கிச்சன் டிப்ஸ்- குங்குமம் தோழி

நன்றி குங்குமம் தோழி 


*சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, மணத்தக்காளி வற்றல்,
சீரகம், மிளகு, சுக்குப்பொடி, பெருங்காயம் ஆகியவற்றை
கடாயில் நெய் சேர்த்து தனித்தனியாக வாசம் வரும்வரை
வறுத்து ஆறியதும் இந்துப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்
கொள்ளவும்.

சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு இந்த அங்காயப்
பொடியை போட்டு சாப்பிடவும்.

– மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

———————————————-

*கொத்தமல்லி, புதினா துவையல் அரைக்கும்போது
தண்ணீருக்குப் பதில் சிறிது தயிர் சேர்த்தால் சுவை
அதிகரிக்கும்.

– பா.குணா, வயலூர்.

——————————————

*சமையல் பாத்திரத்தின் அடியில் சோப்பைத் தடவி
அடுப்பில் வைத்தால் கரி பிடிக்காது.
கொஞ்சம் பிடித்த கரியும் எளிதாக கழுவி விடலாம்.
———

*கலவை சாதம் கலக்கும்போது ஒரு ஸ்பூன் வெண்ணெய்
சேர்த்து கலந்தால் சாதம் கட்டி, கட்டியாக இருக்காது.

– எஸ்.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்.

——————————————-

*ஆரஞ்சு பழத்தோலை காயவைத்து, பொடியாக்கி ர
சம் கொதிக்கும்போது சேர்த்துவிட்டால் மணமும்,
சுவையும் கூடும்.
————
*பிஸ்கெட் வைக்கும் டப்பாவில் சிறிதளவு சர்க்கரையைத்
தூவி விட்டால் பிஸ்கெட் நீண்ட நாட்கள் கெடாமல்
இருக்கும்.

– அ.திவ்யா, காஞ்சிபுரம்.

———————————————

*சப்பாத்தி மீந்துவிட்டால் ஈரத்துணியால் சுற்றி வைத்தால்
அடுத்த வேளைக்கு பயன்படும்.
——————
*கேக் செய்யும் கலவையில் கொஞ்சம் தேன் சேர்த்தால்
சுவையான மிருதுவான கேக் தயார்.

– எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.

——————————————–

*காய்ந்துபோன கறிவேப்பிலை, கொத்துமல்லி இலைகளை
வீசி எறிந்துவிடாமல் இட்லி பானையினுள் தண்ணீரில்
போட்டு வைத்தால், வேக வைக்கும் இட்லிகள் மணமாக
இருக்கும்.

*குழம்பு லேசாக கொதி வந்த பிறகே காய்களைப் போட்டு
வேகவைக்க வேண்டும். காய்கள் நன்றாக வெந்தபின்
இறக்கி பிறகு தாளிதம் செய்து அதில் கொட்டினால்
குழம்பு மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

*பாலை உறை ஊற்றி வைக்கும்பொழுது அதில் கொஞ்சம்
‘அரிசிக் கஞ்சி’யைக் கலந்து ஊற்றி வைத்தால், தயிர்
பெயர்த்து எடுக்கும்படி கெட்டியாக இருக்கும்.

*குறைந்த அளவு காரத்துடன் ‘புளியம் பூவையும்’
அதன் ‘கொழுந்தையும்’ அரைத்து துவையல் செய்து
சாப்பிட்டு வந்தால் பித்தம், பசி மயக்கம், வயிற்றுவலி
முதலிய உபாதைகள் வராது.

– என்.குப்பம்மாள், கிருஷ்ணகிரி.

—————————————

*சூடம் டப்பாவில் சில மிளகுகளை போட்டு வைத்தால்
சூடம் கரையாமல் இருக்கும்.

– எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.

——————————————

 

கொத்து சப்பாத்தி!

 

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி – 4
தக்காளி – 2
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
எண்ணெய், கடுகு, கடலைப்பருப்பு, உப்பு,
கறிவேப்பிலை, மஞ்சள் துாள் – தேவையான அளவு

——————–

செய்முறை:

சப்பாத்தியை, சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
வாணலியில், எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு,
கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

அதில், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம்,
தக்காளி போட்டு நன்றாக வதக்கவும். அத்துடன், உப்பு,
மஞ்சள் துாள் சேர்த்து வேக விடவும்.

அந்த கலவையில், வெட்டிய சப்பாத்தி துண்டுகளை
போட்டு, நன்றாக கலக்கவும்; கொத்து சப்பாத்தி தயார்.

தொட்டுக் கொள்ள குருமா தேவையில்லை; அப்படியே
சாப்பிடலாம். குழந்தைகள் விரும்புவர். உடல் நலனுக்கு
ஏற்றது!

————————-
– சுமதி, கோவை.
சிறுவர் மலர்

சிம்லி உருண்டை

ஜவ்வரிசி இட்லி

IMG_1688.jpg

வீட்டுக்குறிப்பு 10 – குமுதம்

IMG_1756.jpg

IMG_1757.jpg

ரவை கொழுக்கட்டை!

தேவையான பொருட்கள்:
——-

ரவை – 1 ஆழாக்கு
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 1 துண்டு
தயிர் – 3 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

————–
செய்முறை:

வாணலியில், மூன்று மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு,
காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம்,
கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.

பின், வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் போட்டு வதக்கி,
வெங்காயம் நிறம் மாறுவதற்குள், ரவையைக் கொட்டி,
கிளற வேண்டும்.

ரவை மெல்ல சிவக்கும் போது, தேவையான அளவு, கொதித்த
நீரை விட்டு, உடனே உப்பை போட வேண்டும். எல்லாம்
சேர்ந்து வெந்து வரும் போது, தயிரை கலந்து, ஒரே கொதியில்
இறக்கி விட வேண்டும்.

ஆறிய பின், உருண்டை பிடித்து, இட்லி தட்டில், வேக வைத்து
எடுத்தால், அருமையான ரவை கொழுக்கட்டை தயாராகி
விடும்; சத்து நிறைந்தது.

———————————–
– லட்சுமி வெங்ட்ராமன், சென்னை.
சிறுவர் மலர்

 

பனீர் குருமா

தேவையானவை:
—-

பனீர் – 150 கிராம்
மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
கஸþரி மேத்தி – 1 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை -1
சர்க்கரை – கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை – 10
கொத்துமல்லி இலை – சிறிது
எண்ணெய்- 3 மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

அரைக்க:
—————

தேங்காய்த் துருவல் – கால் கிண்ணம்
வெங்காயம் – 1
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
கொத்துமல்லி இலை – சிறிது
இஞ்சி – சிறிய துண்டு
சோம்பு – 1 தேக்கரண்டி
கிராம்பு – 3
ஏலக்காய் – 3
அன்னாசிப்பூ – 1
பட்டை – சிறிய துண்டு
முந்திரி பருப்பு-5

செய்முறை :

தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.
மிக்ஸியில் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைத்து
கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் விட்டு
அரைத்து கொள்ளவும்.

ஒரு கனமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும்
பிரிஞ்சி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு
வாசனை வந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து
நன்கு கைவிடாமல் வதக்கவும்.

பனீரை விரும்பிய வடிவில் வெட்டி கொள்ளவும்.
தேங்காய் விழுது லேசாக வதங்கியதும் சிறிது நேரம்
மூடிப் போட்டு வதக்கவும். வாணலியின் ஓரங்களில்
எண்ணெய் பிரியும் போது 1 கிண்ணம் தண்ணீர் விட்டு
நன்கு கலந்து விடவும்.

பின் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள் மற்றும்
மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். குருமா நன்கு
கொதித்ததும் நறுக்கிய பனீரை சேர்த்து கலந்து
கொள்ளவும்.

பின் கரம் மசாலா தூள் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.
கடைசியாக சிறிது சர்க்கரை மற்றும் கஸþரி மேத்தி
(காய்ந்த வெங்காயத்தாள்) சேர்த்து லேசாக கொதித்ததும்
இறக்கவும். கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.

————————
By முத்துலஷ்மி மாதவ கிருஷ்ணன் |
தினமணி

ப்ரோக்கோலி மசாலா

தேவையானவை:
——-

சிறிய ப்ரோக்கோலி -1
வெங்காயம் -1
இஞ்சி பூண்டு விழுது – அரை தேக்கரண்டி
சீரகம் – கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – முக்கால் தேக்கரண்டி
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
சர்க்கரை – 1 தேக்கரண்டி
ஃப்ரஷ் கிரீம் – 1 தேக்கரண்டி
எண்ணெய்- 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

அரைக்க :
————-
வெங்காயம் -2
தக்காளி -2
பாதாம் -10

செய்முறை:

குக்கரில் வெங்காயம், தக்காளி, பாதாம் சேர்க்கவும்.
தண்ணீர் விட்டு 1 விசில் வந்ததும் இறக்கவும். பெரிய
பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பின் அதில் ஆய்ந்து வைத்துள்ள ப்ரோக்கோலியைப்
போட்டு மூடி வைக்கவும். பின் அதில் ஐஸ் கட்டிகள்
போட்டு குளிர விடவும்.

5 நிமிடங்கள் கழித்து தண்ணீரை வடிகட்டவும்.
வேகவைத்த வெங்காயம், தக்காளி, பாதாம் பருப்பு
சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம்
போட்டு பொரிந்ததும், பொடியாக நறுக்கிய
வெங்காயம் போட்டு வதக்கவும். குறைந்த தீயில்
வைத்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், இஞ்சி பூண்டு
விழுது சேர்த்து வதக்கவும். பின் அரைத்த விழுதை
போட்டு வதக்கவும்.

2 நிமிடங்கள் வதக்கிய பின்னர் 2 கப் தண்ணீர் விட்டு
கொதிக்க விடவும். சிறிது கொதித்த பின் மஞ்சள் தூள்,
மிளகாய்த் தூள் மற்றும் தனியாத் தூள் சேர்த்து கிளறவும்.

பின் ப்ரோக்கோலியைச் சேர்த்து கிளறவும்.
தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க
விடவும். பின் கஸýரி மேத்தி இலைகள், சீனி, ஃப்ரெஷ்
கிரீம் மற்றும் 1/2 கப் தண்ணீர் விட்டு 10 – 15 நிமிடங்கள்
கொதிக்க வைத்து இறக்கவும்.

மசாலாவின் மேலே எண்ணெய் மிதக்கும் வரை கொதிக்க
வைத்தால் போதும்.

சுவையான ப்ரோக்கோலி மசாலா தயார்.

ரொட்டி, புலவ், நாண் போன்ற உணவு வகைகளுக்கு
சூப்பரான சைட் டிஷ்.

————————–
By முத்துலஷ்மி மாதவ கிருஷ்ணன் |
நன்றி-தினமணி

பீட்ரூட் குருமா


——————

தேவையானவை:
————
பீட்ரூட் – 1
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – 10
பட்டை – சிறிய துண்டு
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்- 2 தேக்கரண்டி
பால் – கால் டம்ளர்
கொத்துமல்லி இலை – சிறிது
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

அரைக்க:
———–
தேங்காய்த் துருவல் – 1 தேக்கரண்டி
தக்காளி -2
சோம்பு – 1 தேக்கரண்டி
இஞ்சி – சிறிய துண்டு
அன்னாசிப்பூ-1
கிராம்பு -3
முந்திரி பருப்பு – 5

செய்முறை:

பீட்ரூட்டை நன்கு கழுவி கொள்ளவும். பின் தோல் சீவி
பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் நறுக்கிய
பீட்ரூட்டை சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில்
வரும் வரை வேக வைக்கவும்.

மிக்ஸியில் தக்காளி, சோம்பு, இஞ்சி, கிராம்பு மற்றும்
அன்னாசிப்பூ சேர்த்து நன்கு அரைக்கவும். பின்னர்,
தேங்காய்த் துருவல், முந்திரி பருப்பு சேர்த்து நன்கு
அரைத்து கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும்
பட்டை, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து பின் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து
நன்கு கைவிடாமல் வதக்கவும்.

அவை நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள் மற்றும்
வேகவைத்த பீட்ரூட்டை சேர்க்கவும். பின் தேவையான
அளவு உப்பு சேர்த்து கலந்து கொதிக்க விடவும். குருமா
கொதிக்க ஆரம்பித்ததும் கரம் மசாலா தூள் மற்றும்
பால் சேர்த்து லேசாக கொதித்ததும் கொத்துமல்லி
இலை தூவி இறக்கவும்.

———————————–
By முத்துலஷ்மி மாதவ கிருஷ்ணன்
லைஃப்ஸ்டைல் ரசிக்க… ருசிக்க…(தினமணி)

தக்காளி வெங்காயம் தொக்கு

By முத்துலஷ்மி மாதவ கிருஷ்ணன்  |

1

தேவையானவை:
—————

பெரிய வெங்காயம் -2
நன்கு பழுத்த தக்காளி – 5
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் -2
மிளகாய்த்தூள் -2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
வெந்தயம் அரை தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

வெங்காயம் மற்றும் தக்காளியை பெரிய துண்டுகளாக
நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக
நறுக்கி கொள்ளவும். மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம்
சேர்த்து லேசாக அரைக்கவும். (தண்ணீர் விடாமல் கொர
கொரப்பாக அரைக்கவும்).

அரைத்த விழுதை ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி
கொள்ளவும். பின் தக்காளி சேர்த்து தண்ணீர் விடாமல்
அரைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம்
சேர்த்து பொரிந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து
பின் வெங்காய விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து
நன்கு வதக்கவும்.

அவை நன்கு வதங்கியதும் தக்காளி விழுதை சேர்த்து
வதக்கவும். பின் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள்,
மிளகாய்த் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
7 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வதக்கவும்.

அவை நன்கு கெட்டியான பின் பெருங்காயத்தூள் சேர்த்து
நன்கு கலந்து விடவும். தொக்கின் மேலே எண்ணெய்
பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

———————————-
By முத்துலஷ்மி மாதவ கிருஷ்ணன் |
தினமணி

 

« Older entries Newer entries »