக்கிட்டு
ஒளிஞ்சு ஒளிஞ்சு போறே?

அம்மாதான் மாவை ‘நைசா’ அரைச்சுக்கிட்டு
வரச்சொன்னாங்க..!

எஸ்.பொருநை பாலு

———————————-

எதுக்கு முதல் சொம்புத் தண்ணியை கீழே ஊத்தறே?

முதல் சொம்பை எடுத்து ஊத்திக்கும்போது குளிரும்னு
அம்மா சொன்னாங்க!

மு.முத்துராம் சுந்தர்

——————————————

 

 

 

இன்டர்வியூவில் ….

உங்க பேர் என்ன?

பூமணி!

இதுக்கு முன்னாலே என்னவா இருந்தீங்க?

பூமணியாவேதான்!

க.சங்கர்
————————————-

சிறுவர் மணி

 

 

ஆசை, பேராசை இரண்டுக்கும் வித்தியாசம்…? 

 

 

இது…அரைக்கீரை வடை சார்…!!

 

« Older entries