புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்

படம்: வீராப்பு
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, மதுஸ்ரீ
இசை: டி.இமான்
பாடல்: நா.முத்துக்குமார்

பல்லவி
======

பெ: ஹாஹ ஹாஹ ஹா ஆ ஆ….
ஆ: புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்
பெ: புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்

ஆ: இந்தக் காதலில் யாரும் விழுந்துவிட்டால்
எழுந்திட மனசு இருக்குமா
எழுந்தாலும் மனசு இருக்குமா
பெ: நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
ஆ: நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்

சரணம்-1
=======

பெ: காதல் ஒரு கண்ணாடி ஆனால் இந்த கண்ணாடி
தோன்றுவதை எல்லாம் காட்டுவது இல்லை

ஆ: உள்ளத்தைப் பூட்டி வைத்தாலும் இரு கண்களில்
காட்டிக் கொடுக்கிறதே
உனக்கும் எனக்கும் முன்னாலே நம் நிழல்கள்
ஒன்றாய் நடக்கிறதே
பெ: ஓ கண்கள் பார்க்கும் போதிலே களவாடிப் போகுமே
காதலைக் கட்டிடக் கயிறுகள் ஏதுமில்லை

ஆ: நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
பெ: நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்

ஆ: புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்

சரணம்-2
=======

பெ: ஆ ஹாஅ ஆ ஹா…
நீ தந்த மயிலிறகை நெடுங்காலம் வைத்திருந்தேன்
மீண்டும் அந்தக் காலம் மனதினில் ஓடும் ஆ ஆ ஆ
ஆ: ஓ உன்னைக் காணும் முன்னாலே அடி என்னை
நானே வெறுத்து வந்தேன்
உன்னைக் கண்ட பின்னாலே நான் புல்லையும்
பூண்டையும் நேசிக்கிறேன்
பெ: ஓ தாய் தந்த சுவாசமும் தந்தை போல நெருக்கமும்
உன்னிரு தோள்களில் சாய்கையில் உணருகிறேன்

ஆ: நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
பெ: நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்

ஆ: புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்

பெ:ஆ புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்

ஆ: இந்தக் காதலில் யாரும் விழுந்துவிட்டால்
எழுந்திட மனசு இருக்குமா

பெ: எழுந்தாலும் மனசு இருக்குமா

ஆ: நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்

பெ: நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்
ஆ ஆ.. ஆ ஆ ஆ ஆ…
நான் உன்னைப் பார்க்கிறேன்
—————————————–

courtesy

http://sriramsongs.blogspot.com/2008/09/

Advertisements

இங்கே இரண்டு ஜீவன் நனையும்.

படம் : நந்தவனத் தேரு
பாடியவர்கள் : மனோ, லேகா, குழுவினர்
இசை : இளையராஜா
எழுதியவர்: ஆர்.வி.உதயக்குமார்
நடிகர்கள்: கார்த்திக், ஸ்ரீநிதி

——————————–

இங்கே இரண்டு ஜீவன் நனையும்.
இன்பம் என்னும் மழையில் நனையும் ஓ ஓ ஓ
துன்பம் என்னும் கனவு கலையும்
தூபம் போட்டு உறவு மலரும்..
தந்தோம் நல்வாழ்த்து….

என்ன வரம் வேண்டும்?!
இந்த வரம் போதும்!!
ஜென்ம ஜென்மம்தோறும் உந்தன் கரம் வேண்டும்..
உன்னையே நினைத்தேன்.. நிழலாய் தொடர்ந்தேன்..
எனை நீ தொடவே நிஜமாய் மலர்ந்தேன்…
(என்ன…)

மௌனமொழி நின்று போனது
உண்மை ஒன்று கேட்டது
காதல் என்னும் வழி கண்டது
கையில் உன்னை தந்தது..

இன்றல்ல நேற்றல்ல என்றைக்கும்
இங்கு உன்னோடு என் உள்ளம் சங்கமம்
ஒன்றல்ல ரெண்டல்ல இன்பங்கள்
அதை சொல்லிட வந்திடும் குங்குமம்.

நிலமும் இங்கு நீரும் நிலவும் அந்த வானும்
காலம் முழுவதும் காதல் வாழும் என்று சொல்லும்
என்ன வரம் வேண்டும்?!
இந்த வரம் போதும்!!

நாணத்திலே பெண்மை வேர்த்தது
தென்றல் மெல்ல பார்த்தது
வானத்திலே மின்னல் வாழ்த்திட
என்னை உன்னில் சேர்த்தது

நீர் இன்றி வேரில்லை மண்ணிலே
இங்கு என் பார்வை என்றும் உன் கண்ணிலே
உள்ளத்தை உன்னிடம் சொல்லியே
அன்பு தேன் அள்ளி தந்தது மல்லியே!

நதிகள் ஒன்று சேரும், அலைகள் சந்தம் போடும்
காலம் முழுவதும் காதல் வாழும் என்று சொல்லும்
என்ன வரம் வேண்டும்?!
இந்த ஜென்மம் போதும்!!

———————————–

 

சிரித்தால் சிரிக்கும் உலகமிது…!!

சிரித்தால் சிரிக்கும் உலகமிது
அழுதால் அழுவதில்லை – இந்த
நினைவுகள் யாவும் சரியோ தவறோ
எதுவும் புரியவில்லை!

குழந்தையின் உள்ளம் வளர்ந்த பின் இல்லை
கொடிமலர் கூட மணம் தரவில்லை!
கோவிலில் இருந்தால் அதன் பேர் தெய்வம்
தெருவில் கிடந்தால் கல்லென மாறும்!

காலம் என்பது நிலைக்கண்ணாடி
காட்டும் கோலங்கள் எத்தனை கோடி!
கண்ணால் காற்றைப் பார்த்தவரில்லை
பெண்மனம் அறிந்த மேதையுமில்லை!

ஆறுதல் கூறிட அன்னையுமில்லை
அறிவுரை சொல்லிட தந்தையுமில்லை
உருவை நிழலும் பிரிவதுமில்லை
உண்மை எனக்குப் பொருந்தவுமில்லை!

படம்: நம்பிக்கை நட்சத்திரம்
——————————-
>பூவை செங்குட்டுவன்
திரை இசைப்பாடல்கள் தொகுப்பிலிருந்து

 

 

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

படம்: இதய கோவில்

இசை: இளையராஜா

பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
(நான் பாடும்..)

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னை காண வெண்ணிலா வந்து போனதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத் தேடி தேடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இன்று பாடுது
உடு இன்று குயிலைத் தானே தேடுது
(நான் பாடும்..)

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே யோகம் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது
காம்பு இங்கு வாடுது
காலம் என்னைக் கேள்வி கேட்குது
கேள்வி இன்று கேலியாகிப் போனது
(நான் பாடும்..)

—————————
நன்றி- தேன்கிண்ணம்

என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே …!!

Remo

படம்- ரெமோ
பாடலாசிரியர்- விக்னேஷ் சிவன்
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், சிவகார்த்திகேயன்
இசை- அனிருத் ரவிச்சந்தர்

——————————
போற போக்கில் ஒரு லுக்க உட்டு
என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே
பாரபட்சமா காமம் கூட வச்சி செஞ்சிட்டாளே
ஃபர்ஸ்ட்டு லுக்க வச்சி பொக்குன்னுதான்
ஒன்னு வச்சிட்டாளே ஒன்னு வச்சிட்டாளே
லவ்வு புக்கு ஒன்னு நெஞ்சிக்குள்ள ஓப்பன் செஞ்சிட்டாளே
ஓரப்பார்வையாளே என்னை செஞ்சிட்டாளே

என்னை செஞ்சிட்டாளே என்னை செஞ்சிட்டாளே

காதல் அம்பு உட்டு என்னை செஞ்சிட்டாளே

என்னை செஞ்சிட்டாளே பச்சி செஞ்சிட்டாளே

எனக்கு ஈசியால்லாம் வேணாம்
பேசி பேசி கரெட்க்ட் பண்ணவும் வேணாம்
தொல்லப் பண்ணி அலையாம திரியாம ஜெயிக்கிற
காதலே வேணாமடா
எனக்கு உன் ஜாதகமும் வேணாம்
உன் அப்பாம்மா சம்மதமும் வேணாம்
உனக்குன்னதான் சேத்துவச்ச சொத்து சொகம்
எதுவுமே வேணாமே வேணாம் வேணாம்
வேணாமே வேணாமடா

உள்ளம் திண்டாடுதே ஒன்ன கொண்டாடுதே
ஒன்னப்பார்க்க பார்க்க பார்க்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே
என்ன பந்தாடுதே ஒன்ன தேடித்தேடித்தேடி
தேடித்தேடித்தேடி தேடித்தேடித்தேடி
நெஞ்சு அள்ளாடுதே (உள்ளம்)

ஏ…… இருட்டு ரூமுல எல்இடி லைட்ட போட்டுட்டா
தட்டத்தட்டத் தள்ளித்தள்ளி ஓட்டும் என்னோட வண்டில
பெட்ரோல ஊத்திட்டா……
பொண்ணுங்கல பார்த்ததும் பம்மி போய்
பதுங்கன என்னத்தான் பப்பப்பப் பப்பார
பானு பல்லக்காட்ட வச்சி பக்காவா மாத்திட்டா
எனக்குன்னு இறங்குன தேவதைத
உனக்குன்னு ஒனக்குன்னு பொறந்தவன் நான்
இருவது வருஷமா இதுக்குன்னு
தெருவெல்லாம் திரிஞ்சவன் தான்

பட் இருந்தாலும்………
எனக்கு ஈசியால்லாம் வேணாம்
பேசி பேசி கரெட்க்ட் பண்ணவும் வேணாம்
தொல்லப் பண்ணி அலையாம திரியாம ஜெயிக்கிற
காதலே வேணாமடா
எனக்கு உன் ஜாதகமும் வேணாம்
உன் அப்பாம்மா சம்மதமும் வேணாம்
உனக்குன்னதான் சேத்துவச்ச சொத்து சொகம்
எதுவுமே வேணாமே வேணாம் வேணாம்
வேணாமே வேணாமடா

———————————நன்றி-
http://www.tamilpaa.com/
3347-senjitaley-tamil-songs-lyrics

 

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை

திரைப்படம்:நேற்று இன்று நாளை
இயற்றியவர்:புலமை பித்தன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்:டி.எம்.சௌந்தரராஜன்,p.சுசீலா
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை க்கான பட முடிவு

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு தொட்டாலும் இளமைஇனிமை… இளமை…

சின்னஞ்சிறு மலர் பனியினில் நனைந்து
என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து
முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து
முத்துச்சரமென குறு நகை புரிந்து
( நீ )

பொன்னில் அழகிய மனதினை வரைந்து
பொங்கும் தமிழினில் கவிதைகள் புனைந்து
பன்னீர் புதுமலர் இதழ்களில் நனைந்து
கங்கை நதியென உறவினில் கலந்து
உறவினில் கலந்து…
( நீ )

————————————

வெள்ளிப் பனிமலை அருவியில் விழுந்து
வெற்றித் திருமகன் மடியினில் கிடந்து
உள்ள சுகத்தினை முழுவதும் அளந்து
இந்த உலகினை ஒரு கணம் மறந்து
ஒரு கணம் மறந்து…
( நீ )

ஏழு தாளங்கள்

கர்நாடக இசையின் தாள வகைகளில் ஏழு தாளங்களும்,
தாள நடைகள் எனப்படும் ஐந்து ஜாதி வகைகளும்
சொல்லப்படுகின்றன.

திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்று ஐந்து
வகையான தாள நடைகள் உலகின் எல்லாப் பாடல்களிலும்
அவற்றின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு ஏற்ற முறையில்
அடிநாதமாக ஓடுகின்றன.

திஸ்ர ஜாதி “தகிட’ என்ற அடிப்படை சொற்கட்டில் மூன்று
அட்சரங்களைக் கொண்டது. சதுஸ்ர ஜாதி “தகதிமி’ என்ற
அடிப்படை சொற்கட்டில் நான்கு அட்சரங்களைக் கொண்டது.

கண்ட ஜாதி “தகதகிட’ என்ற அடிப்படை சொற்கட்டில் ஐந்து
அட்சரங்களைக் கொண்டது. மிஸ்ர ஜாதி “தகிடதகதிமி’ என்ற
அடிப்படை சொற்கட்டில் ஏழு அட்சரங்களைக் கொண்டது.

சங்கீர்ண ஜாதி “தகதிமிதகதகிட’ என்ற அடிப்படை
சொற்கட்டில் ஒன்பது அட்சரங்களைக் கொண்டது.

தமிழ்த் திரையிசையில் ஆதிகாலம் தொட்டு பொதுவாகப்
பாடல்கள் திஸ்ரம் அல்லது சதுஸ்ர நடையிலேயே
அமைக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு இசையமைப்பாளர்கள்
முக்கியமான சந்தர்ப்பங்களில் கண்டம் மற்றும் மிஸ்ர
நடைகளில் பாடல்கள் அமைத்துள்ளனர்.

நான் இங்கு தாளங்களைக் குறிப்பிடாமல் அடிப்படை தாள
நடைகளை மட்டும் குறிப்பிட்டு பாடல்களை மேற்கோள்
காட்டுகிறேன். பல்வேறு இந்திய மொழிகளின் திரைப்பட
இசையில் கண்ட நடை மற்றும் மிஸ்ர நடைகள் பயன்
படுத்தப்பட்டிருக்கின்றன.
இங்கு தமிழ்த் திரைப்படப் பாடல்களைப் பார்ப்போம்.

——————-

முதலில் கண்ட நடைப் பாடல்களை எடுத்துக்கொள்வோம்.
பொதுவாக ஆக்ரோஷமான தாள நடை அல்லது ருத்ரதாண்டவ
நடை என்று உணரப்படும் இந்த தாள நடையை திரைப்பட
இசையமைப்பாளர்கள் பல்வேறு உணர்வுகளுக்கான திரைப்
படப் பாடல்களில் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனர்.

திரையிசைத் திலகம் கே. வி. மகாதேவன், “கந்தன் கருணை’
படத்தில் “ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்’ என்று
பஹாடி ராகத்தில் அருமையாக மெட்டமைத்திருக்கிறார்.

வயலின் சக்கரவர்த்தி குன்னக்குடி வைத்தியநாதன்,
“காரைக்கால் அம்மையார்’ படத்தில் கே. பி. சுந்தராம்பாளின்
தெய்வீகக் குரலில்
“தகதகவென ஆட வா, சிவசக்தியோடு பாட வா’ என்னும்
பாடலில் திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம் மற்றும் மிஸ்ரம் என
நான்கு நடைகளும் ஒரே பாடலின் நான்கு பகுதிகளாக வரும்
வண்ணம் அற்புதமாக இசையமைத்திருக்கிறார்.

இசைஞானி இளையராஜா இந்த நடையில் கிட்டத்தட்ட
பதினைந்திற்கும் மேலான எண்ணிக்கையில் பல்வேறு
ராகங்கள் மற்றும் புதுமையான தாளக்கட்டுகளுடன்
பாடல்களைப் படைத்திருக்கிறார்.

1. அழகு மலராட- வைதேகி காத்திருந்தாள்,
2. அதிகாலை நிலவே- உறுதிமொழி,
3.விழியில் புது கவிதை படித்தேன்- தீர்த்த கரையினிலே,
4.அன்பே உன் பாதமே சுப்ரபாதம்-புதுமைப்பெண்,
5.கல்யாண மாலை- புதுப்புது அர்த்தங்கள்,
6.பார்த்த விழி பார்த்தபடி- குணா,
7.இச்சென்று இச்சென்று-எனக்கு நானே நீதிபதி,
8.மழை வருது மழை வருது- ராஜா கைய வெச்சா,
9.மீட்டாத ஒரு வீணை- பூந்தோட்டம்,
10. அலை மீது விளையாடும்- காதல் கவிதை,
11.என்னப் போல் ஒருத்தன்- தாண்டவக்கோனே,
12.கண்ணிரெண்டில் ஏற்றி வைத்த-அவதாரம்,
13. தண்ணீர் குடம் கொண்டு- சர்க்கரைத் தேவன்.

ஏ. ஆர். ரகுமான் “மின்சாரக்கனவு’ படத்தில்
“அன்பென்னும் மழையிலே அகிலங்கள் நனையவே’
என்ற பாடலையும், “பாபா’ படத்தில் “சக்தி கொடு’
பாடலின் ஒரு பகுதியையும் இந்த நடையில்
அமைத்திருக்கிறார்.

திரைப்படப் பின்னணி இசையில் எல்லா
இசையமைப்பாளர்களும் காட்சிக்குத் தகுந்த வகையில்
இந்த தாள நடையில் இசைக் கோர்வைகளை அமைக்கத்
தவறுவது இல்லை.

——————————
By – டெஸ்லா கணேஷ்
நன்றி – தினமணி கொண்டாட்டம்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

படம்: தெய்வப் பிறவி
இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சி.எஸ். ஜெயராமன்

——————————-

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் – அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
தானே நம்பாதது சந்தேகம்

மானாபிமானந்தன்னை மறைவாக்கும் – நல்ல
மாண்புடைய மக்களை மடையராக்கும் – மனித
மானாபிமானந்தன்னை மறைவாக்கும் – நல்ல
மாண்புடைய மக்களை மடையராக்கும்
வீணான யோசனைக்கே இடமாக்கும்
வீணான யோசனைக்கே இடமாக்கும் – பல
விபரீத செயல்களை விளைவாக்கும்

தன்னைத் தானே தன்னைத் தானே
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே ஏ..ஏ
ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே
உள்ளத்தை ஒடவிடும் – பின்னும்
சேரும் இடம் வந்து சேராத ஓடமாய்
திசை மாறச் செய்து விடும்

ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் – உண்மை
உரைப்பார் சொல் தப்பெனவே வில்க்கிவிடும் -காதில்
ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் – உண்மை
உரைப்பார் சொல் தப்பெனவே வில்க்கிவிடும் – மனம்
மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டி விடும்
மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டி விடும்
மனிதனை விலங்காக்கிடும்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்
நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் – சுத்த
ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்
நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் – அது
ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும்
ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும் – அதற்கு
ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்
ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்

தானே தன்னைத் தானே
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

—————————-

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா


படம் : நீ வருவாய் என (1999)
இசை : S.A. ராஜ்குமார்
பாடியவர் : ஹரிணி, அருண்மொழி
பாடல் வரி : விவேகா


—————————–

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா
பனிக்காற்றே பிடிச்சிருக்கா

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா
பனிக்காற்றே பிடிச்சிருக்கா

சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா
சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா
பனிக்காற்றே பிடிச்சிருக்கா

ஜன்னலுக்குள்ளே வந்து கண்ணடிக்கிற
அந்த வெண்ணிலவை பிடிச்சிருக்கா
கண்கள் திறந்து தினம் காத்துக் கிடந்தேன்
என்னை கண்டுக் கொள்ள மனசிருக்கா

இளமனசுக்குள் கனவுகளை
இறக்கி வச்சது நெனப்பிருக்கா
மேகம் கூட்டம் மறைச்சிருக்கே
மீண்டும் சேர வழியிருக்கா
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா
பனிக்காற்றே பிடிச்சிருக்கா

ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி
நான் ரசிச்சது பிடிச்சிருக்கா
கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில்
நாம நனைஞ்சது நெனப்பிருக்கா

திறந்திருக்கிற மனசுக்குள்ளே
திருடிச் சென்றது பிடிச்சிருக்கா
வாசப் பூவு பிடிச்சிருக்கா வாழ்ந்து பார்க்க
வழியிருக்கா
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு
பூங்காத்தும் பிடிச்சிருக்கு
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு
பனிக்காத்தும் பிடிச்சிருக்கு

சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு
சுத்தி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு
பூங்காத்தும் பிடிச்சிருக்கு
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு
பௌர்ணமியும் பிடிச்சிருக்கு

—————————

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் – காணொளி

« Older entries