வண்ணம் கொண்ட வெண்ணிலவே


பாடல் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே
படம் : சிகரம்
பாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசை : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இயற்றியவர் : வைரமுத்து

பாடல் வரிகள்:

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!

விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!

பக்கத்தில் நீயும் இல்லை!
பார்வையில் ஈரம் இல்லை!
சொந்தத்தில் பாஷை இல்லை!
வாசிக்க ஆசை இல்லை!

பக்கத்தில் நீயும் இல்லை!
பார்வையில் ஈரம் இல்லை!
சொந்தத்தில் பாஷை இல்லை!
வாசிக்க ஆசை இல்லை!

கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை!
நீளத்தை பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை!
தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை !

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!

நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்ச்சத்திர பூ பறித்தேன்!
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி!

கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால் கடுக்க காத்திருப்பேன்!
ஜீவன் வந்து சேரும்வரை
தேகம் போல் நான் கிடப்பேன்!
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே!

சரசர சாரகாத்து வீசும் போது,

படம் :  வாகை சூடவா
இசை : ஜிப்ரான்
பாடியவர் : சின்மயி
பாடல் வரி: வைரமுத்து

சரசர சாரகாத்து வீசும் போது,
சார பாத்து பேசும் போது,
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே.
சரசர சார காத்து வீசும் போது,
சார பாத்து பேசும் போது,
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே.

இத்து இத்து இத்துப்போன நெஞ்ச தைக்க,
ஒத்த பார்வ பாத்து செல்லு,
மொத்த சொத்த எழுதி தாரேன்,
மூச்சு உட்பட.
இத்து இத்து இத்துப்போன நெஞ்ச தைக்க,
ஒத்த பார்வ பாத்து செல்லு,
மொத்த சொத்த எழுதி தாரேன்,
மூச்சு உட்பட.

ட்டீ… போல நீ… என்ன ஏ…ன் ஆத்துற,

சரசர சார காத்து வீசும் போது,
சார பாத்து பேசும் போது,
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே….ஏ….

எங்க ஊரு புடிக்குதா, எங்க தண்ணி இனிக்குதா,
சுத்தி வரும் காத்துல, சுட்ட ஈரல் மணக்குதா,
முட்ட கோழி பிடிக்கவா, முறைப்படி சமைக்கவா,
எலும்புக் கடிக்கையில், என்ன கொஞ்சம் நெனைக்கவா,
கம்…மஞ்சோரு ருசிக்கவா,
சமச்ச கை…ய கொஞ்சம் ரசிக்க வா,
மொடக்கத்தான் ரசம் வச்சி மடக்கதான் பாக்குறேன்,
ரெட்ட தோச சுட்டு வச்சி காவ காக்குறேன்,
முக்கண்ணு நுங்கு நா விக்கிறேன்,
மண்டு நீ கங்க ஏன் கேக்குற?.

சரசர சார காத்து வீசும் போது,
சார பாத்து பேசும் போது,
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே.

புல்லுகட்டு வாசமா புத்திகுள்ள வீசுற,
மாட்டுமணி சத்தமா.. மனசுக்குள் கேக்குற,
கட்டவண்டி ஓட்டுற கையளவு மனசுல,
கையெழுத்து போடுற.. கண்ணிப்பொண்ணு மார்பிலே,
மூ…னு நாளா பாக்கலே, ஊரில் எந்…த பூவும் பூக்கல,
ஆட்டுகல்லு குழியில ஒரங்கிபோகும் பூனயா,
ஒன்ன வந்து பாத்துதான் கெரங்கி போறன்யா,
மீனுக்கு ஏங்குற கொக்கு நீ,
கொத்தவே தெரியல மக்கு நீ.

சரசர சார காத்து வீசும் போது,
சார பாத்து பேசும் போது,
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே.
சரசர சார காத்து வீசும் போது,
சார பாத்து பேசும் போது,
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே.

இத்து இத்து இத்துப்போன நெஞ்ச தைக்க,
ஒத்த பார்வ பாத்து செல்லு,
மொத்த சொத்த எழுதி தாரேன்,
மூச்சு உட்பட.
இத்து இத்து இத்துப்போன நெஞ்ச தைக்க,
ஒத்த பார்வ பாத்து செல்லு,
மொத்த சொத்த எழுதி தாரேன்,
மூச்சு உட்பட.

ட்டீ… போல நீ… என்ன ஏன் ஆத்துற,

காட்டு மல்லிகை பூத்திருக்குது காதலா காதலா,
வந்து வந்து ஓடிப்போகும் வண்டுக்கென்ன காய்ச்சலா.

——————–

உனக்கென நான் எனக்கென நீ

படம்: காதலில் விழுந்தேன்
இசை: விஜய் ஆந்தோனி
பாடியவர்கள்: விஜய் அந்தோனி, ரம்யா
வரிகள்: தாமரை

————————

உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே

உனதுயிராய் எனதுயிரும்
உலவிட துடிக்குதே
தனியொரு நான் தனியொரு நீ
நினைக்கவும் வலிக்குதே

இதயத்தை
இதுக்காக எதற்காக
இடம் மாற்றினாய்?
இனிக்கும் ஒரு
துன்பத்தை குடியேற்றினாய்
புதுமைகள் தந்து
மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த
பரிசுகள் தேடி பிடிப்பாய்
கசந்திடும் சேதி வந்தாள்
பகிர்ந்திட பக்கம் நீ இருப்பாய்
நோயென கொஞ்சம் படுத்தால்
தாய் என மாறி அணைப்பாய்

அருகினில் வா அருகினில் வா
இரு விழி வலிக்குதே
உனதுயிரில் எனதுயிரை
ஊற்றிட துடிக்குதே
நானென நீ
நீ என நான்
இணைந்திட பிடிக்குதே
புது உலகம் புது சரகம்
வலித்திட தவிக்குதே
மழைகையில் காற்றோடு
பூகம்பம் வந்தாலுமே
உனதுமடி
நான் தூங்கும் வீடாகுமே-

அருகினில் வந்து
மடியினில் சாய்ந்து படுத்தால்
மெல்லிய குரலில் இசைப்பாய்
மார்பினில் முகத்தை புதைத்தால்
கூந்தலை கோதி கொடுப்பாய்
அருகினில் மயங்கி கிடந்தால்
அசைந்திட கூட மறூப்பாய்

உனது காதலில் விழுந்தேன்
மரணமாய்
பயந்திடும் தூரத்தில்
நாமும் வாழ்கின்றோம்
மனிதா நிலை தாண்டி போகிறோம்
இனி நமக்கென்றும் பிரிவில்லையே
ஓஹோ பிரிவில்லையே

எனக்கென எதுவும் செய்தாய்
உனக்கென என்ன நான் செய்வேன்?
பொங்கிடும் நெஞ்சின் உணர்வை
சொல்லவும் வார்த்தை போதாதே
விழிகளின் ஓரம் துளிர்க்கும்
ஒரு துளி நீரே சொல்லட்டும்
உனது காதலில் விழுந்தேன்
(உனக்கென..)

——————————
நன்றி
தேன்கிண்ணம்

மதுர மரிக்கொழுந்து வாசம்

படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ, சித்ரா

பாடல் வரிகள்- கங்கை அமரன்

—————————


மதுர மரிக்கொழுந்து வாசம் – என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டுப் பேசும் – இது
மறையாத என்னுடைய பாசம்

பொட்டுன்னா பொட்டு வச்சு
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுனு சேலையைக் கட்டி
எட்டு வச்சு நடந்துகிட்டு

கட்டுன்னா கட்டிப்புட்ட
நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட
வெட்டும் இரு கண்ணை வச்சு
என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட

கட்டு அது உனக்கு மட்டும்தானா
இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்டக்குறை மாமா
அது இரு உசிரை கட்டுதய்யா தானா
இது இப்போது வாட்டுதுன்னு
பாட்டு ஒன்னை அவுத்துவிடு

(மதுர மரிக்கொழுந்து)

மெட்டுன்னா மெட்டு கட்டி
இட்டு கட்டி பாடிக்கிட்டு
கட்டுனா ராகம் என்னும்
மாலை ஒன்னை கட்டிப்புட்டு

சுத்துனா சுத்தி அதை
என் கழுத்தில் போட்டுப்புட்ட
ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட
தாலி கட்ட மறந்துப்புட்ட

நீதானே என்னுடைய ராகம்
என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்
ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும்
உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்
என் மனசேனோ கிறங்குதடி
சிறகடிச்சுப் பறக்குதடி…

————————–
பதிவிட்டவர் – Pakeerathan
Labels: இளையராஜா இசை பாடல் வரிகள்

அவள் ஒரு ராகமாலிகை

திரையிசை பாடல்கள் கர்நாடக இசைவடிவத்தை
சார்ந்து இருப்பதை பார்த்திருக்கிறோம்.

கதையின் நாயகிக்கு ராகத்தின் பெயர் வைத்ததையும்
பார்த்திருக்கிறோம். ரஞ்சனியும் பைரவியும் சிந்துவும்
சஹானாவும் நீலாம்பரியும் கதையில் உலா வருவதுண்டு.

சண்முகம் என்னும் நாயகனை நினைத்து நாயகி
மறைந்திருந்து பாடிய பாட்டை சண்முகப்பிரியா
ராகத்திலும்

அபூர்வமான நாயகியைப்பற்றி அதிசய ராகத்தில்
பாடல் அமைத்ததும்

நாயகியின் பெயர் கொண்ட லலிதா ராகத்தில்
இதழில் கதை எழுதியதும்

இசை அமைப்பாளர்களின் இனிய கற்பனை.
Creative Brilliance

திரைப்பாடல் வரிகளில் அதிகம் உபயோகப்படுத்தப்பட்ட
வார்த்தைகளில் ‘ராகம்’ டாப் டென் லிஸ்டில் வரும்.
ராகங்கள் பதினாறு உருவான வரலாறும்
ராக தீபம் ஏற்றும் நேரமும் நமக்கு தெரியும்.

சரி ராகங்களின் பெயர்களை அது பெண்ணின் பெயராய்
வருவதை தவிர்த்து கவிஞர்கள் எப்படி பிரயோகிக்கிறார்கள்?

முதலில் நினைவுக்கு வருவது ‘இசை கேட்டு எழுந்தோடி’
என்று தோடியை கண்ணதாசன் சொன்னதுதான்.
தர்பாரில் எனக்கு இணை யாரென்று கேட்டதும்
ஒரு நாள் போதுமா என்று கேட்ட அதே பாடலில் தான்.

அகத்தியர் படத்தில் ஒரு போட்டி பாடலில் சில முத்துக்கள்
உண்டு. எந்த ‘நாட்டையும்’ நாதத்தால் வென்றிடுவேன்
என்பதும் ‘அனைத்தும் உன் ‘வசந்தா’னா என்பதும்
நயம்.

இசையமைப்பாளர் இளையராஜா கவிஞராகவும் மாறி
என்ன சமையலோ என்று விசாரித்து
‘களைந்திடு அரிசியை கல்யாணி – கல் ஆணி என்று
சர்க்கஸ் காட்டுவார்.

கண்ணதாசன் முழுவதும் ராகங்களின் பெயர்களை
வைத்து ஒரு பாடல் எழுதியிருக்கிறார். பெண் ஒன்று
கண்டேன் படத்தில் அவளை ராகமாலிகையாய்
கற்பனை செய்யும் பாடல்.

உன் மை விழி ஆனந்த பைரவி பாடும்

உன் தேகத்தில் மோகன ராகத்தின் பாவம்

நீ ஒரு ராகமாலிகை

உன் நெஞ்சம் என் காதல் மாளிகை

என்று தொடங்கி எல்லா வரிகளிலும்
ஒரு ராகத்தின் பெயரை சொல்லும் கவிதை.

நான் வாவென அழைக்கையில் விரைந்தோடி

வந்து தழுவிடும் தேவ மனோஹரி

ஆரபிமானமும் தேவையில்லை இந்த

அகிலத்தில் உன் போல் பாவையில்லை

நீ ஓடி வந்து தழுவினால் வேறு யார் அபிமானமும்
எனக்கு தேவையில்லை என்று சொல்லும் காதல்.

நீ எனக்கே தாரம் என்றிருக்க

உன்னை என் வசந் தாவென நான் கேட்க

என்று ராகத்தின் பெயர்களை பிரித்து பொருள் கொண்டு
அவன் நெஞ்சினில் கொஞ்சும் ரஞ்சனியை அவன்
தேடும் நாயகியை பாடும் வரிகள் செய்யும் வித்தை
நயம்.

பல்லவியும் சரணமும் ராகத்தின் பெயர்களில் சரணம்
.-
——————————————-

மோகனகிருஷ்ணன்
நன்றி-
https://4varinote.wordpress.com/2013/01/24/54/

தென்மேற்குப் பருவக் காற்று-கருத்தம்மா


படம் : கருத்தம்மா
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர் : உன்னிகிருஷ்ணன், சித்ரா
பாடல் வரி : வைரமுத்து

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்

தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்

மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே

மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
நீயெறும் நானெறும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே

ஆணென்றும் பெண்ணெறும் இரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே

காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே

வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க
———–

போறாளே போறாளே ஏ என்ன விட்டு …

படம் : அன்னக்கொடியும் கொடிவீரனும்
பாடியவர்கள் : SPB சரண், மானசி
இசை : GV ப்ரகாஷ்குமார்

போறாளே போறாளே ஏ என்ன விட்டு
அன்னக்கொடிதான் போறாளே
போறாளே போறாளே என் கண்ணக்கட்டி
காட்டுல விட்டுப் போறாளே
அடி ஒன்னுமே புரியலையே உலகமும்
தெரியலையே
என் கண்ணெல்லாம் நீர்க்கொடமாய்
ஏதும் காணவும் முடியலையே
இதுதான் என் பொறப்பா, இதுதான் உன் பொறுப்பா

மனசே எரியுதம்மா எரிக்கும் சுடு நெருப்பா
மனசார முகம்பார்த்தோம்
மனசுக்குள்ள வெத வெதச்சோம்
அணைபோட முடியாம ஆசையெல்லாம்
தெறந்து வெச்சோம்
இந்த காடெல்லாம் மேடெல்லாம்
கால்தடத்த பதிச்சு வெச்சு
கரட்டு வழி இருட்டு வழி கண்டபடி
திரிஞ்சுவந்தோம்
ஒரு ராத்திரியும் தூங்குனதா நமக்கொரு
கதையுமில்ல
அட ராப்பகலும் தெரியவில்ல நமக்கது
புதுசுமில்ல
அதெல்லாம் பழைய கத அத நீ ஏன் மறந்த
அலையா அலையுறனே அடியே ஏன் பறந்த

போனாலும் போகலியே என் நெனப்பில
நீதான் நெழலிலும் நீதான் மாறலயே

ஒரு நொடியும் ஒருபொழுதும் ஒன் நெனப்ப ஒழிச்சதில்ல
ஒரு யுகமா பல யுகமா ஒறவ அத்து தவிச்சதில்ல
இதில் யாரோட கண்ணுபட்டு பிரிஞ்சது நம்ம வழி
இதில் விதியோட விளையாட்டா விழுந்தது பெரிய பழி
என் வேதனைய எடுத்துச் சொன்னா வெயிலும் அழுகுமடி
அந்த சாமி இத கேட்டுச்சுன்னா உனக்கும் புரியுமடி
உசுரே நடுங்குதய்யா உன்ன நெனச்சபடி
இவ ஒன் அன்னக்கொடி போறா வேற வழி

போறாளே போறாளே
ஏ என்ன விட்டு அன்னக்கொடிதான் போறாளே
போறாளே போறாளே
என் கண்ணக்கட்டி காட்டுல விட்டுப் போறாளே
அடி ஒன்னுமே புரியலையே உலகமும் சரியில்லயே
என் கண்ணெல்லாம்
நீர்க்கொடமாய் ஏதும் காணவும் முடியலையே
இதுதான் என் பொறப்பு, இதுக்கு யார் பொறுப்பு?
மனசே எரியுதய்யா என்னச் சுத்தி சுடு நெருப்பு

போறாளே போறாளே
ஏ என்ன விட்டு அன்னக்கொடிதான் போறாளே

——————————-

பேசுகிறேன் பேசுகிறேன்…

படம்: சத்தம் போடாதே 
வெளிவந்த வருடம்: 2007
பாடல்வரி : கவிஞர் தாமரை
இசை: யுவன் ஷங்கர் ராஜா 
பாடியவர்கள்: நேஹா பேசின் 
———————————————-

பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்

எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா
(பேசுகிறேன்..)

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே.. ஓஹோ

முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது
வலியில்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா

அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னைக் காக்கவே தானாய் வளருமே

பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்ச நேரம்தானே
உன்னைத் தோண்டினால்
இன்பம் தோன்றுமே

விடியாமல்தான் ஓர் இரவேது
வடியாமல்தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா…

அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா…

———————–

கண்கள் நீயே காற்றும் நீயே

படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
இசை: G.V.பிரகாஷ் குமார்
பாடியவர்: சித்ரா
பாடலாசியர்: தாமரை
வருடம்: 2012

கண்கள் நீயே காற்றும் நீயே

தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானம் நீயே
ஊனும் நீ உயிரும் நீ
பலநாள் கனவே ஒருநாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உன்னை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை
முகம் வெள்ளைத்தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில் நீர் என்னும் தீர்த்தத்தால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே
(கண்கள் நீயே ..)
இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னை தாங்க ஏங்கினேன்
அடுத்த கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்
தூளில் ஆடும் சேலை
தொட்டில் தன் பாதி வேலை
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாலே பலப்பல ஓசை
செய்திடும்
ராவணன்
ஈடில்லா என் மகன்
என்னை தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
என்னை கிள்ளும் உன் விரல் மெத்தைக்குள்
என் முத்தத்தை நான் தந்தேன் கண்ணே

(கண்கள் நீயே ..)

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளி போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைகிறேன்
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்
சுவர் மீதும் கிருக்கிடும் போது
ரவிவர்மன் நீ
பசி என்றால் தாயிடம் தேடும்
மானிட
மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ
கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித்தானே பெற்றேன் உன்னை
உடல் செவ்வாது பிணியும்வது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை
(கண்கள் நீயே ..)

ழை பொழிந்திடும் நேரம் மனதில் ஓர் ஈரம்…

படம்- ஒரு குப்பைக்கதை
பாடகி : மது ஐயர்
பாடகர் : ஜோஷ்வா ஸ்ரீதர்
இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர்

————————–

ஆண் : தானா தானா
தன்னா தன னா

பெண் : மழை பொழிந்திடும்
நேரம் மனதில் ஓர் ஈரம்
இன்னும் என்ன தூரம்
ஆஹா ஆஆ தீயென உன்
மோகம் திரியென என் தாகம்
தீ பற்றிடும் நேரம் ஆஹா
ஆஆ

பெண் : ஒரு முறை ஒரு
மயக்கம் மறுமுறை ஒரு
தயக்கம் என்னை அது
எரிக்கும் ஆஹா ஆஆ எது
வரை இது போகும் அது
வரை நாம் போவோம்
ஒன்றென ஒன்றாவோம்
வா வா வா வா

ஆண் : இதயம் இரண்டும்
உருகி இன்றது ஒன்றென
மாற உயிர்கள் கலக்கும்
பொன் மாலை நிமிடம்
அடடா பெண்ணே பெண்ணே
இனி நான் நான் என்ன கூற
கடலில் விழும் நதியாய்
காதல் சேர

ஆண் : தானா தானா
தன்னா தன னா

பெண் : எங்கே எனை
ஈர்த்தாய் நான் அறியேன்
அன்பே எப்படி என்னை
சாய்த்தாய் இன்று நான்
விழுந்தேன் அன்பே

பெண் : அச்சம் மடம் நாணம்
அதை துறந்தேன் அன்பே
ஏனோ என்னுள்ளே ஏதோ
ஆனத டா தானாய் உன்
தோளில் சாய்கிறேன்

பெண் : மேகம் மேல் ஏறி
நெஞ்சம் நீந்துதடா விண்மீன்
கூட்டத்தில் நான் கலந்தேன்

ஆண் : இதயம் இரண்டும்
உருகி இன்றது ஒன்றென
மாற உயிர்கள் கலக்கும்
பொன் மாலை நிமிடம்
அடடா பெண்ணே பெண்ணே
இனி நான் நான் என்ன கூற
கடலில் விழும் நதியாய்
காதல் சேர

ஆண் : தானா தானா
தன்னா தன னா

ஆண் : காமம் மோகம்
ஏக்கம் தாகம் துக்கம்
போகும் ஓஹோ ஓஓ
தேகம் எங்கும் என்றும்
வாடும் நேரம் தூரம்
போகும் ஓஹோ ஓஓ

பெண் : மழை பொழிந்திடும்
நேரம் மனதில் ஓர் ஈரம்
இன்னும் என்ன தூரம்
ஆஹா ஆஆ தீயென உன்
மோகம் திரியென என் தாகம்
தீ பற்றிடும் நேரம் ஆஹா
ஆஆ

பெண் : ஒரு முறை ஒரு
மயக்கம் மறுமுறை ஒரு
தயக்கம் என்னை அது
எரிக்கும் ஆஹா ஆஆ எது
வரை இது போகும் அது
வரை நாம் போவோம்
ஒன்றென ஒன்றாவோம்
வா வா வா வா

————————

« Older entries Newer entries »