சில படங்களை படம் அல்ல பாடம் என்பது சரியா?

unnamed (19).jpg

 

iq.jpg
எல்லா வாய்ப்புகளும் நமக்கானவை அல்ல.
சில நம்மை பொறியில் சிக்கவைக்க கூடும்

இன்னொருத்தனை அழிக்க நினைதால்,
நமது புத்தி மங்கி
நாமே அழிய வேண்டிய நிலை வரும்

உனக்கு எது நன்றாக வருமோ அதை செய்.
இங்கு பறவைக்கு பறப்பது என்பது அதன்
இயற்கையான திறமை

ஒவ்வொருத்தருக்கும் எல்லை உண்டு.
உன் எல்லையை நீ தாண்டாதே!

தலைக்கனத்தோட ஆபத்தை அணுகாதே!

——————————
-பாக்யா

Advertisements

பொது அறிவு கேள்வி பதில்கள்

1. ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத
இந்திய பிரதமர் யார்?
திரு. சரண்சிங்.

2. உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்
படுகிறது?
ஜூன் 5.

3. மனித உடலில் வியர்க்காத பகுதி எது?
உதடு.

4. ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்?
கிட்டத்தட்ட 2.5 ஏக்கர்.

5. வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன?
அராக்கிஸ் ஹைபோஜியா.

6. பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?
விஷ்ணு சர்மா.

7. வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும்,
இரவும் சரியாக 12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?
மார்ச்சு 21.

8. மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை?
22 .

9. ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது?
நாக்கு.

10. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?
மோகனாங்கி.

11. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது?
வெங்காயம்.

12. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது?
மூன்றாம் பிறை.

13. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?
தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.
அவர் 1879ல் எழுதிய ‘பிரதாப முதலியார் சரித்திரம்’தான் தமிழில்
முதல் உரைநடை வடிவ நாவல்.

14. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து
கணிக்கப்படுகிறது?
அலகாபாத்.

—————————————

பெண்புத்தி பின்புத்தியா?

பாரதியாரோ, “எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண்ணிங்கே
இளைப்பில்லை காண்…” என்றார். ஆனால் பெண்புத்தி பின்புத்தி
என்றும் பழமொழியும் உண்டு.

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால், இன்னும் சமூகத்தில்
ஏற்றத்தாழ்வுகள் ஏன்? சத்குருவிடம் இதைக் கேட்டபோது…

வளைகுடா நாடுகளுக்கு வந்திருந்த ஒரு அமெரிக்க வீரன் அங்கே
ஒரு வித்தியாசமான காட்சியைப் பார்த்தான். உள்நாட்டைச்
சேர்ந்த ஒருவன் தெருவில் நடந்து வர, இருபதடி இடைவெளிவிட்டு
நான்கு பெண்கள் அவனைத் தொடர்வதைக் கவனித்தான்.
விசாரித்தான்.

“நான்கு பேரும் என் மனைவிகள்” என்றான் அவன்.

“என்னது… நான்கு மனைவிகளா? கொடுத்து வைத்தவன் நீ” என்று
பொருமிய அமெரிக்கன் கேட்டான்… “அழகாக அவர்கள் புடைசூழ
நடக்காமல், ஏன் தனியே முன்னால் நடக்கிறாய்?”

“இங்கே ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள் உடன் வர முடியாது.
பின்னால்தான் தொடர வேண்டும்”.

சில நாட்களில் அமெரிக்காவுக்கும், அந்த நாட்டுக்கும் போர்
வெடிக்கும் அபாயச் சூழல் வந்தது. அப்போது, அதே ஆசாமி வெளியே
வந்தபோது, அவனுக்கு இருபதடி முன்னால் அந்த நான்கு
மனைவிகளும் நடந்து சென்றனர். அமெரிக்க வீரன் ஆச்சர்யமானான்.

“அட, எப்போதிலிருந்து பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு
செய்தாய்?” என்று கேட்டான்.

அவன் சிரித்தான். “முன்னுரிமையாவது, மண்ணாங்கட்டியாவது!
இந்த அமெரிக்க ராஸ்கல்கள் எங்கெங்கே கண்ணிவெடிகளைப்
புதைத்து வைத்திருக்கிறார்களோ? தெரியாமல் மிதித்துத் தொலைத்து
விட்டால்? அதனால்தான் பெண்களை முன்னால் அனுப்புகிறேன்.”

இதை ஜோக்காகக் கேட்டுவிட்டு சிரிக்கலாம். ஆனால், பெண்களுக்கு
எதிராக இதில் ஒளிந்திருக்கும் அநியாயத்தை நீங்கள் தவறவிட
மாட்டீர்கள். ஆண்கள் வகுத்த சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களைக்
குருட்டுத்தனமாக நம்பி தன்னை மூழ்கடித்துக் கொள்ளும் எந்தப்
பெண்ணுக்கும் முழுமையான சுதந்திரம் என்பதன் ருசியே கிடைக்காது.

இன்னொரு பக்கம், ஆண்களைப் போல் உடுத்திக் கொள்வதாலோ,
அதிகாரம் செய்வதாலோ, முரட்டுக் காரியங்களில் ஈடுபடுவதாலோ,
சுதந்திரம் கிடைத்துவிடுவதாக சில பெண்கள் நினைத்துக் கொள்வதைப்
பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது.

ஆண்களுடைய போலிகளாக, பிம்பங்களாக நடந்து கொள்வதில்
பெண்களுக்கு என்ன பெருமை இருக்க முடியும்? அவர்கள் தங்களைவிட
ஆண்களை உயர்வாக நினைத்து, அந்த உயரத்தை எட்டுப் பிடிக்கப்
பார்க்கிறார்கள் என்றல்லவா ஆகிவிடும்?

உண்மையில், வாழ்க்கையை அறிவுபூர்வமாக வாழ முற்பட்டு, அதை
விட்டு வெகுதூரம் ஆண் விலகி வந்துவிட்டான். வாழ்க்கையை
உணர்வுபூர்வமாக வாழத் தெரிந்திருப்பதால், பெண்ணின் அனுபவங்களே
ஆழமானவை.

அது ஆணுக்கு சுலபத்தில் கிடைக்காத ஒன்று. அதனால் ஒரு பெண்ணைத்
தன் அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை ஆண்
புரிந்து கொண்டான். இது புரியாமல், ஆண்களின் நிழலில் இருப்பதைப்
பெண்கள் ரசித்தார்கள்.

பெண்ணை மதிக்காத எந்தக் குடும்பமும் உயரப்போவதில்லை.
பெண்கள் எந்தத் தரத்தில் வைக்கப்பட்டு இருக்கிறார்களோ, அதைப்
பொறுத்துதான் அந்த சமுகத்தின் தரமும் அமையும்.

கோயில்களுக்குள் பெண்களை அனுமதிக்காமல் இருக்க தீட்டு என்று ஒரு
புதிய தந்திரத்தைக்கூட ஆண் பயன்படுத்துகிறான். உண்மையில்
இயற்கை தந்திருக்கும் சில உடல் மாற்றங்களை அசிங்கமாக
நினைப்பதுதான் கேவலம். பொதுவாக, வாழ்க்கையில் கிடைக்கும்
எதையும் ஆண் தன் புத்தியை வைத்துப் பார்த்துக் கொண்டு இருக்கும்
நேரத்தில், பெண் அதை அனுபவித்து உணர்ந்து விடுகிறாள்.

ஆண் கணக்குப் போட்டுக் கொண்டு இருக்கும் நேரத்தில், பெண்
நேரடியாக உணர்வுபூர்வமாக வாழ்ந்துவிடுகிறாள்.

ஆண் அறிவுபூர்வமாக இருப்பதும் பெண் உணர்வுப்பூர்வமாக இருப்பதும்
பெரிய கோளாறு அல்ல… அது அச்சப்பட வேண்டிய பிரச்சனையும் அல்ல.
உண்மையில், இரண்டும் இணைந்து செயல்பட்டால், பல உன்னதங்கள்
கிடைக்கும். அற்புதங்கள் நேரும்!

அப்புறம் கோளாறு எங்கே வந்தது? ஒன்றைவிட மற்றது உயர்ந்தது அல்லது
தாழ்ந்தது என்ற நினைப்புதான் அத்தனை பிரச்சனைகளுக்கும் அடிப்படைக்
காரணம்.

ஒரு பெண் சந்தோஷமாக இருந்தால்தான் அவளைச் சுற்றியுள்ளவர்களும்
சந்தோஷமாக இருக்க முடியும். அதேபோல் ஓர் ஆண் மகிழ்ச்சியாக
இல்லையென்றால், அவனைச் சுற்றியிருப்பவர்களின் மகிழ்ச்சியும் போய்
விடும்.

இயற்கை, ஆணுக்கும், பெண்ணுக்கும் சில அடிப்படைக்
காரணங்களுக்காகவே வெவ்வேறு உடல் அமைப்புகளையும், வித்தியாசமான
உடல் உறுதிகளையும் வழங்கி இருக்கிறது.

இருவருக்கும் உடல்ரீதியாக வெவ்வேறு இன்பங்கள் இருக்கலாம்.
ஆனால், அமைதியும், முழுமையான ஆனந்தமும் உடல் தொடர்பானது
இல்லை. ஆணுக்கு வேறு ஆனந்தம், பெண்ணுக்கு வேறு ஆனந்தம் என்று
இயற்கை பாகுபாடு பார்க்கவில்லை.

ஆனந்தமாக இருப்பது என்பது மனித குலத்தின் அடிப்படை. இதைப்
புரிந்து நடந்து கொண்டால், சமூகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எந்த
ஏற்றத்தாழ்வும் இருக்காது!

——————————
——————————-

கடன்பட்டார் நெஞ்சம்…

q a.png

தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை..!

தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” –
யார் கூற்று?
விடை: பாரதிதாசன்
——————————–
 –
கூடுகட்டி வாழும் பாம்பு எது?
விடை:    இராஜநாகம்
————————–
மணிமேகலையில் விருச்சக முனிவரால் பசிநோய்
சாபம் பெற்றவள் யார்?
விடை:  காயசண்டிகை
———————————
 “தென்னிந்தியாவின் ஏதென்ஸ்” என்னும் புகழ்
மிக்க நகரம்
விடை:  மதுரை
—————————–
நாயக்கர் மரபில் முடிசூட்டிக் கொண்ட பெண்ணரசி யார்?
விடை–இராணி மங்கம்மாள்
——————————-
 “உலகின் எட்டாவது அதிசயம்” எனப் பாராட்டப்படுபவர்
விடை: கெலன் கெல்லர்
——————————
14. திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும்
தொடர்புள்ளது?
விடை:   7
——————————–
 தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள்
இடம் பெறும் நூல் எது?
விடை: குறிஞ்சிப் பாட்டு
———————————-
 “மனித நாகரிகத்தின் தொட்டில்” என அழைக்கப்படுவது
எது?
விடை:  இலெமூரியா
———————————–
-kalvi mani

தஞ்சை பெரிய கோவிலை எப்படிக் கட்டியிருப்பார்கள்?

மு. குமரன், பண்ணந்தூர், கிருஷ்ணகிரி:
தஞ்சை பெரிய கோவிலை எப்படிக் கட்டியிருப்பார்கள்?
விளக்குங்களேன்?


பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பதில்
தட்சிணமேரு (தெற்கு இமயமலை) என்று அழைக்கப்படுகின்ற
தஞ்சை பெரிய கோவிலை ஒரு சிறிய கேள்வி பதிலில்
விளக்கவது கடினம். குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள்
இக்கோவில் குறித்த அரிய நூல் ஒன்று எழுதியிருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக டிஸ்கவரி சேனல் தமிழ்
ஒளிபரப்பில் இக்கோவில் எப்படி கட்டப்பட்டிருக்கும் என்பதை
மிக நுட்பமாக செயல்முறையில் ஒளிபரப்பினார்கள்.இப்போது
கூட யூடியுப்பில் பார்க்கலாம்.

பொன்னியின் செல்வனாக வருணிக்கப்படுகின்ற
இராஜராஜசோழனே இப்பெருவுடையார் கோவிலை
கி.பி. 1010ஆம் ஆண்டில் தொடங்கி, 8 ஆண்டுகளில் வியத்தகு
முறையில் கட்டிமுடித்தான் என்பது உலக வரலாற்றில் ஒரு
அதிசயம்.

மைய கோபுரம் 150 அடி நீளமும், 190 அடிக் கூர்நுனிக்
கோபுரமாக ஒரே கலசத்துடன், 15 தளங்களைக் கொண்டதாகக்
காணப்படும் இக்கோவில், உலக அதிசயங்களில் ஒன்றென
நாம் கருதலாம். இக்கோவில், முழுவதும் கட்டப்பட்டிருப்பது,
விலையுயர்ந்த கிரானைட் கற்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருவறையில் அமைந்திருக்கும் லிங்க வடிவம், உலகத்திலேயே
பெரிய லிங்கமாகும். எழுத்தாளர் பாலகுமாரனின் உடையார்
என்ற நாவலையும் படியுங்கள் இக்கோபுரம் குறித்த இன்னும்
பல செய்திகளை அறியலாம்.

————————
நன்றி – மஞ்சரி

சமையல் சோடா உடல்நலத்துக்கு கேடு விளைவிக்குமா?

ச.ஜெயலட்சுமி, கொரட்டூர்:
என் தோழி எல்லா வகையான இனிப்புகளுக்கும்,
பக்கோடா, கீரை போன்றவற்றுக்கும் சமையல் சோடா
சேர்ப்பாள்.
சமையல் சோடா உடல்நலத்துக்கு கேடு விளைவிக்குமா?

சமையல் சோடாவிற்கு மாற்றாக என்ன பயன்படுத்தலாம்?

சமையல் சோடா உடலுக்குக் கெடுதல் தான்.
இனிப்பு வகைகளுக்கு சமையல் சோடா தேவையில்லை.
அதேபோல் பக்கோடா, கரகரப்பாக இருக்க சிறிது அரிசி
மாவு சேர்த்தால் போதும்.

கீரை நிறம் மாறாமல் சமைக்க திறந்து வைத்து சமைத்தால்
போதும். சுவையாகவும் இருக்கும்.

சோடா உப்பை எவ்வளவுக்கு எவ்வளவு தவிர்க்கிறோமோ,
அவ்வளவு நல்லது

———————————–
ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்
நன்றி- மங்கையர் மலர்

முறையாக விவாகரத்துப்பெறாத கணவர் மீது…

பெயர் வெளியிட விரும்பாத வாசகி:
எனக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் மட்டுமே
கணவரோடு இருந்தேன். அதன் பின்னர் அவர் வேறு
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
என்னிடம் முறையாக விவாகரத்துப் பெறவில்லை.
அவரைப் பிரிந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது
நான் அவர் மீது வழக்குத் தொடுக்க முடியுமா?
எந்த நீதிமன்றத்தில் வழக்குப் போடவேண்டும்?

உங்கள் கணவர் செய்தது கிரிமினல் குற்றமாகும்.
உங்கள் வாழ்வாதாரத்திற்கு அவரிடம் கட்டாயம்
இழப்பீடு கேட்டுப் பெறலாம். உங்கள் மாவட்ட கலெக்டர்
அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறையில், நடந்த
சம்பவத்தை புகாராக எழுதி உரிய ஆதாரங்களுடன்
அங்குள்ள பெண்கள் பாதுகாப்பு அலுவலரைத் தொடர்பு
கொள்ளுங்கள். அவர்களே நீதிமன்றத்தில் வழக்குத்
தொடுக்க உதவி செய்வார்கள். கட்டாயம் உங்களுக்கு
நீதி கிடைக்கும்.

———————
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கணேச மூர்த்தி

நன்றி-மங்கையர் மலர்

தராசு பதில்கள் – கல்கி

கே.என். சுப்பிரமணியன், மேற்கு சைதாப்பேட்டை:
பிரதமர் மோடியின் மலேசிய பயணம்?

ஆசியாவின் வளர்ச்சிக்கு இந்தியா பங்களிக்கும் காலம் இது,
என்று உணர்ச்சிபொங்க பேசிய பிரதமர் அங்குள்ள
முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு அழைத்தார். இந்தியாவின்
வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு முக்கியமானது என்றும்
திருக்குறளை மேற்கோள்காட்டியும் மழலைத் தமிழில் பேசி
மலேசியத் தமிழர்களை அசத்தினார்.

ஆனால், இதெல்லாவற்றையும் விட, நம்ம ஊர் மீடியாக்களுக்கு,
மோடிக்குப் பின்னால் பறந்த இந்தியக் கொடி தலைகீழாக
இருந்தது தான் பெரிய குறை!

கல்யாணத்தில் மூக்கைப் பிடிக்க சாப்பிட்டுவிட்டு, பிரமாதம்
ஆனால் ரசத்தில் ஒரு சிட்டிகை உப்பு ஜாஸ்தி என்பதுபோல!

————————————-

எஸ்.ரீனு, மாடம்பாக்கம்:

அரசு ஊழியர்கள் செய்யும் வேலைக்கு தற்போது கொடுக்கப்படும்
சம்பளமே மிக அதிகமாக இருக்கும் போது மேலும் உயர்வு தேவையா?

உலக நாடுகள் பலவற்றுடன் ஒப்பிட, இங்கே அரசு ஊழியர்கள்
பெறும் சம்பளம் மிக அதிகம்தான். பிற நாடுகளில் மக்களின் சராசரி
வருமானத்தைவிட அரசு ஊழியர்கள் இருமடங்கு அதிகம் பெறுகின்றனர்.
இங்கே பத்து சதவிகிதம் அதிகம்! சம்பளம் உயர, பணபுழக்கம் அதிகரிக்க,
விலைவாசிகள் விண்ணளாவும், மறுபடி அகவிலைப்படி ஏறும்.
விஷ வட்டம் தான். ஏழாவது சம்பள கமிஷன் அனைத்து ஊழியர்களுக்கும்,
திறன் அடிப்டையில் வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என்று
பரிந்துரைத்துள்ளது வரவேற்கத்தக்கது.

தனியார் துறையின் இந்த அணுகுமுறை, அரசுத் துறையில் நடைமுறைச்
சாத்தியமா என்பது சந்தேகமே. பல்வேறு ஊழியர்களும் தொழிற்
சங்கங்களும் கூடுதல் சம்பளத்துக்குப் போராடுவதைக் காட்டிலும்
விலைவாசிகள் குறைய வற்புறுத்திப் போராடலாம். அரசின் பொருளாதாரக்
கொள்கை சீர்ப்படும்.

——————————

ஜி. லட்சுமி வாசுதேவன், திருவான்மியூர்:
திப்பு சுல்தான் விவகாரத்தில் மதல்வர் சித்தராமையா
பதவி விலக வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்துவது?

திப்பு சுல்தான் பிறந்த தினத்தைக் கொண்டாட
இப்போது அவசியம் என்ன?
மதச்சார்ப்பற்ற மன்னர் என்றெல்லாம் பாராட்டுவானேன்?
மதச்சார்ப்ப என்ற சொல்லாடம் இருபதாம் நூற்றாண்டைச்
சேர்ந்ததது.

திபபு ஆண்ட காலத்தில் மதச்சார்பின்மைக்கு இடமே இல்லை.
அவர் பிரிட்டிஷாருடன் போராடி தமது ராஜ்யத்தைக் காத்துக்
கொள்ள முயன்ற வீரம்மிக்க ஒரு அரசர்.
காங்கிரஸ் தேவையின்றி ஒருவரைக் கொண்டாடுகிறது;

பா.ஜ.க. உடனே அதில் குற்றம் கண்டு குளிர் காய்கிறது.
இருவருமே சரித்திரத்தைத் திரிப்பதுடன் தங்கள் கருத்தே
சரி என்று சண்டித்தனம் செய்கிறார்கள்.

———————————-

சூரியா ஸ்ரீதர், காஞ்சிபுரம்:
மலம் அள்ளச் சொல்லி மாணவனை வற்புறுத்திய
ஆசிரியை கைது செய்யப்பட்டது?

ஆசிரியையின் செயல் கண்டிக்கத்தக்கது.
அதே சமயம் இதைச் சாதி ஏற்றத்தாழ்வாகவோ
வன்கொடுமையாகவோ மட்டும் பார்ப்பதில் அர்த்தமில்லை.

நகராட்சி நடுநிலைப்பள்ளியின் வகுப்பறையில் மலம் கழிக்க
வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது?
அரசு கல்வி கூடங்களில் போதுமான வசதிகள் இல்லை
என்பதையே இது நிரூபிக்கிறது. ஆசிரியை தண்டிக்கப்படுவது
இருக்கட்டும்; போதிய வசதிகளை உருவாக்கித் தராத பள்ளிக்
கல்வித் துறைக்கு என்ன தண்டனை?

———————————–

எம்.விக்னேஷ், மதுரை:
முதலமைச்சரின் உத்தரவுப்படிதான் பருவமழை பெய்தது
என்று சேலம் ஆட்சியர் கூறியிருக்கிறாரே?

அமைச்சர்கள் மட்டுமல்ல, அதிகாரிகள் கூட, பேச்சை
ஆரம்பிக்கும்போதே, ‘முதலமைச்சர் அம்மாவின் உத்தரவுப்படி’
என்று சொல்லிச் சொல்லியே பழக்கப்பட்டுவிட்டார்கள்.

சேலம் ஆட்சியரும் அப்படித்தான் ஆரம்பித்தார்.
உளறலாக அது உருவெடுத்து விட்டது. அபரிதமித மழையால்
மக்கள் படும் அவதிக்கு ஒரு மாற்றாக சிரிப்பு டானிக்!

—————————–

அறிவியல் சொல்லும் தோராய மதிப்பீடுகள்

வெ.இறையன்பு பதில்கள்

« Older entries