கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!

தேவையான பொருட்கள்:

கார்ன் பிளேக்ஸ் – 100 கிராம்
வெல்லம் – 250 கிராம்
ஏலக்காய் – 5
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில், எண்ணெய் ஊற்றி, கார்ன்பிளேக்ஸை
பொரிக்கவும். பின், அடி கனமான பாத்திரத்தில்,
அரை டம்ளர் நீர் ஊற்றி, அதில் தூள் செய்த வெல்லத்தை
சேர்த்து கிளறவும்.

கம்பி பதம் வந்ததும், ஏலப்பொடி துாவி, அடுப்பை
அணைத்து, பொரித்த கார்ன்பிளேக்சை சேர்த்து
கிளறவும்.

சுவையான, மாலை நேர ஸ்நாக்ஸ் தயார்;
சத்தானதும் கூட!

————————–
– பி.ஜெயந்தி, கடலுார்.
சிறுவர் மலர்

Advertisements

பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்


தேவையான பொருட்கள் :

அவல் – ஒரு கப்
வெல்லம் – முக்கால் கப்
குங்குமப்பூ – சிறிது
பால் – 1/2 கப்
நெய் – 1/4 கப்
ஏலக்காய் – 1
முந்திரி – 10
பச்சைப் பயறு – 1/4 கப்
திராட்சை – 10

செய்முறை :

முதலில் பச்சைப் பருப்பை வெறும் வாணலில் சிவக்க
வறுத்துக்கொள்ளவும்.

அதே வாணலில் அவலைப் போட்டு சூடேறும் வரை
வறுத்துக்கொள்ளவும்.

பச்சைப் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அது வேகும்
அளவிற்கு தண்ணீர் விட்டு மலர வேக வைக்கவும். பருப்பு
வெந்ததும் அதில் ஒரு பங்கு அவலுக்கு இரண்டு பங்கு
பாலும், தண்ணீருமாகக் கலந்து ஊற்றி கொதிக்க
வைக்கவும்.

பின்பு கொதி வந்ததும் அவலைக்கொட்டிக் கட்டித்
தட்டாமல் நன்றாகக் கிளறி மிகவும் குறைவானத் தீயில்
மூடி வேகவைக்கவும். அவல் சீக்கிரமே வெந்துவிடும்.

சிறிது சூடான பாலில் குங்குமப்பூவைப் போட்டுக் கலக்கி
பொங்கலில் சேர்த்துவிடவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப்
போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி இளம்
பாகு பதம் வந்ததும் இறக்கி வடிகட்டி பொங்கலில் கொட்டிக்
கிளறவும்.

ஏலக்காயைத் தட்டிப் போடவும்.

மற்றொரு வாணலில் நெய் விட்டு முந்திரி, திராட்சை
இரண்டையும் பொன்னிறமாக வறுத்து இவற்றை
நெய்யுடன் சேர்த்து பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்கவும்
பரிமாறவும்.

அருமையான அவல் சர்க்கரைப் பொங்கல் ரெடி.

– இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன்
பகிர்ந்து கொள்ளுங்கள்.

——————————-
மாலைமலர்

கலர் புல் பீட்ரூட் சட்னி!

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் – 4
கடலைப் பருப்பு – 1 தேக்கரண்டி
வெள்ளை உளுந்து – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 5
பூண்டு – 4 பல்
தேங்காய் துருவல் – 0.50 கப்
உப்பு, புளி – தேவையான அளவு
கொத்தமல்லி, புதினா – சிறிதளவு.

செய்முறை:

முதலில், பீட்ரூட்டை தோல் சீவி நறுக்கி, வாணலியில் எண்ணெய்
சிறிதளவு ஊற்றி, வதக்கிக் கொள்ளவும்.
பின், மற்ற பொருட்களை வதக்கி, மிக்சியில் அரைத்தால்,
‘கலர் புல்’லான பீட்ரூட் சட்னி தயார்!

குறிப்பு:

பீட்ரூட்டின் மேல் தோலை மட்டும் தனியாக வதக்கி, மேற்
சொன்ன வகையில், சட்னி செய்தும் சாப்பிடலாம்; சூப்பராக இருக்கும்.

– எஸ்.லோகநாயகி, ஈரோடு.

பூரி போல் சப்பாத்தி

 

சப்பாத்தி செய்யும்போது, கல் சூடானதும் முதலில்
எண்ணெய் விடாமல், வெறும் கல்லில் சப்பாத்தியைப்
போட்டு இரண்டு மூன்று முறை திருப்பிப் போட்டபின்
சிறிது எண்ணெய்விட்டால் பூரி போல் நன்கு எழும்பும்.

தீய்ந்து விடாமல்
ஒரே சீராகச் சிவந்து மிருதுவாக இருக்கும்

ஆர்.பிரகாசம்
——————————————–

பழைய சாதத்துடன் ஒரு டம்ளர் அரிசி, ஒரு கரண்டி
உளுந்து ஊறவைத்து அரைத்து உருளைக் கிழங்கு
போண்டா போடுங்கள்.

சூப்பராக இருக்கும்

-திலகவதி

——————————————-

முடக்கத்தான் பிடி கொழுக்கட்டை

 

தேவையான பொருட்கள்:

முடக்கத்தான் இலை – 2 கைப்பிடி
பச்சரிசி – ¼ கிலோ
சிவப்பு மிளகாய் – 4
மிளகு – ¼ டீஸ்பூன்
தேங்காய் – ½ மூடி
நெய் – 50 மி.லி
பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க: கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம்,
கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன்

செய்முறை:

முடக்கத்தான் இலையை நன்கு கழுவி, பொடியாய் நறுக்கிக்
கொள்ளவும். பச்சரியை நன்கு ஊறவைத்து கழுவி,
தேங்காயைத் துருவி, சிவப்பு மிளகாய், தேங்காய் பூ
இரண்டையும் பச்சரிசியுடன் சேர்த்து கரகரப்பாய்
அரைக்கவும்.

வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சூடானதும் முடக்கத்தான்
இலையை துவரும்படி வதக்கவும். மிளகைப் பொடி செய்து,
மிளகுப் பொடி, உப்பு, வதக்கிய முடக்கத்தான் இலை
ஆகியவற்றை அரைத்த பச்சரிசி மாவில் சேர்த்துக் கலந்து
வைக்கவும்.

வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க
கொடுத்தவற்றை தாளித்து, கலந்து வைத்த மாவைப்
போட்டு நிறம் மாறும்வரை வதக்கவும். பின் இறக்கி ஆற
வைக்கவும்.

பின் நெய்யைத் தொட்டுக்கொண்டு பிடி கொழுக்கட்டைகளாய்
பிடித்து ஆவியில் வேகவிடவும். இந்த கொழுக்கட்டை மூட்டு வலி,
வாய்வு பிடிப்புக்கு மிகவும் நல்லது.

ஆவியில் வேக வைப்பதால் இதன் மருத்துவத்தன்மை
முழுமையாய் கிடைக்கும்.

———————————–
நன்றி-ஈஷா சத்குரு ஓஆர்ஜி

வெண்ணெய் பாதுஷா

பாலாடை உருண்டை & இனிப்பு முறுக்கு

சேமியா கட்லெட்

டிப்ஸ்…டிப்ஸ்

சளிக்கு நிவாரணம் தரும் தனியா சூப்தேவையான பொருட்கள் :

சீரகம் – கால் கப்
தனியா – கால் கப்
மிளகு – 2 டீஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
எலுமிச்சை சாறு – சிறிதளவு
தண்ணீர் -2 கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கு

செய்முறை :

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சீரகம், தனியா, மிளகு ஆகிய மூன்றையும் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும். இந்த கலவையுடன் தண்ணீர் சேர்த்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அந்த தண்ணீர் கலவையுடன் உப்பு சேர்த்து அடுப்பில் கொதிக்கவைக்க வேண்டும்.

நன்றாக கொதித்து பக்குவம் வந்ததும் இறக்கி, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பரிமாறவும்.

சூப்பரான கொத்தமல்லி சூப் ரெடி.

நன்றி- மாலை மலர்

« Older entries