2,400 ஆண்டுகள் முந்தைய கிரேக்க கப்பல் கண்டுபிடிப்பு!

2,400 ஆண்டுகள் முந்தைய கிரேக்க கப்பல் கண்டுபிடிப்பு!

உலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல்
பகுதியில் தொல்லியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி
ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் கப்பல் 2,400 ஆண்டுகளுக்கும்
முந்தையது என, ‘கார்பன் டேட்டிங்’ சோதனையில் தெரிய
வந்துள்ளது.

கி.மு., 400ம் நுாற்றாண்டைச் சேர்ந்த அந்தக் கப்பல், கிரேக்க
நாட்டு வாணிபக் கப்பல் என, தொல்லியலாளர்கள் உறுதி
செய்துள்ளனர். கடலுக்கடியில் அத்தனை ஆழத்தில் ஆக்சிஜன்
இருக்காது என்பதால், 23 மீ., நீளமுள்ள அந்தக் கப்பல், விபத்தில்
உடைந்து மூழ்கியிருந்தாலும், அதன் பகுதிகளும் அதிலுள்ள
பல பொருட்களும் சிதையாமல் அப்படியே உள்ளன.

தொலைவியக்க முறையில் நீர்மூழ்கி கருவிகளை அனுப்பி,
கப்பலை முப்பரிமாண முறையில் படமெடுத்து ஆராய்ந்து
வருகின்றனர் தொல்லியலாளர்கள்.

——————————————
தினமலர்

செல்போன் செயலி மூலம் ரயில் டிக்கெட் :இன்று முதல் அமல்

புதுடில்லி:
செல்போன் செயலி மூலம் ரயிலில் டிக்கெட் எடுக்கும் முறை
இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது utp app மூலம்
இனி எங்கிருந்தாலும் ரயில் பயணம் செய்ய இன்று முதல்
பயணச்சீட்டு எடுக்க முடியும்.

இதுவரையில் ரயில் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட
தூரத்தில் இருந்தால் மட்டுமே மொபைல் ஆப்பில் டிக்கெட்
எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.

—————————–
தினமலர்

நீட் தேர்வு: பதிவு நாளை துவக்கம்!

அக்டோபர் 31,2018,
—————
நீட் தேர்வு: பதிவு நாளை துவக்கம்!
—————————-

சென்னை,
பிளஸ் 2 மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான,
நீட் நுழைவு தேர்வுக்கான, ஆன்லைன் பதிவு, நாளை
துவங்குகிறது.

பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., –
பி.டி.எஸ்., மற்றும் இந்திய மருத்துவ படிப்பில் சேர்வதற்கு,
நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த நுழைவு தேர்வை,
மருத்துவ கவுன்சில் சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான,
சி.பி.எஸ்.இ., நடத்தி வந்தது.

ஆனால், பல்வேறு பிரச்னைகள் மற்றும் புகார்கள் காரணமாக,
தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ.,விடம், தேர்வு நடத்தும்
பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

என்.டி.ஏ., சார்பில், நீட் தேர்வுக்கான அட்டவணை, செப்., மாதமே
அறிவிக்கப்பட்டது.2019 மே, 5ல் நாடு முழுவதும், நீட் தேர்வு நடக்க
உள்ளது. தேர்வின் முடிவுகள், ஜூன், 5ல் வெளியாகும் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை, தமிழ் உள்பட, 10க்கும் மேற்பட்ட மாநில மொழிகளில்,
வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு,
நாளை துவங்க உள்ளது. என்.டி.ஏ.,வின்,www.nta.ac.inஎன்ற
இணையதளத்தில், நவ., 30ம் தேதி வரை, மாணவர்களின் விபரங்களை
பதிவு செய்யலாம். நாடுமுழுவதும், 2,697 பள்ளிகளில், தேர்வு உதவி
மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு எழுதுவதற்கு, &’ஆதார்&’ கட்டாயம் இல்லை என,
அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், நீட் தேர்வு குறித்து,
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்
பிரகாஷ் ஜாவடேகர், சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், &’இந்த
ஆண்டும், தமிழ் வழியில் வினாத்தாள் தயாரிக்கப்படும்.

ஆனால், தமிழ் உள்ளிட்ட மாநில மொழி வினாத்தாள்களில்,
மொழிமாற்றம் உள்ளிட்ட பிழைகள் இருந்தால், ஆங்கிலத்தில்
உள்ள வினாத்தாளின் அடிப்படையிலேயே பதில் எழுத வேண்டும்.
அதன் அடிப்படையிலேயே திருத்தம் செய்யப்படும்&’ என,
தெரிவித்துள்ளார்.

—————————————–
தினமலர்

மெட்ரோ ரயில் நேரம் தீபாவளிக்கு நீட்டிப்பு

சென்னை:
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை மெட்ரோ ரயில்
இயக்க நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.சென்னையில்,
விமான நிலையம் மற்றும் பரங்கிமலையில் இருந்து,
சென்ட்ரல் வரையும்; விமான நிலையத்தில் இருந்து,
தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வரையும் மெட்ரோ ரயில்
இயக்கப்படுகிறது.

இந்த ரயில்களில், தீபாவாளி பண்டிகையையொட்டி,
பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது. மெட்ரோ ரயில்கள்
வழக்கமாக இரவு, 10:30 மணி வரை இயக்கப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி, பயணியர் போக்குவரத்துக்கு
ஏதுவாக, நவ., 2, 3ம் தேதிகளில், மெட்ரோ ரயில்கள்
இரவு, 11:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என, நிர்வாகம்
தெரிவித்துள்ளது.

————————————
தினமலர்

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

ஆமதாபாத் :
குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள
, ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என அழைக்கப்படும்,
மறைந்த, சர்தார் வல்லபாய் படேலின், 597 அடி உருவ
சிலையை, பிரதமர், நரேந்திர மோடி, இன்று திறந்து
வைக்கிறார்.உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமை,
இதற்கு கிடைக்கவுள்ளது.குஜராத் மாநிலத்தை சேர்ந்த, சர்தார் வல்லபாய் படேல்,
சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும்,
உள்துறை அமைச்சராகவும் இருந்தார்.

காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும்
விளங்கினார்.பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து, நாடு
சுதந்திரம் பெற்றபின், 500க்கும் மேற்பட்ட
சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய
ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய படேல்,
‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என, அழைக்கப்படுகிறார்.

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது,
2013ல், நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில்,
சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி உயரத்தில்,
சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க திட்டமிடப்
பட்டது.

சிலை அமைக்கும் பணிகள், 2,300 கோடி ரூபாய் செலவில்
முழுமை பெற்றுள்ளன. இதையடுத்து, வல்லபாய் படேலின்
பிறந்த தினமான இன்று, அவரது சிலையை,
பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்;

இது, ‘ஒற்றுமை சிலை’ என, அழைக்கப்படுகிறது.
சிலை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை, குஜராத் மாநில
அரசு செய்துள்ளது.

தற்போது, உலகின் மிக உயரமான சிலையாக,
சீனாவில் உள்ள, 420 அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது.

———————————————
தினமலர்


காதலுக்காக பட்டத்தை துறந்து சாமானியரை மணந்த இளவரசி


டோக்கியோ,
காதலுக்காக, இளவரசி பட்டத்தை துறந்து, சாமானியர்
ஒருவரை, ஜப்பான் இளவரசி, அயகோ, திருமணம் செய்தார்

.கிழக்கு ஆசிய நாடான, ஜப்பானின் இளவரசர்
நருஹிட்டோவின் உறவினர் மகள், இளவரசி அயகோ, 28.

இவர், 2013ல், டோக்கியோ பல்கலைக்கழகத்தில் படித்த
போது, அங்கு சட்ட ஆலோசகராக பணியாற்றிய,
கெய் மோரியா, 32, என்பவரை காதலித்தார்.
இவர், தற்போது, போக்குவரத்துத் துறையில் பணியாற்றி
வருகிறார்.

இவர்களது காதலுக்கு, இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டிய
நிலையில், அயகோ- – கெய் மோரியாவின் திருமணம் குறித்த
அதிகாரபூர்வ அறிவிப்பு, சமீபத்தில் வெளியானது.

அத்துடன், நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால்,
சில காரணங்களுக்காக, இவர்களது திருமணம், 2020க்கு
ஒத்தி வைக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின.

ஜப்பான் சட்டத்தைப் பொறுத்தவரை, அரச குடும்பத்தைச்
சேர்ந்த பெண்கள், சாமானியர்களை மணந்தால், அவர்கள்,
அரச குடும்பத்திலிருந்து வெளியேற வேண்டும்.

இதன்படி, காதலுக்காக, இளவரசி பட்டத்தை துறக்க,
அயகோ முன்வந்தார். இந்நிலையில் நேற்று, தலைநகர்
டோக்கியோவில் உள்ள, மெய்ஜி ஷெரின் நகரத்தில்,
அயகோ – மெய் மோரியாவின் திருமணம் எளிய முறையில்
நடந்தது.

இதில், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர்
பங்கேற்றனர்.

———————————–
தினமலர்

ஏ.டி.எம்.மில் இனி ரூ.20 ஆயிரம் தான் எடுக்கலாம்: இன்று முதல் எஸ்.பி.ஐ., கட்டுப்பாடு

புதுடில்லி:

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம்,
20 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே இனி எடுக்கும்
புதிய நடைமுறை, இன்று (அக்.31-ம் தேதி) முதல்
அமலாகிறது.

அதன்படி, ஒரு சில வகை ஏடிஎம் அட்டைகளுக்கான
தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு
ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக குறைக்கப்
பட்டுள்ளது.

இந்த உத்தரவு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

டிஜிட்டல் பணபரிவர்த்தனை அதிகரிக்க

இது குறித்து எஸ்.பி.ஐ கூறியுள்ளதாவது: .

மின்னணுப் பரிமாற்றம், பணமில்லா வணிக நடவடிக்கை,
ஏ.டி.எம்.,களில் நடைபெறும் மோசடி பணபரிவர்த்தனையை
தடுக்கும் பொருட்டும், டிஜிட்டல், பணமில்லா
பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த
நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.

—————————————
தினமலர்

கடைக்காரர் கவனம்…!

IMG_1920.jpg

 

பொதிகைசாரல்-அக்டோபர் 2018

நூதன திருட்டு

zx.jpg

பொதிகைசாரல்-அக்டோபர் 2018

2019-ம் ஆண்டில் 23 அரசு விடுமுறை நாட்கள்: தமிழக அரசு அரசாணை …

d86c96b5-c85a-498d-bf9a-95763ee281d8.jpg

« Older entries Newer entries »