புண்ணிய பாரதப் பயிரை பேணிக்காத்து வளர்ப்போம்!


புதிய பரிமாணங்களை பூமியில்
பதிய வைத்துள்ள ஏசுவின்
புனிதம் பாதை தொடர்வோம்…

பசுமைகளே நெஞ்சில் ஆழமாய்
பாயவிட்ட இறைத்தூதர் நபியின்
பாடங்களை கடைப்பிடிப்போம்…

பரந்து வளர்ந்த நம்
புண்ணிய பூமியில் வாழ்ந்த
புனிதர்கள் வழி நடப்போம்…

போராடிப் பெற்ற நம்
புண்ணிய பாரதப் பயிரை தீப நாள் முதல்
பேணிக்காத்து வளர்ப்போம்!

————————–
கருவை வேணு
-பாக்யா

தாத்தாவின் கோபம் – அழ.வள்ளியப்பா

sm9
காசிக்குத் தாத்தாவும் சென்று வந்தார் – உடன்
களிப்போடு பிள்ளைகள் சூழ்ந்து கொண்டார்.
ஆசையாக் கூடிப் பேசுகையில் – அங்கே
ஆனந்தன் தாத்தாவைக் கேட்கலுற்றான்.

“அத்தையும் காசிக்குச் சென்று வந்தாள் – இனி
அவரைக்காய் தின்பதே இல்லையென்றாள்.
சித்தப்பா காசிக்குச் சென்று வந்தார் – இனி
சிகரெட் பிடிப்பதே இல்லையென்றார்.

பாட்டியும் காசிக்குச் சென்று வந்தாள் – இனி
பாகற்காய் தின்பதே இல்லையென்றாள்.
சீட்டாடும் பழக்கத்தை விட்டே னென்றார் – காசி
சென்று திரும்பிய மாமாவுமே.

இப்படிக் காசிக்குச் சென்றோரெல்லாம் – அங்கே
ஏதேனும் ஒன்றினை விட்டு வந்தார்.
அப்படி நீயும் விட்டதென்ன? தாத்தா
அவசியம் கூறிட வேண்டு” மென்றான்.

“கோபக்காரன் என்றே ஊரிலுள்ளோர் – என்னைக்
கூறிடுவாரன்றோ? ஆதலினால்
கோபத்தைக் காசியில் விட்டு வந்தேன்” – என்றே
கூறினார் மறுமொழி தாத்தாவுமே.

கண்ணனும் உடனேயே, “”தாத்தா, தாத்தா நீயும்
காசியில் விட்டதும் என்ன?” என்றான்.
“இந்நேரம் கோபத்தை விட்டதாய்ச் சொன்னேனே…
எங்கே கவனமோ? ” என்றுரைத்தார்.

முரளியும், “”தாத்தா நீ விட்டதென்ன?” – என்றே
மீண்டும் ஒரமுறை கேட்டிடவே
திரும்பவும் “”கோபத்தை விட்டே” னென்றே – தாத்தா
செப்பினர் முரளியும் “ஓகோ” என்றான்.

அருணனும் கோபுவும் அழகப்பனும் – இன்னும்
அலமுவும் கீதா காவேரியுமே
திரும்பத் திரும்ப இக்கேள்விதனைக் – கேட்கச்
சீறி எழுந்தனர் தாத்தாவுமே!

“வேலையற்ற வெட்டிப் பிள்ளைகளா – என்ன
வேடிக்கையா இங்கே காட்டுகின்றீர்?
தோலை உரித்தே எடுத்திடுவேன்” என்று சொல்லியே
கையில் தடி எடுத்தார்!

“கோபத்தைக் காசியில் விட்டே னென்றார் – இதோ
குண்டாந்தடியுடன் வந்ததடா!
ஆபத்து! ஆபத்து ” என்றே சொல்லி – உடன்
அனைவரும் ஓட்டம் பிடித்தனரே!

———————————–
– அழ. வள்ளியப்பா
சிறுவர் மணி

உலகம் போற்ற வாழ்ந்திடு…!

IMG_20181112_225725-1.jpg

வான்மழையே! வா மழையே

s7
வான்மழையே! வான்மழையே!
வா மழையே! வா மழையே!
நானுன்னை அழைத்தேனே
நல்லுதவி கேட்டிடவே!

உன்வரவு இல்லாம
ஊரெல்லாம் காய்ஞ்சிடுச்சே!
பொன்விளையும் பூமியிலே
புல்கூட முளைக்கலியே!

ஆறுகுளம் வறண்டிடுச்சே
அடையாளம் இழந்திடுச்சே!
சோறு தந்த சோழநாடு
சோகத்தில் மூழ்கிடுச்சே!

ஏரிகுளம் குட்டையெல்லாம்
எழுப்பிவிட்டோம் மாளிகையை!
மாரிமழை இல்லையின்னு
மனசுவிட்டுப் புலம்புறோமே!

நட்டுநட்டு வளர்த்தமரம்
நாள்பலவாய் வாழ்ந்தமரம்
வெட்டிவெட்டிச் சாய்த்துவிட்டு
வேதனையில் வாடுறோமே!

தப்பு நாங்க செஞ்சுபுட்டோம்
தாமதமா உணர்ந்துபுட்டோம்!
எப்பவுமே உன் தயவு
எங்களுக்கு வேணுமிங்கே!

ஊரெல்லாம் மரம்நட்டு
உனக்காகக் காத்திருக்கோம்!
நீர்நிலைகள் தூர்வாரி
நின்வரவைப் பார்த்திருக்கோம்!

நீரின்றிக் காய்ந்த நிலம்
நின்னாலே வளம் பெறவே
காரிருள்போல் மேகத்தைக்
கண்முன்னே காட்டிடுவாய்!

குடிப்பதற்கு நீர்தந்து
குடிகளை நீ காத்திடுவாய்!
படித்திருந்தும் தவறுசெய்த
பாவிகளை மன்னிப்பாய்!

நாவெல்லாம் வாழ்த்திடவே
நன்மழையே பெய்திடுவாய்!
பூவாலே பந்தலிட்டுப்
புகழ்பாடி வரவேற்போம்!

—————————
-நா.இராதாகிருட்டிணன், கடலூர்.
நன்றி-சிறுவர் மணி

எப்படி அம்மா பிடிப்பது?

IMG_1891.jpg

ஆத்தாடி காத்தாடி…!

IMG_1897.jpg

தீபாவளி – இனிய நாளம்மா – சிறுவர் பாடல்

IMG_2052.jpg

சுற்றுப்புற சுத்தம் – சிறுவர் பாடல்

IMG_1898.jpg

பள்ளிக்கு செல்வோம் – சிறுவர் பாடல்

IMG_1656.jpg

பள்ளிக்கு செல்வோம் – சிறுவர் பாடல்

IMG_1657.jpg

« Older entries