நம்பிக்கை – குட்டி கதை

unnamed (2).jpg

சாதுர்யம் – ஒரு பக்க கதை

unnamed (6).jpg

நீட் எக்ஸாம்…

unnamed (9).jpg

ரிசல்ட் – ஒரு பக்க கதை


கிரவுண்டில் விளையாடி விட்டு உள்ளே வந்த
லோகேஷ், அப்பாவின் அருகில் வந்து மெல்லக்
கேட்டான்,

அப்பா, எதிர்வீட்டு அங்கிளுக்கு என்ன சம்பளம்?

அப்படியெல்லாம் கம்பேர் பண்ணுவது நாகரிமில்லை…
அது சரி எதுக்குத் திடீர்னு இப்படிக் கேக்கறே?

நாளைக்கு எனக்கு ரிசல்ட் வரப்போகுது இல்லே…
அதான் என்றான் அவன்

அதுக்கும் இதுக்கும் என்ன ரிலேஷன்?

அதில்லேப்பா..எதிர்வீட்டுப் பையனுக்கும் ரிசல்ட் வருது…
அம்மாவும் நீங்களும் அவனோட மார்க் என்ன,
என்னோட மார்க் என்னன்னு கம்பேர் பண்ணிப் பேசுவீங்க.
இப்படி செய்யறதை அவனும் விரும்ப மாட்டான்…
நானும் விரும்பலை…அதுக்குதான் ஆரம்பிச்சேன்!

சொல்லிவிட்டுத் தெருப்பக்கம் விரைந்த அவனைப்
பார்த்தார் விஸ்வம்.
எதிர் விட்டீப் பிள்ளையுடன் சேர்ந்து கிரிக்கெட் ஆடத்
தொடங்கி விட்டான் அவன்

————————————
பர்வதவர்த்தினி
குமுதம்

கொடுப்பினை – ஒரு பக்ககதை


நீண்ட நாட்களுக்குப் பின் தன் கிராமத்திற்கு
வந்திருந்தார் இண்டஸ்ட்ரியலிஸ்ட்
கண்ணபிரான்.

வந்தவர் களத்து மேட்டில் தன் பால்ய சிநேகிதன்
கார்மேகதைக் கண்டார். தூக்குவாளிக் கஞ்சியை
கருவாட்டைக் கடித்துக்கொண்டு காலை உணவை
உண்டு கொண்டிருந்தார் கார்மேகம்

கண்ணபிரான் நண்பனை நலம் விசாரித்தார்.
சலித்துக் கொண்டார் கார்மேகம்,

என்ன வழ்க்கைடா இது…என் கூடப்படிச்ச
நீ நல்லாப் படிச்சு இப்ப பெரிய ஆளா ஆயிட்ட….
ஆனா என்னைப் பாரு, இதே நிலத்துல கிடந்து
மாரடிக்கிறேன். ஒரு முன்னேற்றமும் இல்லை.
அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்ம்டா’
என்றார்

நண்பனைக் கேட்டார் கார்மேகம். நீ எப்படி இருக்கிற?
என்று.

பணம், காசு நெறைய இருக்கு, இருந்து என்ன
புண்ணியம்? உடம்புல இல்லாத வியாதி இல்லை.
ஷூகர், பிரஷர், ஆஸ்துமான்னு பாடாப்படுகிறேன்.
நீ பாரு…
இன்னும் வாட்டசாட்டமா இளைஞர்களைப் போல
இருக்கற

கருவாடு கஞ்சின்னு ரசிச்சு நீ சாப்பிடுறதை பார்க்கும்
போது உங்கிட்ட ஒரு வாய் வாங்கி சாப்பிடணும்னு
ஆசையா இருக்குது.
என்ன செய்ய? என் உடம்பு இதை எல்லாம் ஒத்துக்காது,
மாத்திரை மருந்துல தான் என் வண்டி ஓடுது.

இதுக்கும் ஒரு கொடுப்பினை வேணும்டா’ என்றார்
கண்ணபிரான்

————–

வி.சகிதாமுருகன்
குமுதம்

கண்டிஷன் – ஒரு பக்க கதை

.தன் கிராமத்தில் தனக்கு வசதியான வீடும் அங்கிருந்து
சில கிலோ மீட்டர் தொலைவில் டூ வீலரில் போய் வரும்
வகையில் வசதியாக பணிபுரியும் இடமும் இருந்தாலும்
பிள்ளைகளின் மேற்படிப்புக்காக, அவர்கள் படிக்கும்
பள்ளியின் அருகிலேயே பல கிலோ மீட்டர் தொலைவில்
வாடகைக்கு குடிபோக நினைத்தான் பிரசாத்

பத்து குடியிருப்புகள் கொண்ட காம்பவுண்ட் ஒன்றில்,
‘டூ லெட்’ பலகை தொங்கியதைப் பார்த்து அவ்வீட்டின்
உரிமையாளரான சாந்தாவைச் சந்தித்து விவரத்தைக்
கூறினான்.

அதற்கு அவன், வீடு கொடுக்கிறதைப் பத்தி எந்த
ஆட்சேபணையும் இல்லை. ஆனா ஒரே கன்டிஷன்!
எங்க காம்பவுண்டுல குடியிருக்கிற யாருக்குமே குடிக்கிற
பழக்கம் கிடையாது. உங்களுக்கும் குடிப்பழக்கம்
இல்லேன்னா தாராளமா வந்து தங்கிக்கலாம்’ என்றாள்

அவளே தொடர்ந்து, ;இப்போ குடிக்க மாட்டேன்ன்னு
சொல்லிட்டு அப்புறமா குடிச்சிடு வந்தா, அடுத்த நிமிஷமே
உங்க அட்வான்ஸ் பணத்தை வாசல்ல வச்சிடுவேன்…
உடமே வீட்டை காலி செஞ்சிடணும், சம்மதமா? என்று
கண்டிப்புடன் கூறினாள்

பிரசாந்தும் ‘எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.
உங்க கண்டிஷனுக்கு சம்மதிக்கிறேன்’ என்று கூறி
முன் பணம் கொடுத்தான்.

மறுவாரம குடியேறிய பின், பிரசாந்தின் மனைவியிடம்,
‘ஆமா …உங்க வீடுக்காரர் எங்கே வேலை பார்க்கிறார்?
என்று சாந்தா கேட்க, ‘டாஸ்மாக்கில்!’ என்று அவள்
சொல்ல வாயடைத்து நின்றாள்..!!

————————————
வ.முருகன்
குமுதம்

 

 

 

10 செகண்ட் கதைகள்

unnamed (7).jpg

அப்பா – ஒரு பக்க கதை

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பன் வீட்டுக்குப்
போயிருந்தேன். கொல்லைப்புறத்தில் நண்பன், மனைவி,
குழந்தைகள் என குடும்பமே சேர்ந்து கன்றுக்குட்டி சைசில்
இருந்த வெளிநாட்டு நாயைக் குளிப்பாட்டியபடி குதூகலமாக
இருந்தார்கள்.

‘‘வாடா’’ என்றபடி கைகுலுக்க வந்தான் நண்பன்.

‘ஹி… ஹி…’ என்று இளித்து கையை இழுத்துக்
கொண்டேன்.

உபசரிப்பின்போது கூட நண்பனின் பேச்சு முழுக்க அவன்
புதிதாக வாங்கியிருந்த வெளிநாட்டு நாயைப் பற்றித்தான்
இருந்தது. அதன் உணவு முறை, பழக்க வழக்கம், அதன்
சேட்டைகள், வீரதீர பராக்கிரமங்கள் என்று பெருமை பொங்க,
எனக்கு போரடிக்கும் அளவுக்கு பேசினான்.

நான் சட்டென்று நினைவுக்கு வந்தவனாகக் கேட்டேன்,
‘‘ஆமா… எங்கேடா உங்கப்பா? வந்ததுல இருந்து பாக்கறேன்…
ஆளையே காணோம்?’’

‘‘ப்ச்… வயசு எழுபதுக்கு மேல ஆச்சுடா. உடம்புல
பிரச்னைகள் அதிகமாயிடுச்சு. குளிக்க, சாப்பிடன்னு
எல்லாத்துக்கும் உதவி தேவைப்படுது. படுக்கையிலேயே
பாத்ரூம் போயிடறார். கிளீன் பண்ண மனைவி தயங்கறா.
அதனால முதியோர் இல்லத்துல சேர்த்திருக்கோம்.
அங்க தனியா ஆளெல்லாம் போட்டு நல்லா பாத்துக்கறாங்கடா’’
என்றான் அவன் கூச்சமே இல்லாமல்.

வெளிநாட்டு நாய்க்குக் கூட அந்த பதில் புரிந்தது போல…
அது கோபமாக ‘வள் வள்’ என்று குரைத்துத் தீர்த்தது!

—————————–
குங்குமம்

அவநம்பிக்கை – ஒரு பக்க கதை

 

‘‘ஏங்க இப்பல்லாம் ஆபீஸ்ல இருந்து வந்தாலே
டல்லா இருக்கீங்க?’’ – ஹரியிடம் கேட்டாள் அற்புதா.

‘‘ப்ச்… இந்த ஆபீஸே எனக்குப் பிடிக்கல. நான் வேலைக்கு
சேர்ந்து மூணு மாசமாகியும், எம்.டி என் மேல்
அவநம்பிக்கையாகவே இருக்கார். நான் செய்யற வேலையை
எல்லாம் இன்னொரு தடவை செக் பண்றார். நான் கரெக்ட்
டைமுக்குஆபீஸுக்கு வந்தேனா, லன்ச் பிரேக் முடிஞ்சு
ஒழுங்கா வந்தேனான்னு கூட பியூன்கிட்ட கேக்கறாராம்!’’

அற்புதாவுக்கு கோபம் வந்தது.

‘‘அவநம்பிக்கை பேர்வழிகள்கிட்ட இருக்க வேணாங்க.
இந்த மாசத்தோட ரிசைன் பண்ணிடுங்க. உங்க திறமைக்கு
வேற வேலையா கிடைக்காது? இப்போதைக்கு ரெண்டு நாள்
லீவ் போட்டுட்டு குழந்தைகளோட ஊருக்குப் போய்ட்டு
வரலாம்!’’ என்றாள்.

‘‘மிஸ்டர் ஹரி, இந்த மாசத்துல இருந்து உங்களுக்கு
5 ஆயிரம் இன்க்ரிமென்ட் போட்டிருக்கேன்’’ என்று சொல்லி
கை கொடுத்தார் எம்.டி.

ஹரிக்கு மகிழ்ச்சி + குழப்பமாக இருந்தது. எம்.டியின்
உதவியாளர்தான் அதைத் தீர்த்து வைத்தார்.

‘‘எம்.டிக்கு இப்பவும் உங்க மேல அவநம்பிக்கைதான் சார்.
நீங்க ரெண்டு நாள் லீவ் போட்டதும், வேற வேலைக்குத்தான்
முயற்சி பண்றீங்களோன்னு பயந்துட்டார்.
உங்களை இங்கேயே லாக் பண்ணத்தான் இன்க்ரிமென்ட்!’’
என்றார் அவர்.

எம்.டியின் அவநம்பிக்கை ஹரியைப் பார்த்து ‘ஹாய்’
சொன்னது.

—————————
குங்குமம்

இரவல் – ஒரு பக்க கதை

‘‘கௌரி, அந்தப் பேப்பரை எடு.
பாங்க் கொள்ளை பத்தின நியூஸ் பாக்கணும்’’ – சோபாவில்
அமர்ந்தபடி கேட்டான் பாலாஜி.

‘‘காலையில பக்கத்து வீட்டு பார்வதி அக்கா வாங்கிட்டுப்
போச்சுங்க. அப்புறமா வாங்கித் தர்றேன்’’ – காபி
கலந்தபடியே பதில் தந்தாள் கௌரி.

‘‘எப்ப பார் எதையாவது இரவல் கொடுத்துக்கிட்டு…
இந்தப் பழக்கத்தை மாத்தவே மாட்டியா?’’ – பாலாஜி
சிடுசிடுத்தபோதே, கோடி வீட்டு கீதா மூச்சிரைக்க ஓடி வந்தாள்.

‘‘அக்கா! நம்ம பவானியக்கா ரோட்டுல நடந்து போகும்போது
அவ கழுத்து செயினை திருடன் அறுத்துட்டுப் போயிட்டானாம்…’’

‘‘ஐய்யயோ! காலையிலதானே அவ என் செயினை
கல்யாணத்துக்குப் போகணும்னு இரவல் வாங்கிட்டு போனா…
அதுக்குள்ள இப்படி ஆயிருச்சே’’ என்று அலறினாள் கௌரி.

‘‘பயப்படாதீங்கக்கா! அந்தத் திருடங்க கடைத் தெரு பக்கம்
போகும்போது, நம்ம பார்வதியக்கா வீட்டுக்காரர் அடையாளம்
தெரிஞ்சு சொல்லிட்டார். எல்லாரும் மடக்கிப் பிடிச்சு நகையை
மீட்டுட்டாங்க.

அதே திருடங்க தான் போன வாரம் பாங்க்ல வேற
கொள்ளையடிச்சாங்களாமே… பேப்பர்ல போட்டோ பார்த்ததா
பார்வதியக்கா வீட்டுக்காரர்தான் சொன்னார்’’ என்று வயிற்றில்
பாலை வார்த்தாள் கீதா.

இரவல் கொடுப்பதிலும் ஒரு நன்மை இருக்கிறது என்று மனதுக்குள்
சொல்லிக்கொண்டான் பாலாஜி.

—————————-
குங்குமம்

 

« Older entries