கொசுக்கடியிருந்து பாதுகாத்துக்கொள்ள டிப்ஸ்

zzz.JPG

IMG_1867.JPG

குளிர்பானங்களை எளிதில் குளிர்விக்க…

IMG_20180620_200120176_2.jpg

தமிழின் முதல் தூது நூல்..

unnamed (3).jpg

unnamed (4).jpg

பலமிருந்தும் போராடாவிட்டால்…!!

20160905_150428.jpg

‘வணக்கம்’ சொல்லும் முறை

https://vanakkamayya.files.wordpress.com/2013/04/vam.jpg

ஆங்கிலேயர்கள் பிறரைச் சந்திக்கும் போது,
‘குட் மார்னிங், குட்ஆப்டர் நூன், குட் ஈவனிங்”
என்று கூறி அவ்வப்பொழுதுகளுக்கு ஏற்ப வணக்கம்
தெரிவிக்கிறார்கள்.

நாமும் ஆங்கிலத்தில் பேசி வரவேற்கும் போது இவ்வாறு
கூறினால் தவறில்லை. ஆனால், தமிழில் வரவேற்கும் போது
இவற்றை அப்படியே தமிழாக்கம் செய்து,
“காலை வணக்கம், மாலை வணக்கம், இரவு வணக்கம்”
என்று கூறுகிறோம்.

தமிழில் இவ்வாறு கிடையாது. எந்தப் பொழுதில் வணக்கம்
கூறுகிறோமோ, அது அந்தப் பொழுது வணக்கம்தான்.
ஆகவே வணக்கத்தை காலை, மாலை, இரவு என்று பாகுபடுத்த
வேண்டாம். எப்பொழுதிலும் யாரைச் சந்தித்தாலும் ‘வணக்கம்’
என்று கூறினால் போதும். அதுவே சரியான முறை.

* * *

மெல்லக் கொல்லும் பாக்கெட் மாவு!


காலாவதியான அரிசி, உளுத்துப்போன உளுந்து, உப்புத்தன்மை
கொண்ட போர் வாட்டர், ஆப்பச்சோடா, ஈஸ்ட் சுண்ணாம்புத்தூள்,
பழைய சோறு புளித்துப்போன பழைய மாவு…

தமிழர்களின் ஃபேவரைட் உணவான இட்லியும் தோசையும் இப்போதே
அநேக வீடுகளில் இந்த கலவையிலிருந்தே கிடைக்கிறது என்றால்
நம்புவீர்களா?

சுகாதாரமில்லாத இந்த மாவினை பயன்படுத்தினால் வயிறு சம்பந்தப்பட்ட
எல்லா பிரச்னைகளும் வரும் என்கின்றனர் மருத்துவர்கள்.

பாக்கெட் மாவு தயாரிப்பவர்களில் 90 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள்
முதல் நாள் மிஞ்சும் மாவை அப்படியே திரும்ப எடுத்துப்போய் அடுத்த
நாள் அரைக்கும் மாவுடன் கலந்து விடுகிறார்கள்.

பாக்கெட் மாவு விற்பனை அங்கீகரிக்கப்பட்ட தொழிலா?
என்று உணவுப் பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு
கேட்டோம்.

ஒவ்வொருத்தரும் உணவு மற்றும் மருந்தியல் பாதுகாப்புத் துறையில்
தங்களைப் பதிவு பண்ணி உரிமம் வாங்கணும்னு சொல்லியிருக்கோம்.
அதுபோக குறிப்பிட்ட இடைவெளியில மாவு தயாரிக்கிற இடம், முறையை
ஆய்வு செய்றதும் உண்டு. கலப்படம் இருப்பது நிரூபணமானால்,
சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதமும், அதிகபட்சம் மூன்றாண்டுகள்
தண்டனையும் கிடைக்கும் என்கின்றனர்.

————————-

– எஸ். அன்வர்- குமுதம்

கேன்வாட்டர் ஜாக்கிரதை!


அரசாங்கம் குடிநீரை மக்களக்கு விநியோகிப்பதற்கு முன்
அதை ஐந்துவிதமான படிநிலைகளில் சுத்திகரித்துதான் அனுப்புவார்கள்.

அதில் குளோரின் போடுவதால் நீர் மூன்று நாட்கள் வரை மாசு படாமல்
இருக்கும். இதில் நம் கைகளின் வழியே கலக்கும் கிருமிகள் கூட இறந்து
போய்விடும்.

ஆனால் தனியார் கம்பெனிகள் இம்முறைக்கு பதிலாக அல்ட்ரா வைரஸ்
ரைஸ் கருவியை பயன்படுத்துகிறார்கள். அதே போல் குளோரினுக்கு
பதிலாக ஓஸோன் முறையை பயன்படுத்துகிறார்கள். இந்த முறையில்
சுத்தப்படுத்துப்படும்போது நீரில் உள்ள கிருமிகள் அழிந்து போகும்.

அதை கேன்களில் அடைத்து வெளியே கொண்டு வரும்போது படும்
சூரிய வெப்பத்தால் மீண்டும் கிருமிகள் உயிர் பெற்றுவிடும்.
எனவே பாட்டில் தண்ணீரை நீங்கள் திறந்துவிட்டால் உடனே 24 மணி
நேரத்திற்குள் குடித்துவிட வேண்டும். ஆனால் அரசு நீரை மூன்றுநாள்
வரை குடிக்கலாம் என்கிறார் அரசு மருத்துவர் ரவிக்குமார்.

————–
– எஸ். அன்வர்
அரண்மனைசுப்பு
– குமுதம்

 

ஆனந்த ரங்கம் பிள்ளை 10

-ஆனந்த ரங்கம் பிள்ளை – மார்ச் 30, 1709 -ஜனவரி 16, 1761- (அகவை 51)
—————-

நாட்குறிப்பு மூலம் வரலாற்றை பதிவு செய்தவரும் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் மொழிபெயர்ப்பாளருமான ஆனந்த ரங்கம் பிள்ளை (Ananda Ranga Pillai) – அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 சென்னை பெரம்பூரில் (1709) பிறந்தவர். பாண்டிச்சேரியில் குடியேறிய தந்தை, அரசுப் பணியில் சேர்ந்து, திவானாகப் பதவி உயர்வு பெற்றார். எம்பார் என்பவரிடம் கல்வி பயின்ற ஆனந்த ரங்க பிள்ளை, அரசுப் பணிகளில் அப்பாவுக்கு உதவி யாக இருந்தார். பிரெஞ்சு ஆளுநர் ட்யூப்ளக்ஸின் மொழி பெயர்ப்பாளராக 1747-ல் நியமிக்கப்பட்டார்.

பல தொழில்கள் செய்தார். சொந்தமாக கப்பல் வைத்திருந்தார். தினசரி நடக்கும் நாட்டு நிகழ்வுகளைக் குறிப்புகளாக எழுதிவைக்கும் பழக்கம் கொண்டவர்.

 பன்மொழிப் புலமை படைத்த இவர் இந்திய மன்னர்கள் பிரெஞ்சுக்காரர்கள் இடையே பாலமாக விளங்கினார். முசபர்சங் என்ற மன்னர் இவருக்கு 3 ஆயிரம் குதிரைகளை வழங்கி, மன்சுபேதார் பட்டத்தையும் வழங்கினார். செங்கல்பட்டு கோட்டைக்குத் தளபதியாக, ஜாகீர்தாராகவும் நியமிக்கப்பட்டார்.

 மக்கள் மத்தியில் மன்னருக்கு நிகரான செல்வாக்கு பெற்றிருந்தார். 1749-ல் ‘துபாஷி’ பட்டத்தை ஆளுநர் இவருக்கு வழங்கினார்.

 ஏறக்குறைய 25 ஆண்டுகாலம் நாட்குறிப்பு எழுதியுள்ளார். 18-ம் நூற்றாண்டின் சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள், பிரெஞ்சுப் படையின் வெற்றி, தோல்விகள், டெல்லி மீதான பாரசீகப் படையெடுப்பு, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட கடும் தண்டனைகள், கடல் வணிகம், இந்தியா வந்த வெளிநாட்டுப் பயணிகள் விவரம் உட்பட பல நிகழ்வுகளின் முக்கிய வரலாற்றுப் பதிவாக இவரது நாட்குறிப்பு திகழ்கிறது.

 மன்னர்களின் குணங்கள், ஆங்கிலேயரின் போக்கு, மக்கள் பட்ட அவதி, வெளிநாட்டினர் அடித்த கொள்ளை, புதுச்சேரி, ஆற்காடு, வந்தவாசி, தஞ்சாவூர், திருச்சி, ஹைதராபாத், டெல்லியில் நடந்த சம்பவங்கள், போர்த் தந்திரங்கள், நீதியுரைகள், ஜோதிடக் குறிப்புகள்கூட நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.

 இவை அனைத்தும் எளிய தமிழில் உள்ளன. இவரது நாட்குறிப்புகளின் பெரும் பகுதி வணிகச் செய்திகளை உள்ளடக்கியவை. பேச்சுத் தமிழ், சொற்கள், சொற்றொடர்கள், இலக்கணக் கூறுகளையும் இவரது குறிப்புகள் எடுத்துக்கூறுகின்றன.

 உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியாகப் புகழ்பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீஸுடன் (Samuel Pepys) இவரை ஒப்பிட்டு, ‘இந்தியாவின் பெப்பீஸ்’ எனவும், நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றப்படுகிறார்.

 இவரைப் பற்றி பல பாடல்கள், புத்தகங்கள் எழுதப்பட்டுள் ளன. இவர் மறைந்து 85 ஆண்டுகளுக்குப் பிறகே இவரது நாட்குறிப்புகள் கிடைத்தன. பிரெஞ்சு அரசாங்கம் இவற்றை பிரெஞ்ச்சில் மொழிபெயர்த்து 8 தொகுதிகளாக வெளியிட்டது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

 1736 முதல் 1753 ஆண்டு காலம் வரையிலான நாட்குறிப்புகள், தமிழில் 8 தொகுதிகளாக வந்தன. அதன் பிறகு அவர் எழுதிய நாட்குறிப்புகள் இன்னமும் தமிழில் வெளிவரவில்லை. தமிழ் எழுத்துலகின் ஒரு புது இலக்கிய வடிவத்துக்கு முன்னோடியான ஆனந்த ரங்கம் பிள்ளை 51 வயதில் (1761) மறைந்தார்.

ராஜலட்சுமி சிவலிங்கம்
தமிழ் தி இந்து காம்

 

‘வெங்காயம் – சமையற்கட்டை அரசாளும் ராஜா

‘வெங்காயம், ‘லில்லி’ இனத்தைச் சேர்ந்ததுன்னும்,
இதில், 500க்கும் மேற்பட்ட இனங்கள் இருக்கிறதுன்னும்
தாவரவியல் விஞ்ஞானிகள் சொல்றாங்க.

‘வெங்காயத்தை, சமையற்கட்டை அரசாளும் ராஜா
என்றாலும் தகும். ஆசியப் பகுதியில், 5,000 ஆண்டுகளுக்கு
முன், கண்டுபிடிக்கப்பட்டது தான் வெங்காயம்!

‘வெங்காயத்தை ஆங்கிலத்தில், ‘ஆனியன்’ என்கிறோம்.
இது லத்தீன் வார்த்தையான, ‘யூனியோ’ என்பதிலிருந்தும்,
பிரெஞ்சு சொல்லான, ‘ஆன்னான்’ என்பதிலிருந்தும்
தோன்றியது.

‘முதன் முதலில், சக்திமிக்க மருத்துவ மூலிகையாக அறிமுகம்
ஆனது வெங்காயம். இது, நல்ல கண் பார்வையை பெற,
உதவுவதாக நம்பினார், மருத்துவ தந்தையான,
ஹிப்போகிரேடஸ். 1596ல் வெளியிடப்பட்ட, ‘இறந்த மூலிகைகள்’
என்ற நூலில், வழுக்கைத் தலையில் முடி வளர, வெங்காயச் சாறு
உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘வெங்காயம், வலிப்பு நோயைக் குணப்படுத்தும், ஜலதோஷத்தைப்
போக்கும், மூட்டுவலி மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல்
உபாதைகளை குறைக்கும்.

மேலும், உடலின் அதிகபட்ச கொழுப்பை நீக்குறதுடன்,
அஜீரணத்தையும் போக்கும் என்றும், ஆயுர்வேத மருத்துவ நூல்களில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இதில், கால்ஷியம், இரும்பு சத்து, புரோட்டீன் மற்றும் விட்டமின்கள்
நிறைய உள்ளன.

‘வெங்காயத்தின் மகாத்மியத்தை நன்றாக அறிந்திருந்தனர்
பண்டைய எகிப்தியர்கள். எகிப்திய பிரமிடுகளை உருவாக்கிய
அடிமைகளுக்கு சக்தியூட்ட, வெங்காயத்தையே முழு உணவாக
அளித்ததுடன், அதை, புனிதப் பொருளாகவும் கருதினர்.

‘தான் இனிய குரலைப் பெற்றதற்கு, வெங்காயமே காரணம் எனப்
புகழ் பாடியுள்ளான் ரோம் மன்னன் நீரோ.
மத்திய கால ஐரோப்பியர்கள் திருமணப் பரிசாக, வெங்காயத்தை
அளித்து வந்தனர்.

—————————————–
நன்றி – வாரமலர்

காந்தியின் தீபாவளி

 ஒரு சமயம் டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் தீபாவளி
கொண்டாட்ட
விருந்துக்கு அப்போது லண்டனில் படித்துக்கொண்டிருந்த
காந்தியையும் அழைத்திருந்தார்கள். ராஜன் அதற்கு முன்
காந்தியைப் பார்த்தது இல்லை. விருந்துக்கான சமையல்
வேலையை ராஜன் கவனித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, ஒல்லியான உருவம் உள்ள ஒருவர் ராஜனுக்கு
உதவி செய்ய முன்வந்தார். ராஜன் அவரை ஏகமாக விரட்டி
வேலை வாங்கிக்கொண்டிருந்தார். “அதை எடு; இதைக்
கொண்டா’ என்றெல்லாம் நிமிடத்துக்கு பத்து உத்தரவு
இட்டுக்கொண்டிருந்தார்.

ஏற்பாடுகள் எந்த அளவில் இருக்கின்றன என்று பார்ப்பதற்காக
சமையல் அறைக்குள் நுழைந்த உ.வே.சு. அய்யர் அங்கே
நடப்பதை கண்டு திகைத்து நின்றுவிட்டார். ராஜன் விரட்டி
வேலை வாங்கிக் கொண்டிருந்தது வேறு யாரையுமல்ல.
அன்றைய கொண்டாட்டத்தின் முக்கிய விருந்தினரான
மகாத்மா காந்தியைத்தான்.

விஷயம் தெரிந்த பின் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் மிகவும்
வெட்கமடைந்தார்.

>போளூர் சி.ரகுபதி

« Older entries