19 லட்சம் கொடுத்து மாணவிகளுக்கு பஸ் வாங்கிக் கொடுத்த மருத்துவர்.. என்ன காரணம்?

ராஜஸ்தானில் மருத்துவர் ஒருவர் படிப்பிற்காக நீண்ட
தூரம் நடந்து அவதிப்பட்டு வந்த மாணவிகளுக்கு தனது
பிஎஃப் பணத்தில் பஸ் வாங்கி விட்டுள்ளார்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில்.
ரமேஷ்வர் பிரசாத் யாதவ் என்ற மருத்துவர் தனது
மனைவியுன் காரில் சென்று கொண்டிருந்தபோது
இரண்டு மாணவிகள் மழையில் நனைந்தபடி அவர்களிடம்
லிஃப்ட் கேட்டுள்ளனர்.

அவர்கள் அந்த மாணவிகளுக்கு லிஃப்ட் கொடுத்துள்ளனர்.
அப்போது அந்த மாணவிகள் தாங்கள் தினமும் சந்தித்து
வரும் இன்னல்கள் குறித்து அந்த மருத்துவரிடம் தெரிவித்தனர்.

கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்றால் எங்கள் கிராமத்தில்
இருந்து பஸ் ஸ்டாப்பிற்கு தினமும் 6 கிலோ மீட்டர் நடக்க
வேண்டும். மழையோ அல்லது வெயிலோ தினமும்
நடந்து தான் சென்று வருகிறோம்

சில சமயம் இளைஞர்கள் சிலர் எங்களிடம் அத்துமீறுவார்கள்
என அந்த மாணவிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

இதனைக் கேட்டதிலிருந்தே அப்செட்டாக இருந்த மருத்துவர்
பிரசாத், தனது பிஎஃப் பணத்திலிருந்து 17 லட்சம் ரூபாயை
எடுத்து தனது கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை போட்டு
19 லட்சத்தில் புதிதாக மாணவிகளுக்கு பஸ் வாங்கி விட்டுள்ளார்.

அதில் மாணவிகள் தினமும் இலவசமாக கல்லூரிக்கு பயமின்றி
சென்று வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய அந்த மருத்துவர், உடல்நலக்குறைவால்
எங்கள் குழந்தை சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டது.
ஆனால் நான் இப்பொழுது நான் செய்த இந்த உதவியால்
எனக்கு புதிதாக 50 பெண் பிள்ளைகள் கிடைத்திருக்கும்
திருப்தியை அடைந்துள்ளேன் என அவர் ஆனந்தமாக
தெரிவித்தார்.

சுயநலமிக்க இந்த உலகத்தில் இப்படியும் சில மனிதர்கள்
இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

———————————–
வெப்துனியா

மனைவியை சுமந்தால், ‘பீர்’ கிடைக்கும்!

வேகமாக மாறி வரும் இன்றைய சூழ்நிலையில்,
கணவன் – மனைவி இடையேயான உறவில்
கருத்து வேறுபாடுகள் அதிகரிப்பது வழக்கமாகி
விட்டது.

கணவன் – மனைவிக்கு இடையே, ஆரோக்கியமான
சூழலை உருவாக்குவதற்காக, அமெரிக்காவின்,
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, மைனே நகரில்,
ஆண்டுதோறும், வித்தியாசமான போட்டி நடத்தப்படுகிறது.

கணவன், மனைவியை, முதுகில் சுமந்தபடி, குறிப்பிட்ட
துாரத்துக்கு ஓட வேண்டும். இடையில், தண்ணீர், மேடு,
பள்ளம் என, தடைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கும்.

இந்த தடைகளை கடந்து, முதலில் வரும் தம்பதிக்கு,
சிறப்பு பரிசாக, மனைவியின் எடைக்கு நிகராக,
‘பீர்’ வழங்கப்படும்.

சமீபத்தில், மைனே நகரில் நடந்த போட்டியில்,
ஜெஸ்லி வெல் – கிறிஸ்டியன் தம்பதி, முதல் பரிசை
தட்டிச் சென்றது.

ஐரோப்பிய நாடான, பின்லாந்துக்கு செல்வதற்கான,
இலவச விமான டிக்கெட்டும், இவர்களுக்கு வழங்கப்பட்டது.

—————————–
— ஜோல்னாபையன்.

மேற்கு வங்காளத்தில் 10ம் வகுப்பு வாரிய தேர்வை எழுதும் 12 வயது சிறுமி

மேற்கு வங்காளத்தில் 10ம் வகுப்பு வாரிய தேர்வை எழுதும் 12 வயது சிறுமி

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் ஹவுரா மாவட்டத்தினை சேர்ந்த
சிறுமி சைபா கதூன் (வயது 12). இவர், மேற்கு வங்காள
மேனிலை கல்வி வாரியம் நடத்த உள்ள 2019ம்
ஆண்டிற்கான 10ம் வகுப்பு தேர்வில் கலந்து
கொள்வதற்காக தயாரானார்.

இதற்காக பள்ளி கூடத்திற்கு சென்று முறைப்படி
படிக்காமல் வீட்டிலேயே படித்து வந்துள்ளார்.

அதன்பின்னர் கடந்த ஆகஸ்டில் நடந்த 10ம் வகுப்பு தேர்வு
எழுதுவதற்கான தகுதி தேர்வில் கலந்து கொண்டார்.
இதன் முடிவுகள் கடந்த 11ந்தேதி வெளியானது.

இதில் 52 சதவீதம் மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி
அடைந்துள்ளார். இதனை அடுத்து வெளிநபர் தேர்வாளராக
அவர் 10ம் வகுப்பு வாரிய தேர்வினை எழுதுகிறார்.

இந்த தேர்வை எழுதுவதற்கு குறைந்தபட்ச வயது தகுதி
14 ஆகும். கடந்த 1990ம் ஆண்டு தொடக்கத்தில் வெளிநபர்
தேர்வாளர் ஒருவர் குறைந்தபட்ச வயதுக்கு முன் தேர்வு
எழுதினார்.

இந்த நிலையில், கடந்த 20 வருடங்களுக்கு பின்னர்
12 வயது நிறைந்த சிறுமி கதூன் இந்த தேர்வை எழுத தகுதி
பெற்றுள்ளார்.

——————————–
தினத்தந்தி

ஸ்மார்ட் டிவி

மொபைல் நிறுவனங்கள் எல்லாம் ஸ்மார்ட் டிவி
தயாரிப்பில் இறங்கி அடிக்கும் காலம் இது.

தன் பங்குக்கு ‘மைக்ரோமேக்ஸ்’ நிறுவனமும்
40 இன்ச் ஸ்மார்ட் டிவியை சந்தையில்
அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபுல் ஹெச்டி டிஸ்பிளே, 2 யூஎஸ்பி போர்ட்ஸ்,
வைஃபை வசதி என கம்ப்யூட்டரைப் போல இந்த
டிவியை நாம் பயன்படுத்த முடியும்.

ஸ்மார்ட் போனை டிவியில் கனெக்ட் செய்து
கொண்டு ஃபேஸ்புக்கில் பிடித்தமான தோழிக்கு
ஹார்ட்டின்களை வீசியடிக்கலாம்.

யூடியூப்பில் வீடியோக்களைப் பார்க்கலாம்.
விலை ரூ.18,499.

——————————–
– குங்குமம் டீம்

#Metoo

‘‘இந்தியாவில் வேலை செய்யும் இடங்களில் பெண்களின்
மீதான பாலியல் துன்புறுத்தல் 54% அதிகரித்திருக்கிறது…’’
என்று அதிர்ச்சியளிக்கிறது மத்திய அரசின் புள்ளிவிவரம்.

இந்தியா முழுவதும் பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமாக
2014ல் 371 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2017ல் 570 வழக்குகள். ஆனால், 2018ன் முதல் ஏழு மாதங்களில்
மட்டும் 2535 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தில்லியில் மட்டுமே 369 வழக்குகள் பதிவாகியுள்ளது
குறிப்பிடத்தக்கது. ‘Metoo’ இயக்கம் சூடுபிடித்திருப்பதால்
இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.

பாலியல் துன்புறுத்தல் புகார்களைத் தெரிவிக்க பெண்கள்
மற்றும் குழந்தைகளுக்கான அமைச்சகஅமைப்பு
‘Shebox’ எனும் ஆன்லைன் வசதியையும் செய்திருக்கிறது.

——————————————–

– குங்குமம் டீம்

வடகிழக்கு மாநிலங்களுக்கு தனி டைம்!

இருவகை கடிகார நேரங்களை இந்தியா பயன்படுத்தலாம்
என சிஎஸ்ஐஆர் தேசிய இயற்பியல் ஆய்வக விஞ்ஞானிகள்,
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு
பரிந்துரை செய்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் சூரிய உதயம் முன்னமே
வந்துவிடுவதால் நேரநிலையை மாற்றியமைத்தால்
அவர்களுக்கு உதவும் என கடந்தாண்டு மார்ச்சில்
பதிவான பொதுநல மனுவை கவுகாத்தி உயர்நீதிமன்றம்
தள்ளுபடி செய்துவிட்டது.

இப்போது ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ள
IST-I (UTC + 5.30 h) and IST-II (UTC + 6.30 h)
நேரமுறை சூரிய உதயம், அஸ்தமனத்தை பொருத்தது,
மின்சார சிக்கனம், ரயில்வே விபத்துகளையும் குறைக்கும்
எனக் கூறியுள்ளனர்.

“வடகிழக்கு மாநிலங்களில் முன்னமே சூரிய உதயம்
ஏற்படுவதால் இப்போதைய நேரமுறைப்படி சில
மணிநேரங்களை இழப்பதோடு பனிக்காலங்களில்
அதிக மின்சாரம் இழப்பாகிறது.

தீர்ப்பு அரசின் கையில்தான் உள்ளது…” என்கிறார்
தேசிய இயற்பியல் ஆய்வக தலைவர் டாக்டர்
டி.கே. அஸ்வால்.

——————————
நன்றி-குங்குமம்

மொழி பெயர்ப்பு கோளாறு!

வனவிலங்குகளுக்கு உணவுப்பொருட்கள் வாங்கும்
ஏல விளம்பரக் குளறுபடியால், கடுமையான
விமர்சனங்களை மும்பை மாநகராட்சி எதிர்கொண்டு
வருகிறது.

மும்பையில் கடந்த 2015ம் ஆண்டு மாட்டிறைச்சி விற்பதும்
உண்பதும் சட்டவிரோதமாக்கப்பட்டு ரூ.10 ஆயிரம்
அபராதம் ப்ளஸ் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை என
அறிவிக்கப்பட்டது.

அதேநேரம் எருமை இறைச்சி விற்பனை தடையின்றி
அனுமதிக்கப்பட்டது. மாநகராட்சி பைகுல்லா வனவிலங்கு
பூங்காவுக்கு உணவுப்பொருட்களை பெறுவதற்கான
ஏல அறிவிப்பை பல்வேறு மொழிகளில் வெளியிட்டது.

அதில் புலி, கழுதைப் புலிகளுக்கான எருமை இறைச்சி
என்பதை மராத்தி, குஜராத்தி, இந்தி, ஆங்கிலப்
பத்திரிகைகளில் வெளியிடும்போது, குஜராத்தி, ஆங்கில
விளம்பரங்களில் பசு இறைச்சி என மாறி அச்சிட்டு
வெளியாக பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

விளம்பரம் பற்றி புகார்கள் குவிய, மாநகராட்சி கமிஷனர்
அஜய் மேத்தாவுக்கு பிஎம்சி பாஜக உறுப்பினரான
மனோஜ் கோடக், விளம்பரத்தை தடை செய்யவும்,
நேர்ந்த பிழையை ஆராய வற்புறுத்தியும் கடிதம்
எழுதியுள்ளார்.

————————————–
குங்குமம்

சென்னை: தீபாவளிக்கு ஆறு இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கம்

சென்னை:
தீபாவளி நெரிசலை தவிர்க்கும விதமாக சென்னையில்
இருந்து ஆறு இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட
உள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது:

மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு
பஸ்கள் இயக்கப்படுகிறது.

தாம்பரம் பஸ்நிலையத்தில் இருந்து கும்பகோணம் ,
தஞ்சை மற்றும் அதை தாண்டிய ஊர்களுக்கு இயக்கப்படுகிறது.

கோயம்பேட்டில் இருந்து திருச்சி வேளாங்கண்ணி,
மதுரை நெல்லை, செங்கோட்டை, பண்ருட்டி ,விழுப்புரம் ,
சேலம், கோவை, பெங்களூரு, எர்ணாகுளத்திற்கு இயக்கப்
படுகிறது.

பூந்தமல்லி பஸ்நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் ஆரணி,
ஆற்காடு வேலூர், தருமபுரி ,ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,
பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

கே.கே.நகர் பணி மனையில் இருந்து புதுச்சேரி, கடலூர்,
சிதம்பரம் பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை
பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

ஆம்னி பஸ்கள்

கோயம்பேடு மார்க்கெட் E சாலையில் இருந்து இயக்கப்படும்.
மதுரவாயல் பறவழிச்சாலை, 100 அடி சாலையில் இருந்து
வடபழனி நோக்கி செல்ல ஆம்னி பஸ்களுக்கு தடை
விதிக்கப்படுகிறது.

——————————————
தினமலர்

வருகிறது டைட்டானிக்-2 கப்பல்: அதே பாதை, அதே பயணம், அதே தோற்றம்

டைட்டானிக் கப்பலின் தோற்றம்
————————————-

அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைப்
போன்று அதே உருவத்தில் டைட்டானிக்-2 உருவாக்கப்பட்டு
வருகிறது. டைட்டானிக்-1 கப்பல் பயணித்த அதே பாதையில்
டைட்டானிக் 2 கப்பல் வரும் 2022-ம் ஆண்டு தன் பயணத்தைத்
தொடங்க உள்ளது.

கடந்த 1915-ம் ஆண்டு, ஏப்ரல் 10-ம் தேதி இங்கிலாந்தின்
சவுத்தாம்டன் நகரில் இருந்து நியூயார்க் நகருக்கு டைட்டானிக்
கப்பல் புறப்பட்டது. ஆனால், கப்பல் புறப்பட்ட 5 நாட்களில்
ஏப்ரல் 15-ம் தேதி அட்லாண்டிக் கடற்பகுதியில் பயணித்த
போது, பனிமலையில் மோதி கப்பல் மூழ்கியது.

இந்தக் கப்பலில் பயணித்த 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட
பயணிகளில் 1500 பேர் இறந்துவிட்டாகக் கூறப்படுகிறது.

இந்த டைட்டானிக் கப்பல் பயணத்தைத் தழுவி எடுக்கப்பட்ட
ஹாலிவுட் திரைப்படமான டைட்டானிக் உலக அளவில்
வசூலை வாரிக் குவித்தது.

இந்நிலையில் கடலில் மூழ்கிய டைட்டானிக்-1 கப்பலைக்
போன்று டைட்டானிக்-2 கப்பல் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கப்பல் டைட்டானிக்-1 கப்பல் பயணித்த அதே
பாதையில் தனது பயணத்தை 2022-ம் ஆண்டில் தொடங்க
திட்டமிடப்பட்டுள்ளது.


1912-ம் ஆண்டு சவுத்தாம்டனில் இருந்து நியூயார்க் நகரம்
புறப்பட்ட டைட்டானிக் கப்பல்: கோப்புப்படம்
——————————–

இந்த டைட்டானிக்-2 கப்பலை ப்ளூ ஸ்டார் லைன் நிறுவனம்
தயாரித்து வருகிறது. சீனாவில் நிர்மாணிக்கப்பட்டுவரும்
இந்த கப்பல் 2022-ம் ஆண்டு அங்கிருந்து புறப்பட்டு
சவுத்தாம்டன் நகரம் வந்து அங்கிருந்து நியூயார்க் புறப்பட
உள்ளது.

இந்த டைட்டானிக்-2 கப்பல் குறித்து ப்ளூஸ்டார் நிறுவனத்தின்
தலைவர், தொழிலதிபர் கிளிப் பால்மர் கூறியதாவது:

”டைட்டானிக்-1 கப்பல் தனது பயணத்தைத் தொடங்கிய
சில நாட்களிலேயே அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.
நாங்கள் அதை டைட்டானிக் கப்பல் போன்று டைட்டானிக்-2
கப்பலை உருவாக்கி வருகிறோம்.

டைட்டானிக்-1 கப்பலில் இருந்த அதே தோற்றம், உள்ளரங்கு
வடிவமைப்பு, அறைகள், ஓவியங்கள் அனைத்தும் அதே
தோற்றத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஆனால், டைட்டானிக்-1 கப்பலில் இல்லாத பாதுகாப்பு
அம்சங்கள், நவீன தொழில்நுட்பங்கள் இந்தக் கப்பலில்
இருக்கும்.

டைட்டானிக்-2 கப்பலில் ஏறக்குறைய 2400 பயணிகள்,
900 கப்பல் பணியாளர்கள் பயணிக்கலாம். 2018-ம் ஆண்டு
இந்தக் கப்பலை வெள்ளோட்டம் பார்க்க முதலில் திட்டமிட்டு
இருந்தோம். ஆனால், நிதிப் பிரச்சினை காரணமாகக் கப்பல்
கட்டுமானம் கால தாமதமானது.

இந்தக் கப்பல் கட்டிமுடிக்கப்பட்டதும், முதலாவது
டைட்டானிக் கப்பல் பயணித்த அதே பாதையான,
சவுத்தாம்டன் முதல் நியூயார்க் வரை பயணிக்க உள்ளது.

இந்தக் கப்பல் கட்டுமானத்தின் ஒட்டுமொத்த செலவு
50 கோடி டாலர்(ரூ.3,658 கோடி). முதலாவது டைட்டானிக்
கப்பலில் பயணித்த அதே அனுபவம், 21 நூற்றாண்டுக்கான
பாதுகாப்பு அம்சங்கள், சொகுசு வசதிகள் இதில் இருக்கும்”.

இவ்வாறு பால்மர் தெரிவித்தார்.

—————————–
தி இந்து

வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவை கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்

butterfly

சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல்
பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வண்ணத்துப் பூச்சி பூங்காவை
பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை
திறக்கப்பட்டது.

இதனை ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள் என பலரும்
ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2.7 ஹெக்டேர்
பரப்பளவில் அமைக்கப்பட்ட வண்ணத்துப் பூச்சி பூங்கா
கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து
வைக்கப்பட்டது.

இப்பூங்காவில் 200 வகையான தாவரங்கள் நடப்பட்டு
பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், 40 வகையான
வண்ணத்துப் பூச்சி இனங்கள் வருகை புரிந்துள்ளது
கணக்கெடுப்பில் தெரியவந்தது.

குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டும் இந்த வண்ணத்துப்
பூச்சிகள் வருகின்றன.

கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட
வர்தா புயலால் வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் இல்லம்
முற்றிலும் சேதமடைந்தது.

இதையடுத்து மீண்டும் வண்ணத்துப்பூச்சி பூங்காவை
சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன.
கடந்த 2 மாதமாக இப்பகுதி மூடப்பட்டு, பணிகள் துரிதமாக
மேற்கொள்ளப்பட்டன.

தற்போது பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்த
நிலையில், பூங்காவுக்குள் புதிய செடிகள் நடப்பட்டு
உள்அரங்கமும் சீரமைக்கப்பட்டது.

இதனால் வண்ணத்துப் பூச்சிகள் இப்பகுதிக்கு மீண்டும்
வரத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் பொதுமக்கள்
இப் பூங்காவை பார்வையிட ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை
(அக். 21) திறக்கப்பட்டது.

புதுப்பொலிவுடன் கூடிய இப்பூங்காவை சுற்றுலாப் பயணிகள்
ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாகக்
காணப்பட்டது.

————————————
தினமணி

« Older entries Newer entries »