ஒரு கதை சொல்றேன், கேளுங்க!

NADODI_STORY

மகிழ்ச்சிபுரி என்ற ஊரை, வீராங்கன் என்ற மன்னன்
ஆண்டு வந்தான். அவனுக்கு மந்திரிகள், ஆலோசகர்கள்,
படைகள் என எல்லாம் உண்டு.

மனைவியர், மகிழ்ச்சியூட்ட விதூசகர்கள் எனவும் இருந்தனர்.

மந்திரிகள், ஆலோசகர்கள் மன்னர் வாயை திறக்கும் முன்
பதில் ரெடியாக வைத்திருப்பார்கள். அதேபோன்று
படையினரும், வெற்றி மேல் வெற்றியை கொண்டு வந்தனர்.

இவ்வளவு வசதிகள் இருந்தும் மன்னர் ஏனோ துக்கமாக
காட்சி தந்தார்.

இது ராணிக்கு பொறுக்கவில்லை. ‘மன்னனை, ஏதாவது
ஒரு சாமியாரிடம் அழைத்துச் சென்று,
அவர் ஆலோசனையை பெற்று, அதன்படி அவரை
மகிழ்விக்க ஏற்பாடு செய்யுங்கள்” என மந்திரியிடம்
கூறினார்.

மந்திரிக்கு, ஒரு புதுசாமியார். ஊருக்கு வெளியே
முகாமிட்டிருப்பது தெரியும்.
அவரிடம் மன்னரை அழைத்துச் சென்று, ஆலோசனை
பெறத் தீர்மானித்தார். மன்னரும் அதற்கு சம்மதித்தார்.

சாமியாரிடம், மன்னரும் மந்திரியும் சென்றனர்.

மன்னனின் துக்க மனதை கூறி, ‘அவரை மகிழ்விக்க
வேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்’ என்றார்
மந்திரி.

‘ஊரிலேயே மகிழ்ச்சியாய் இருப்பவனை கண்டு பிடித்து
அழைத்து வந்து காரணம் கேட்டு, அதனை மன்னரிடம்
கூறுங்கள். மனம் மாறிவிடுவார்” என்றார் சாமியார்.

இதனால் அடுத்த நாளிலிருந்து மகிழ்ச்சியோடு இருப்பவனை
தேடி அலைந்தது மன்னரின் படை.

மகிழ்ச்சியாய் இருப்பதாக தெரிந்து அருகில் நெருங்கினால்,
என் கவலைகளை மறக்க சிரிக்கிறேன். மற்றபடி
மகிழ்ச்சியாக இல்லை எனக் கூறி நழுவி விடுவர் பலர்.

இந்த நிலையில் ஒரு குளத்தில் தண்ணீரில் எருமை மாட்டின்
மீது அமர்ந்து ஒருவன் பாடிக் கொண்டிருந்தான்.
அவன் மகிழ்ச்சியில் இருந்தான்.

இதனால் மந்திரியின் ஆலோசகர் அவனை நெருங்கி,
‘மகிழ்ச்சியாக இருக்கிறாயே.. எப்படி?’ எனக் கேட்டார்.

‘என்னிடம் இருப்பது இந்த ஒரு எருமை மாடுதான்.
இதற்கு தீவனம் வைக்கிறேன்.

நன்றாக பால் கறக்கிறது. தினமும் குளிப்பாட்டி,
நானும் குளிப்பேன்’ என்றான்.

‘இதில் எப்படி மகிழ்ச்சி வந்தது?’

‘இது பால் கறப்பதால் விற்பனை செய்து பணம்
சம்பாதிக்கிறேன். அதுவே எனக்கு போதும், அதனால்
இந்த வருமானம் போதுமென்று நினைத்து
மகிழ்ச்சியாக இருக்கிறேன்’

‘ஆக , போதுமென்ற மனமே மகிழ்ச்சியை தரும் என்கிறாய்’

‘நிச்சயம். போதும் என எண்ணுபவர்களுக்கு துக்கமில்லை’

‘நல்லது’ என்று விடை பெற்ற மந்திரியின் ஆலோசகர்.

அடுத்தநாள், அவனை மன்னரிடம் அழைத்துச் சென்றார்.

மன்னர், வந்தவனிடம் பேசினார்.

‘நீ ஏன் மாடு மேய்த்து கஷ்டப்படுகிறாய், என் மகளை த
ருகிறேன். பொன்னும், பொருளும் தருகிறேன். அதை வைத்து
நிம்மதியாக வாழ்வாயாக’ என்றார்.

‘மன்னிக்கணும் மாட்டை மேய்ப்பதை விட, மனைவியை
மேய்ப்பது கஷ்டம்’

‘சுகமாக வைத்துக் கொள்ள கஷ்டம் என்றுதானே
கூறுகிறாய். மேலும், 10000 பொற்காசுகள் தருகிறேன்.

மேலும் பல எருமை மாடுகளை வாங்கி பண்ணை போல்
நடத்தேன்’

‘அதையெல்லாம் நான் உங்களிடம் கேட்கவில்லை’

‘பிறகு நீ என்னதான் விரும்புகிறாய்’

‘மன்னருக்கு, நாடுகள், சொத்துகள் ஆசையால் திருப்தி
இருக்காது. அதனால்…’

‘அதனால்…’

‘என்னைப் போல், இருப்பதே போதும் என வாழ வேண்டும்’

‘வாழ்ந்தால்’

‘உங்கள் துக்கம் மறைந்து மகிழ்ச்சி தாண்டவமாடும்’

‘நான் அப்படி நடப்பதால் உனக்கு என்ன மகிழ்ச்சி’

‘மன்னர் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாட்டு மக்கள்
மகிழ்ச்சியாக இருக்க முடியும்’

‘ஆக, நாங்கள் மகிழ்ச்சியாக கிடைத்த வாழ்வை,
நிம்மதியாக தொடர…’

‘தொடர…’

‘மன்னரும் போதுமென்ற மனநிலையுடன் வாழ வேண்டும்’

‘சபாஷ், என்னை சுற்றி இருப்பவர்கள் நான் கூறுவதற்கு
எல்லாம் ஆமாம் போடுபவர்கள். ஆனால் நீ, நான் கொடுத்த
எதையும் மறுத்து, இருப்பதே போதும் என்பதுடன்
என்னையும் மாற்றிவிட்டாய்’ என முடித்தார் மன்னர்.

ராணியோ, மன்னனின் மனதை மாற்றியதற்கு நன்றியாக,
மணிமாலையை எடுத்து, எருமை சொந்தக்காரனிடம்
கொடுத்து, ‘இதை என் அன்பளிப்பாக, உன் மனைவியிடம்
கொடு’ என்றார்.

எருமை சொந்தக்காரனும், தப்பித்தோம். பிழைத்தோம்
என ஒட்டமும், நடையுமாய் அரண்மனையை விட்டு
வெளியேறினான்.

————————————-
– ராஜிராதா
தினமணி

எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்!

19.jpg

இப்படி ஒரு விருந்தை வாழ்நாளில் அவர் சாப்பிட்டதில்லை.
அந்த நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெறும்
தலைமை மேலாளருக்காக முதலாளி கொடுத்த விருந்து அது.

மேனேஜர் முதல் கடைநிலை ஊழியர் வரை எந்தப்
பாகுபாடும் பார்க்காமல், எல்லோரையும் நட்சத்திர
ஹோட்டலுக்கு வரவழைத்து உபசரித்தார்கள்.

விதம்விதமாகப் பரிமாறியபோது, தனது வயிறு சிறியதாக
இருப்பதை நினைத்து முதல்முறையாகக் கவலைப்பட்டார்
அவர்.

ஆனால் ஸ்பூனும் முள்கரண்டியும் வைத்து சாப்பிடுவதில்
சற்றே சங்கடமாகி விட்டார். மீனையும் மட்டனையும்
எப்படி முள்கரண்டியால் சாப்பிடுவது?

சுற்றிலும் இருந்த உயர் அதிகாரிகள் எப்படி
சாப்பிடுகிறார்கள் என்பதை கவனித்தார். அதேபோல
காப்பியடித்து முயற்சித்தார்.

ஒரு அளவுக்கு மேல் முடியவில்லை. அதிலும் அந்த மட்டன்
எலும்புகள். நண்பர்கள் வீட்டு பிரியாணி விருந்துகளில்
கூட ஒன்றிரண்டுக்கு மேல் இலையில் வந்து விழாது.
இங்கே நிறைய இருந்தது.

எலும்பைக் கடித்து உள்ளே இருக்கும் கறியை உறிஞ்சுவது
அவருக்கு மிகவும் பிடிக்கும். இங்கே அது நாகரிகமாக
இருக்காதே!

அவரது சங்கட முகத்தைப் பார்த்து ஹோட்டல் பணியாளர்
ஒருவர் அருகே வந்தார். ‘‘என் வீட்டு நாய்க்கு எலும்புகளைக்
கடிப்பது மிகவும் பிடிக்கும்’’ என்றார் இவர்.

உண்மையில் அவர் நாய் வளர்ப்பதில்லை.
‘‘அதனால் என்ன? பார்சல் செய்து தருகிறேன்’’ என
டேபிளில் இருந்த கிண்ணத்தை எடுத்துப் போனார்
பணியாளர்.

வீட்டுக்குப் போனதும் ஆசை தீரக் கடிக்க வேண்டும் என
நினைக்கும்போதே பார்சல் வந்தது. ஆனால் அது பெரிதாக
இருந்தது.

‘‘நாய்க்குதானே? அதான் சாப்பிட்ட தட்டுகளில் இருந்த
நிறைய எலும்புகளை சேர்த்துக் கட்டினேன்’’ என்றார்
பணியாளர்.

எங்கும் இயல்பைத் தொலைக்காதீர்கள்!

————–
நன்றி- குங்குமம்= கடைசி பக்கம்

புத்திசாலி மனைவி!

வீராச்சாமி என்ற ஏழை நெசவாளி இருந்தான்; அவன் மனைவி தனபாக்கியம் மிகுந்த அறிவாளி; அவள் பெருமையை ஊரார் தெரிந்து கொள்ள விரும்பினான். அதற்காக, பெரிய விளம்பர பலகையை உருவாக்கி வீட்டு வாசலில், அமைத்து, ‘என் மனைவி தான், உலகிலேயே அறிவிற் சிறந்தவள்; அவள் அறியாததே இல்லை’ என்று எழுதி வைத்தான்.

அந்த வழியாக, நகர்வலம் வந்த, அந்த நாட்டு மன்னர் விளம்பரத்தைப் பார்த்தார்; அவருக்கு எரிச்சல் ஏற்பட்டது.

அவைக்குச் சென்றவர், ஏவலர்களிடம், நெசவாளியை அழைத்து வரும்படி உத்தரவிட்டார். வீராச்சாமி வீட்டிற்கு, சேவர்கள் வந்து அவனை அழைத்தனர்.

நடு நடுங்கினான் வீராச்சாமி; அவன் மனைவி தைரியம் கூறினாள்.

”நீங்கள் மன்னரை சென்றுப் பாருங்கள்; மற்றவற்றை, நான் பார்த்துக் கொள்கிறேன்…” என்றாள்.

வீராச்சாமியை, மன்னர் முன் நிறுத்தினர்.

”உன் வீட்டின் முன் உள்ள, விளம்பரப் பலகையை பார்த்தேன்; உன் மனைவி, அறிவில் சிறந்தவள் தானே! நான், மூன்று சோதனைகள் வைக்கிறேன்; அவற்றில் வெற்றி பெற்றால், உன் மனைவி அறிவாளி என ஒப்புக் கொள்ளலாம்…” என்றார்.
”சொல்லுங்கள் மன்னா…” என்று, நடுக்கத்தை மறைத்து கேட்டான், வீராச்சாமி.

”நீ மிகச் சிறந்த நெசவாளி என்பதை அறிவேன்; நம் நாட்டு சாலைகள் முழுவதையும் மூடும் அளவிற்கு, துணி நெய்து தர வேண்டும்; நம் நாட்டு கடலில் உள்ள நீரளவுக்கு, பழச்சாறு தயாரித்து தர வேண்டும்; மூன்றாவதாக, ஒரு பன்றியை மலை போல் பெரிதாக்கி காட்ட வேண்டும்…” என்றார்.

‘திரு திரு’ என விழித்தான் வீராச்சாமி.

”என்ன… முழிக்கிறாய்… உன் மனைவி அதிபுத்திசாலி என்று பலகையில் எழுதி வைத்துள்ளாய், அப்புறம் என்ன…” என்றார் மன்னர்.

”நிச்சயமாக மன்னா…” என்று கூறி, தப்பித்தோம், பிழைத்தோம் என, வீடு வந்து சேர்ந்தான் வீராச்சாமி.

கணவரின் வெளிறிய முகம் கண்டு, விசாரித்தாள். விவரத்தைக் கூறினான்.

‘இவ்வளவுதானா…’ என்று, சில யோசனைகளை அவனுக்கு கூறினாள்.

மறுநாள் –

அரசவைக்கு, மனைவி கொடுத்த சில பொருட்களை எடுத்துச் சென்றான்; அவன் கையில், அளக்கும் தடி, ஒரு பாத்திரம், எடை போடும் தராசு ஆகியவை இருந்தன.

”மன்னா… நாட்டில் உள்ள சாலைகளின் நீளத்தை, இந்த அளவுத் தடியால் அளந்து சொல்லுங்கள்; கடல் தண்ணீரை எல்லாம் இந்த பாத்திரத்தால் அளந்து சொல்லுங்கள்; அந்த மலையை இந்த தராசால் எடை போட்டு சொல்லுங்கள்; நீங்கள் சரியான அளவுகளை கொடுத்தால், துல்லியமாக தயாரித்து வருவேன்…” என்றான்.

மன்னர் விழி பிதுங்கினார். வீராச்சாமியின் மனைவி தனபாக்கியத்தின் வேலை தான் இது என்பதை புரிந்து கொண்டார்.
அவள் புத்திசாலிதான் என்று ஒப்புக் கொண்ட மன்னர்; வீராச்சாமிக்கு ஏராளமான பரிசுகளை கொடுத்து அனுப்பினார்.

நன்றி: சிறுவர் மலர்

 

முள்! – சிறுவர் கதை

 

மன்னன் சங்கவரதன், துர்வபுரி என்ற நாட்டை ஆண்டு
வந்தான். கொடூர மனம் படைத்தவன்; சின்னச் சின்ன
தவறுகளுக்கும், மிகப்பெரிய தண்டனை கொடுப்பான்.
ஓய்வு நேரங்களில், தோட்டத்தில் உலாவுவான்.

ஒரு நாள் தோட்டத்தில் உலாவிய போது, காலில் முள்
குத்தி விட்டது. ‘ஆ…’ என்று அலறி துடித்தான். மருத்துவர்
சிகிச்சையளித்தார்; காயத்தில், மருந்து வைத்துக்
கட்டப்பட்டது.

மிகுந்த கோபம் அடைந்த மன்னன், தோட்டப்
பணியாளர்கள், அத்தனை பேருக்கும், தண்டனை
கொடுத்தான்.

ஒருவாரத்திற்குப் பின், மீண்டும் தோட்டத்திற்கு
சென்றவன், ”என் காலில் முள் குத்தினால், உடனே
துாக்கிலிடப்படுவீர்…” என, பணியாளர்களை எச்சரித்தான்.

அதனால், பணியாளர்கள், நடுக்கத்துடன் தோட்டப்
பாதைகளை சீர் செய்தனர்; ஆனாலும், மன்னன் காலில்,
முள் குத்தவே செய்தது.

அன்று, தோட்டப்பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட
பணியாளர்கள் அனைவரையும், மன்னன் கட்டளைப்படி
துாக்கிலிட்டனர். இது, தொடர் கதையானது. தோட்டத்தில்
துப்புரவு பணி செய்ய யாரும் முன் வரவில்லை;

சிலரை கட்டாயாமாக பணியில் ஈடுபட வைத்தனர்.
அவர்களும் தண்டனை பெற்றதால், அதிருப்தி அதிகமானது.

இதற்கு முடிவு கட்ட, மதிமந்திரியை சந்தித்து, மக்கள்
முறையிட்டனர். முறையான முடிவு எடுப்பது பற்றி சிந்தித்தார்,
மந்திரி.

அன்று, தோட்டத்திற்கு மன்னன் உலாவப் போனான்.

உடன் சென்ற மந்திரி, ”அரசரே… போர்க்களம் செல்லும்
போது, மார்புக்கும், உடலின் ஏனைய பாகங்களுக்கும் கவசம்
அணிந்து கொள்கிறோம் இல்லையா… அதுபோல, கால்களுக்கும்
கவசம் அணிந்து கொண்டால், முள்குத்தாது அல்லவா…” என்றார்.

மன்னன் யோசித்து, ”ஆம் அமைச்சரே… இதுபற்றி
சிந்திக்கவேயில்லையே…” என்றவன், உடனே தோலில் செருப்பு
செய்ய உத்தரவிட்டான்.

சில நாட்களிலேயே, மன்னனுக்கு செருப்பு தயாராகி விட்டது.
மதி மந்திரியால் உயிர் பிழைத்த பணியாளர்கள் நன்றி கூறினர்.

குட்டீஸ்… மந்திரியை போல சிறப்பாக சிந்தித்து,
கஷ்டப்படுறவங்களை காப்பாற்றணும். சரியா!

————————-
நன்றி- சிறுவர் மலர்

சுட்டது நெட்டளவு: சாமர்த்தியம்


ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சுக்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவுக்கு சிறந்த வீரன்.

அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்து கொண்டிருந்தான். அப்போது ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான். மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது எலி. மனம் உடைந்து போனான் இளவரசன்.

அப்போது அங்கு வந்த அரசர் “ஏன் சோகமாக இருக்கிறாய்?” எனக் கேட்க, “இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாதபோது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!” என்றான்.

மன்னர் சிரித்துவிட்டு “எலியைக் கொல்ல வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டுவந்தாலே போதுமே!” என்றார்.உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.

அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்துச் சென்றது. இப்போது இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். “என்ன அரசே.. நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அரசர் நடந்ததைக் கூறினார். அதற்கு, “நம் நாட்டு பூனைகள் எதற்கும் லாயக்கில்லை. ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலியளவு உயரம் கொண்டவை. எனவே அங்கிருந்து வரவழைப்போம்” என்றார் மந்திரி. உடனே அந்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக் கப்பட்டன.

ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. ‘எலிக்கு இவ்வளவு திறமையா!’ என அனைவரும் வியந்தனர். அப்போது அங்கே இருந்த அரண்மனைக் காவலன் “இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதற்கு? எங்கள் வீட்டுப் பூனையே போதும்” என்றான்.

மன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. “அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது, சாதாரண வீட்டுப் பூனையால் முடியுமா?” என்றார்.

இளவரசர் அவரை இடைமறித்து, “சரி… எடுத்து வா உனது பூனையை” என்றார்.

வீட்டுக்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் ‘லபக்’ என்று கவ்விச் சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம்.

ஜப்பான், பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது என்று வியந்தார். இதுபற்றி காவலனிடம் கேட்டார்.

அதற்குக் காவலாளி “என் பூனைக்கு பெரிதாக திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே… என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான்” என்றான்.

உடனே இளவரசருக்கு சுரீர் என்றுரைத்தது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்றால் என்னவெற்று தெரிய வாய்ப்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்க முடியும்?.

ஆக, எந்த ஒரு வேலையையும் வெற்றி கரமாகச் செய்து முடிக்க வேண்டுமென் றால், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும் என்பதை இளவரசர் தெரிந்து கொண்டார்.

————————-
எம்.விக்னேஷ்
தி இந்து நாளிதழ்

கெட்டவனுக்கும் நல்லது செய்!

இரண்டு திருடர்கள் ஒரு பெரியவரை வழிமறித்து,
அவரிடம்இருந்த பணத்தைக் கேட்டனர்.

பெரியவரிடம் பணம் ஏதும் இல்லை. “பணம் இல்லாமல்
ஏனடா வெளியே வந்தாய்?” என்று கேட்டு தகராறு
செய்தனர். அவரது கைகளை வெட்டி கிணற்றுக்குள்
போட்டு விட்டு போய்விட்டனர்.

அவ்வழியாக வந்த ஒருவன் தண்ணீர் குடிக்க கிணற்றுப்
பக்கம் வந்தான். உள்ளே தவித்துக் கொண்டிருந்த
பெரியவரை மீட்டு வைத்தியரிடம் அழைத்துச் சென்றான்.
ஒரு வழியாக காயம் குணமானது.

பின் அந்தப் பெரியவர் ஒரு அரசனிடம் வேலைக்குச்
சேர்ந்தார்.

அவரது நேர்மையை அறிந்த மன்னன், அவரிடம் தானதர்மம்
செய்யும் துறையை ஒப்படைத்து அமைச்சராக்கினான்.
பெரியவர் தானத்தின் அவசியத்தை மன்னனுக்கு எடுத்துச்
சொல்லி, வருமானத்தில் பாதியை தானத்துக்கென
ஒதுக்க வைத்தார்.

நிதி அதிகமாக இருந்ததால், தானம் கேட்டு வரும் ஏழைகளுக்கு
சற்று அதிகமாகவே நிதி கொடுத்து, அவர்களை தொழில்
துவங்கச் செய்தார் பெரியவர்.

எனவே நாட்டின் பொருளாதாரம் உயர்ந்தது. அரசுக்கு
தொழிற்கூடங்கள் மூலம் வரும் வரியும் அதிகரிக்கவே
தானநிதியும் கூடியது. 24 மணி நேரமும் அன்னதானக்
கூடம் செயல்பட்டது.

இவ்வூரில் கிடைக்கும் தானத்தைப் பற்றி, பெரியவரின்
கையை வெட்டிய திருடர்கள் கேள்விப்பட்டனர். தங்களால்
வெட்டப்பட்டவர் தான் மந்திரியாக இருக்கிறார் என்ற
விஷயம் தெரியாமல் வந்த அவர்கள், அரண்மனைக்கு
வந்தவுடன், பெரியவர் இருப்பதைப் பார்த்தனர்.

அங்கிருந்து நழுவ முயன்றனர்.

இதைக் கவனித்த பெரியவர், அவர்களை வெளியே
போகவிடாமல் தன்னிடம் அழைத்து வரச் சொன்னார்.

கேள்வி ஏதும் கேட்காமல் அவர்களுக்கு வேண்டியதைக்
கொடுத்தார். ஊர் எல்லை வரை இரண்டு வீரர்களையும்
பாதுகாப்புக்கு அனுப்பி வைத்தார்.

அந்த வீரர்கள் அவர்களிடம், “உங்களுக்கு மட்டும்
அமைச்சர் நிறைய பொருள் தந்தாரே! என்ன விசேஷ
காரணம்?” என்றதும், “அவர் எங்கள் சொந்தக்காரர்,”
என்று அவர்கள் பொய் கூறினர்.

இதை பொறுத்துக் கொள்ளாத பூமிமாதா வெடித்தாள்.
அவர்களை அப்படியே விழுங்கி விட்டாள்.

இதை காவலர்கள் மூலம் கேள்விப்பட்ட பெரியவர்
வருத்தப்பட்டார். ராமபிரானிடம்,

“நீ உன் மனைவியையே கடத்திய ராவணனுக்கு முக்தி
கொடுத்தாய். அதுபோல் என் கைகளை வெட்டிய
இந்த திருடர்களுக்கும் முக்தி கொடு.

மேலும், நான் கொடுத்த பொருளுடன் அவர்களை
பூமியில் திருந்தி வாழச்செய்,” என்று மனமுருகி
பிரார்த்தித்தார்.

இதையடுத்து பூமித்தாய் அவர்களை விடுவித்தாள்.

திருடக்கூடாது… துன்பம் செய்தவர்களுக்கும் நன்மையே
செய்ய வேண்டும் என்ற போதனைகளை இந்தக் கதை
உணர்த்துகிறது.

—————————
தினமலர், நெல்லை

இருட்டுப் பயம் இனி இல்லை!’

‘‘அம்மா… ஆ… ஆ!’’

படுக்கையறைப் பக்கம் இருந்து மகள் ரக்ஷிதா பெரிதாக
அலறும் சத்தம் கேட்டு, சமையலறையில் சப்பாத்தி மாவு
பிசைந்து கொண்டிருந்த அம்மா பதைபதைப்புடன்
ஓடி வந்தார்.

அதே நேரம், அவரின் இடப்பக்கமாகக் கடந்து, ஹாலின்
வேறுபக்கம் ஓடினான் மகன் தீபக்.

படுக்கையறை வெளியே தாழிடப்பட்டிருந்தது. அம்மா
நடந்ததை புரிந்துகொண்டார்; அது மகனின்
குறும்புத்தனம்தான் என்று. வேகமாகச் சென்று
தாழ்ப்பாளை நீக்கி கதவைத் திறந்தால், உள்ளே கும்மிருட்டு.

கைகளால் தடவி சுவிட்சைப் போட்டார் அம்மா.
கட்டிலில் வியர்த்து விறுவிறுத்துப்போய் அமர்ந்திருந்தாள்
ரக்ஷிதா. அவளுக்கு இருட்டென்றால் அவ்வளவு பயம்!

அம்மவைப் பார்த்ததும் ஓரளவு நிதானத்துக்கு வந்தவள்,
‘‘பாரும்மா… இந்த தீபக்கை! லைட்டை ஆஃப் பண்ணிட்டுப்
போயிட்டான். டார்ச் லைட்டையும் கையோட எடுத்துட்டுப்
போயிட்டான்’’ என்று கம்ப்ளைன்ட் செய்தவளின்
குரலும் உடலும் ஒருசேர நடுங்கின. கண்களில் நீர்
தழும்பிநின்றது!

‘‘அவ, என்னை அடிச்சாம்மா. அதான்…” என்றான் தீபக்,
பாதுகாப்பான தொலைவில் நின்றுகொண்டு!

‘‘சரி! விடு அவனுக்குச் சரியான பனிஷ்மென்ட் தர்றேன்’’
என்று மகளை சமாதானம் செய்த அம்மா, மகன் தீபக்கை
கண்டித்து விட்டு, ‘‘இந்தப் பொண்ணுக்கு எப்போதான்
இந்த இருட்டுபயம் தொலையுமோ?’’ என்ற கவலை
மிகுந்த புலம்பலுடன் மீண்டும் சமையலறைக்குள்
நுழைந்தாள். மறுநாளே அதற்கு ஒரு தீர்வு கிடைத்தது.

மறுநாள் இரவு… திடுமென கரன்ட் கட்டானது.
அதேநேரம் மிகப் பெரிதாக அம்மாவின் அலறல் சத்தமும்,
அதைத் தொடர்ந்து பாத்திரங்கள் உருண்டு விழும் சத்தமும்
கேட்டது. ‘‘அம்மா! என்னாச்சு..?’’ என்று பதறி எழுந்த
ரக்ஷிதா, இருட்டில் சுவரைப் பிடித்தபடியே கிச்சனுக்குச்
சென்றாள்.

அங்கே கீழே விழுந்துகிடந்தார் அம்மா. ‘‘வழுக்கி
விழுந்துட்டேன் ரக்ஷிதா. வேறொண்ணுமில்லை. நீ போய்
ஹாலில் அலமாரியில் இருக்கும் தைலத்தை எடுத்து வா!’’
என்றாள்.

ரக்ஷிதா விடவில்லை. அம்மாவை கைத்தாங்கலாகப்
பிடித்து தூக்கி படுக்கைக்குக் கொண்டு வந்து அமர்த்தினாள்.
இப்போது கண்களுக்கு இருட்டு பழகிவிட்டிருந்தபடியால்,
மெள்ள அலமாரி பக்கம் சென்று, கைகளால் துலாவி
தைல டப்பாவையும் எடுத்து வந்தாள்.

தைலத்தை அம்மாவின் இடுப்பில் அவள் தடவிக்
கொண்டிருக்கும்போதே கரன்ட் வந்துவிட்டது.

‘‘அம்மா, ஒண்ணும் ஆகலையே.. பயந்தே போயிட்டேன்’’
என்றாள் ரக்ஷிதா.

‘‘ஸ்லிப் ஆனதும் உட்கார்ந்துட்டேன். கொஞ்சம் ரெஸ்ட்
எடுத்தால் சரியாயிடும்’’ என்று பதில் சொன்ன அம்மா,
‘‘ஆமாம்… பயந்துட்டதா சொன்னியே… இருட்டைப் பார்த்தா,
என்னை நினைச்சா?” எனச் சிரித்தபடியே கேட்க,
ரக்ஷிதா திகைத்தாள்.

பதற்றத்திலும் பரபரப்பிலும் இருட்டை அவள்
பொருட்படுத்தவே இல்லை என்பதை அப்போதுதான்
உணர்ந்தாள்.

அவளின் தலையில் கை வைத்து பரிவுடன் தடவிக்
கொடுத்தபடி அம்மா சொன்னார்:

‘‘இதான் விஷயம் ரக்ஷிதா! நம்மளோட சின்னச் சின்ன
வீக்னஸை விரட்டணும்னா, ஒரு பெரிய பொறுப்பை
கையில் எடுத்துக்கணும். அதிலேயே கவனம் செலுத்துனா
மற்ற வீக்னஸ் தானா மறந்துடும்’’

புரிந்துகொண்டவளாய் தலையசைத்த ரக்ஷிதா,
அன்போடு அம்மாவைக் கட்டிக்கொண்டாள்.

———————–

யுவா, ஓவியம்: மகேஸ்

நீ எப்படி மற்றவர்களைப் பார்க்கிறாயோ -Win மொழி:

தன் முன் கவலையுடன் நின்ற இளைஞனைப் பார்த்தார்
குரு. “”என்ன பிரச்னை? எதற்கு கவலை?” என்றார் குரு.

“”எனக்கு எந்த வியாபாரமும் சரிவர மாட்டேன்கிறது.
எல்லோரும் என்னை எதிரியாகவே பார்க்கிறார்கள்.
யாரும் சரியாகப் பழக மாட்டேன்கிறார்கள். என்ன செய்வது
என்றே தெரியவில்லை.”

அவன் சொன்னதிலிருந்தே இளைஞனுடைய பிரச்னை
என்னவென்று குருவுக்குத் தெரிந்துவிட்டது.

அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.

ஒரு ஊருக்கு வெளில மரத்தடில பெரியவங்கலாம்
உக்காந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்போ அங்க புதுசா
ஒருத்தன் வந்தான்.

“”நான் பக்கத்து ஊர்லருந்து வர்றேன். இந்த ஊர்ல எதாவது
வியாபாரம் செய்யலாம்னு இருக்கேன். இந்த ஊர்ல
ஜனங்கலாம் எப்படி? நல்லபடியா பழகுவாங்களா?” என்று
கேட்டான்.

அதற்கு ஒரு பெரியவர்,
“நீ இருந்த ஊர்ல ஜனங்கலாம் எப்படி? என்று எதிர் கேள்வி
கேட்டார்.

“ஐயோ, அத ஏன் கேக்குறீங்க. ஒருத்தன் கூட சரியில்ல,
எல்லாம் பொறாமை பிடிச்சவங்க. அதான் இங்க வரேன்”
என்றான் வந்தவன்.

“அப்படியா? இந்த ஊர் ஜனங்களும் கிட்டத்தட்ட
அப்படித்தான். பெரிய வித்தியாசமில்லை” என்று
பதிலளித்தார் பெரியவர். வந்தவன் வேறு வழியாக
போய்விட்டான்.

சிறிது நேரம் அதே வழியாக இன்னொருவன் வந்தான்.
அவனும் அந்த ஊரைப் பற்றி விசாரித்தான். இவனிடமும்
அவனுடைய பழைய ஊரைப் பற்றி விசாரித்தார் பெரியவர்.

“அந்த ஊர் ரொம்ப நல்ல ஊர், ஜனங்கலாம் ரொம்ப நல்ல
மாதிரி, இனிமையா பழகுவாங்க. அந்த ஊர்ல வியாபாரம்
செஞ்ச மாதிரி இங்கேயும் வியாபாரம் செய்யலாம்னு
நினைக்கிறேன்”என்று சொன்னான் வந்தவன்.

உடனே பெரியவர், “”இந்த ஊரும் அப்படித்தான்.
ஜனங்கலாம் நல்லவங்க. உனக்கேத்த ஊரு”என்று சொல்லி
ஊருக்குள் அனுப்பி வைத்தார்.

அப்போது அருகிலிருந்த இன்னொரு பெரியவர்,
“என்ன அவனுக்கு அப்படிச் சொன்ன, இவனுக்குச் இப்படிச்
சொல்ற?” என்று கேள்வி எழுப்பினார்.

“”ரெண்டு பேர்க்கிட்டயும் ஒரே ஊரைப் பத்திதான் கேட்டேன்.
முதல்ல வந்தவன் எல்லாத்தையும் எதிர்மறையா
பாக்கிறவன். அவனால எந்த ஊர்லயும் குப்பை கொட்ட
முடியாது. இரண்டாவது வந்தவன் எல்லாத்தையும் நல்ல
விதமாக பாக்கிறவன், அதனால அவனால எங்கேயும்
சாதிக்க முடியும்” என்றார் பெரியவர்.

குரு சொன்ன கதையைக் கேட்டதும் இளைஞனுக்கு
தன்னுடைய குறை புரிந்தது.

அன்று குரு அவனுக்குச் சொன்ன Win மொழி:

நீ எப்படி மற்றவர்களைப் பார்க்கிறாயோ
அதேபோல்தான் மற்றவர்கள் உன்னைப் பார்ப்பார்கள்.

————————————-

-ரஞ்சன்
நன்றி- குமுதம்

துறவறம்!

சுவாமி விவேகானந்தர், இளம் வயதில் துறவறம் செல்ல
விரும்பி, தாயாரிடம், அனுமதி கேட்டார்.

”மகனே… ஒரு கத்தியுடன் என்னை வந்து பார்…” என்றார்.

தாயின் சொற்படி, விவேகானந்தர், ஒரு கத்தியை எடுத்து
வந்து கொடுத்தார். தாய் ஒன்றும் கூறாமல்
மவுனமாயிருந்தார். ”தாங்கள் கூறியபடி, கத்தியோடு
வந்துள்ளேன்; ஒன்றும் கூறாமல் மவுனம் சாதிக்கிறீர்களே…”
என வினவினார் விவேகானந்தர்.

புன்னகைத்த அவரது தாய், ”நாளையும், கத்தியோடு வா…”
என்றார். அன்றும் அதேபோல சென்றார்; அனுமதி
கிடைக்கவில்லை. இது போல், மாத கணக்கில் நடந்தது.
அனுமதி கிடைக்காததால் வருத்தமுற்றார்.

இருப்பினும், தாயின் கட்டளையை மீறவில்லை.
தினமும், கத்தியோடு சென்று தாயை சந்தித்தார்.

ஒரு நாள் –

என்ன ஆச்சரியம், துறவறம் எடுத்துக் கொள்ள, தாய்
அருள்புரிந்தார். வியப்படைந்த விவேகானந்தர்,
”தாயே… மாதக்கணக்கில் மவுனம் சாதித்து விட்டு,
இன்று அனுமதி கொடுத்தீரே! அதன் காரணத்தை
தெரிந்து கொள்ளலாமா…”என்றார்.

”மகனே… நேற்று வரை, நீ கத்தி எடுத்துவந்த போது,
கத்தியின் கூர்மையான பாகத்தை என்னை நோக்கியும்,
பாதுகாப்பான கைப்பிடி பாகத்தை, உன் பக்கமாகவும்
வைத்திருந்தாய்;

இன்று தான், கூர்மையான பாகத்தை உன் பக்கமும்,
ஆபத்தில்லாத கைப்பிடி பாகத்தை என்னை நோக்கியும்
தந்தாய். இதுதான் உன்னிடம் ஏற்பட்ட மாற்றம்.

”அதாவது, ஆபத்து விளைவிக்க கூடிய பாகத்தை
உன்பக்கம் வைத்திருந்தது, தியாக மனப்பான்மை
வளர்ந்துள்ளதை காட்டுகிறது.

துறவறம் என்பது, பிறரை பாதுகாக்கும் வகையில்
அமைய வேண்டும். உன்னிடம் வருபவர்களுக்கு
ஆபத்து நேராது என்பது உறுதியாக வேண்டும்.
தியாக மனப்பாங்கை அடைந்தவர் தான், துறவறம்
பூணலாம். அந்த பக்குவம் உனக்கு வந்து விட்டது;
என் ஆசிகள்…” என்றார்.

குட்டீஸ்… ஒரு காரியத்தை விரும்பினால் கடைசிவரை
அதில் உறுதியாக இருக்க வேண்டும்.
அதுதான் லட்சியம் நோக்கி நம்மை அழைத்து செல்லும்.

———————–
சிறுவர் மலர்

Advertisement

மேலும் சிறுவர் மலர் செய்திகள்:

மொக்க ஜோக்ஸ்!

இலக்கு ‘100’ :

மேலும் தாங்கள் வடிவமைத்த காரை, மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில்,மேம்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

தோசைக்கு அறைத்த மாவில் 50 கிராம் கொத்துக்கடலை,
50 கிராம் பட்டாணியையும் ஊறவைத்து அரைத்து எடுத்து
தோசை மாவுடன் சேர்த்துத் தோசை சுட்டால்
முறுமுறுவென்று இருப்பதோடு சத்தும் கிடைத்தது
போலல் இருக்கும்
=
ரேவதி, மங்கையர் மலர்

கிரீடம் அணிந்த காய்…!!

IMG_0887.jpgIMG_0888.jpg

« Older entries Newer entries »