இயேசு நாதர் உயிர்த் தியாகம் செய்த புனித வெள்ளிஇன்று புனித வெள்ளி. உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ
மக்களால் துக்க தினமாக கடைப்பிடிக்கப்படும் தினம்தான்
புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி.

இந்த நாளில் இயேசு கிறிஸ்து யூதர்களால் சிலுவையில்
அறையப்பட்டார். உலக மக்களுக்காக இந்த சிலுவைத்
தண்டனையை மனமுவந்து ஏற்றுக் கொண்ட தேவன்
இயேசு கிறிஸ்து.வெறும் 30 வெள்ளிக் காசுகளுக்காக
யூதாஸ் இயேசுநாதரை காட்டிக் கொடுத்த போதும்,
அதை புன்முறுவலுடன் பொறுத்துக் கொண்டார்

இயேசு நாதர்.யூதாஸால் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசு நாதரை,
பிலாத்து மன்னனிடம் கொண்டு சென்று நிறுத்தினர்.

பிலாத்து விசாரணை நடத்தினான். ஆனால் இயேசு நாதரிடம்
ஒரு குற்றமும் இருப்பதாக தெரியவில்லையே என்றான்
இறுதியில.

ஆனால் கூடியிருந்த யூத கூட்டமோ, இயேசு நாதரை சிலுவையில்
அறைந்து கொல்ல வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள
கொடும் கைதியான பாரபாஸை விடுவிக்க வேண்டும் என்று
கூச்சலிடமே வேறு வழியின்றி, இயேசுவை சிலுவையில் அறைய
உத்தரவிட்டான் பிலாத்து.

இதையடுத்து கல்வாரி மலையில் உள்ள கொல்கொதா
(கபாலஸ்தலம்) என்ற சிகரத்திற்குக் கொண்டு சென்று
இயேசுவையும், கூடவே இரு குற்றவாளிகளையும் சேர்த்து
சிலுவையில் அறைய உத்தரவிடப்பட்டது.

பிலாத்து மன்னனின் அரண்மனையிலிருந்து இயேசு நாதரை
சிலுவையை சுமக்க வைத்து வழியெங்கும் அவரை
துன்புறுத்தியபடியே கொண்டு சென்றனர்.

வீதியெங்கும் திரண்டு வந்த மக்கள் இயேசு நாதர் படும் பாட்டைக்
கண்டு கண்ணீர் விட்டனர்.கொல்கொதா மலைக்கு கொண்டு
வரப்பட்ட இயேசு நாதரை, காவலர்கள் ஆடைகளைக் களைந்தும்,
சவுக்கால் அடித்தும், தலையில் முள் கிரீடம் சூட்டியும்,
காரி உமிழ்ந்தும், கன்னத்தில் அடித்தும், அவமானப்படுத்தி
ஆனந்தித்தனர்.

ஆனால் அதை தனது பெரு மனதால் பொறுத்துக் கொண்டார்
புன்முறுவலுடன் இயேசு நாதர்.

உலகத்தை காக்க வந்த ரட்சகரான இயேசுநாதர், இந்த உலக
மக்களுக்காக இந்த துயரத்தையும் தாங்கிக் கொண்டார்.

பின்னர் இயேசுநாதரை காவலர்கள் சிலுவையில் அறைந்தனர்.
சிலுவையில் அவர் அறையப்பட்ட போது உலகமே இருளில்
சூழ்ந்ததாக பைபிள் கூறுகிறது.

———————————–
தினபூமி

“கீதா ஜெயந்தி’


மகாபாரதத்தில் கவுரவர்களோடு பாண்டவர்கள் அதர்மத்தை
எதிர்த்து தர்மத்தை காக்க யுத்தம் செய்து கொண்டிருந்தபோது
வைகுண்ட ஏகாதசி நாளன்று அர்ஜுனனுக்குக் கீதையை பகவான்
கிருஷ்ணன் போதனை செய்தார்.

எனவே இந்தநாளை, “கீதா ஜெயந்தி’ என கொண்டாடுகின்றனர்.

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்

gallerye_06512034_1642448.jpg

gallerye_065130849_1642448.jpg


திருச்செந்தூர் :
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம்
இன்று மாலை நடந்தது. அறுபடை வீட்டில் திருத்தணி
தவிர திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி,
சுவாமிமலை, பழமுதிர்ச்சோலையில் பக்தர்கள் குவிந்தனர்.

புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில்
கந்தசஷ்டி விழா அக்டோபர் 31ம் தேதி துவங்கியது.
நாள்தோறும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்த நி
லையில், இன்று மாலை முருகப் பெருமான் சக்திவேல்
வாங்கும் நிகழ்வு நடந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி
நடந்தது.

கந்தசஷ்டி விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு
பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில்
இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில்
குவிந்தனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு
போடப்பட்டிருந்தது.

—————————-
தினமலர்

 

திருச்செந்தூரில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழாகந்தசஷ்டி ஆரம்பம் – 31.10.2016

முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை
சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே
கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது.

இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி
விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்?

சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்
படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக
மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன்
வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத
அமாவாசையன்று யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர்.

யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு
வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன.

அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான்
அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என
மகாபாரதம் கூறுகிறது.

கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை
எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி
மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை
எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர்.

முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும்
விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி
கொண்டாடப்படுகிறது என்கிறார்.

கண்ணாடிக்கு அபிஷேகம்

ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள
மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின்
எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில்
தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார்.

இதை சாயாபிஷேகம் என்பர். ‘சாயா’ என்றால் ‘நிழல்’ எனப்பொருள்.
போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த
அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில்
கண்டு மகிழ்வதாக ஐதீகம்.

இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார்.
குத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.

தெய்வயானை திருமணம்

சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன்,
தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி
பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம்
செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார்.

இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில்
நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில்
கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம்
நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று,
முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள்.

மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்),
முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம்
சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து
கொள்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு
எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும்.

மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார்.

அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில்
ஊஞ்சலில் காட்சி தருவார்.

முருகனுக்கு மஞ்சள் நீராட்டு

கிராமங்களில் திருவிழாவின்போது, கன்னிப்பெண்கள் தங்களது
முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். இத்தலத்திலும்
இவ்வாறு முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடக்கும்.
கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன்
வீதியுலா செல்வார். அப்போது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம்
செய்து கொண்ட முருகனை வரவேற்கும்விதமாகவும், போரில்
வென்றதன் உக்கிரத்தைக் குறைக்கும் விதமாகவும் அவர் மீது
மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.

மும்மூர்த்தி முருகன்

முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர்.
ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக
இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத
பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து,
பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான
மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர்.

இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக
இருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில்
முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு,
பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.
விழாவின் 7ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம்
சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8ம் நாள்) அ
திகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக
அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள்
அம்சத்தில் காட்சியளிக்கிறார்.

———————————————–

தினகரன்- ஆன்மிகம்

நவராத்திரி கொலு வைக்கும் முறை

நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும்.
கொலுஎன்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித
பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும்.

ஐம் பூதங்களி ல் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட
பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி
நவராத்திரியில் பூசிப்பவர்களுகு சகல நலங்களையும்
தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றார்

இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டும்
என்று பார்ப்போம். கொலு மேடை 9 படிகள் கொண்டதாக
இருக்க வேண்டும்.

1. முதலாம் படி :–

ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின்
பொம்மைகள்.

2. இரண்டாம் படி:-

ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.

3. மூன்றாம் படி :-


மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின்
பொம்மை கள்.

4. நாலாம்படி :-

நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு ,வண்டு
போன்றவற்றின் பொம் மைகள்.

5. ஐந்தாம்படி :-

ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின்
பொம்மைகள

6. ஆறாம்படி :-


ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.

7. ஏழாம்படி :-

மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த
சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்)
போன்றோரின் பொ ம்மைகள்.

8. எட்டாம்படி :-


தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள்
போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின்
பொம்மைகள்.

9. ஒன்பதாம்படி :-

பிரம்மா, விட்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன்
நடுநாயகமாக ஆதிசக்தி வை க்கவேண்டும்.

மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலை யை அடைய
வேண்டும் என்பதற்காகவே இப் படி கொலு அமைப்பது வழக்கம்.

–நன்றி- ஆன்மிகம்

ஸ்வேத விநாயகர் என்னும் வௌ்ளை வாரணப் பிள்ளையார்- தல புராணம் –

இந்திரன் பாற்கடலில் அமிர்தம் கடைய முனைந்தபோது
விநாயகரை வணங்காமல் தொடங்கியதால் நஞ்சு வந்தது.
பின்னர், வௌ்ளை கடல் நுரையால் ஸ்வேத விநாயகர்
என்னும் வௌ்ளை வாரணப் பிள்ளையாரை உருவாக்கி
வழிபட்டார். அதனால் பணி இனிதே முடிந்தது.

ஒருசமயம் அகலிகை சாபத்திற்கு ஆளான இந்திரன்,
சிவவழிபாடு செய்து சாபவிமோசனம் பெற விரும்பி,
ஸ்வேத விநாயகரை எடுத்துக் கொண்டு பூலோகம் வந்தான்.
ஒவ்வொரு தலமாக வழிபாடு செய்துவிட்டு திருவலஞ்சுழி
வந்தான்.

அந்தத் தலத்தில் நிரந்தரமாக தங்குவதற்கு விருப்பம் கொண்ட
ஸ்வேத விநாயகர், அது குறித்து சிவனை வேண்டினார்.

உடனே சிவபெருமான் சிறுவன் வடிவில் இந்திரன் முன்
தோன்றினார். சிறுவனிடம் ஸ்வேத விநாயகரைக் கொடுத்த
இந்திரன், ‘நான் சிவவழிபாடு செய்துவிட்டு வரும் வரையில்
இதை வைத்திரு’ என்று கூறிச் சென்றான்.

இந்திரன் விலகியதும், ஸ்வேத விநாயகரை கீழே வைத்து
விட்டு மறைந்தார், சிறுவனாக வந்த சிவபெருமான்.

சிவவழிபாடு முடித்து திரும்பிய இந்திரன், தரையில்
வைக்கப்பட்டிருந்த ஸ்வேத விநாயகரை எடுக்க முயன்றான்.
முடியவில்லை. தேரில் கட்டி இழுத்தான், அப்போதும்
நகரவில்லை. ஏமாற்றமடைந்தான்.

அப்போது விநாயகர் அசரீரியாகத் தோன்றி, ‘நீ சதுர்த்தியன்று
என்னை வழிபட்டால் ஒரு வருடம் வழிபட்ட பலனைப் பெறுவாய்’
என்றார்.

அதன்படி ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியன்றும் இந்திரன்
திருவலஞ்சுழி வந்து ஸ்வேத விநாயகரை வழிபட்டுச் செல்வதாக
ஐதிகம்.

———————————————–

பொங்கலும் கண்ணபிரான் தொடர்புடைய பண்டிகையே!

தீபாவளியைப் போலவே பொங்கலும் கண்ணபிரான்
தொடர்புடைய பண்டிகையே!

இந்திரனுக்கு `போகி’ என்ற பெயரும் உண்டு.
மழையைப் பெய்யவைக்கும் இந்திரனுக்கு நன்றியாக
தை முதல் நாள் புதுப் பயிரைப் படைத்து ஆராதிக்கும்
பழக்கம் நிலவி வந்தது.

கிருஷ்ண அவதாரத்தின்போது அவர் அந்தப் படையலை
நாராயணனின் அம்சமான சூரியநாராயணனுக்குப்
படைக்கும்படி கட்டளையிட்டார். அதனால் கோபம் கொண்ட
இந்திரன், பெரும் மழை பெய்யச் செய்தான்.

மக்கள் நிலை குலைந்து தவித்தனர். மாடுகள், கன்றுகளைத்
தொலைத்துக் கதறின. அபயம் அளித்து கோவர்த்தன
மலையைக் குடையாகப் பிடித்து மக்களைக் காப்பாற்றினார்,
கிருஷ்ணன்.

அன்று முதல் கண்ணபிரான் ஆணையின்படி மக்கள் சூர்ய
பூஷை செய்ய ஆரம்பித்தனர். அதுவே பொங்கல் திருநாள்.

இதனால் வெட்கமடைந்த இந்திரன், இறைவனை வேண்ட,
இறைவன் சங்கராந்திக்கு முன்னால் அவன் பெயரில் போகிப்
பண்டிகை கொண்டாடப் பணித்தார்.

===========================
நன்றி: இணையம்

மயில் மீதில் வருவாயே முருகா

மயில் மீதில் வருவாயே முருகா
மனமார அழைக்கின்றேன், இரங்காயோ குமரா?
(மயில் மீதில்)

சிலையாக ஆனாயோ முருகா
மலைதோறும் மயிலோடும் வேலோடும் அமர்ந்தமர்ந்து
(சிலையாக)

வினை தீர்க்க வருவாயே முருகா, என்
வினை தீர்க்க வருவாயே முருகா, பழ
வினை தீர்க்க வருவாயே முருகா
தாய் தந்த வேலோடு கணங் கூடச் சுணங்காமல்
(வினை தீர்க்க)

தேவர் குறை தீர்க்க விரைந்து வந்தாயே
சூரன் உயிர் மாய்க்க வீறு கொண்டாயே
அருணகிரிக்கு ஒரு வாழ்வு தந்தாயே
ஔவைப் பாட்டிக்கு அருள் புரிந்தாயே
(மயில் மீதில்)

தந்தைக் குபதேசம் செய்தவன் நீயே
தாயின் வேல்தாங்கப் பிறந்தவன் நீயே
தமிழின் தாலாட்டில் வளர்ந்தவன் நீயே
தரணி யெங்கும்புகழ் சிறந்தவன் நீயே
(மயில் மீதில்)

——————————–
–கவிநயா
http://muruganarul.blogspot.in/

காக்கைக்கு ஒரு கொக்கின் கீழே இருக்கும் கரும் குயிலே!’


ஆய்ச்சியர்கள் கண்ணிமைக்காமல் கடவுளைக் காண
விரும்பினார்கள். ஆனால், சுந்தரமூர்த்தி நாயனாருக்கோ,
இருக்கிற கண் பார்வையும் போய்விட்டது, இனி அவர்
தன்னுடைய மனத்துக்கு இனிய சிவபெருமானை
எப்படித் தரிசிப்பார்?

சுந்தரர் மீது இரக்கம் கொண்ட காமாட்சி அம்மை,
அவரைக் காஞ்சிக்கு வரவழைத்தாள். அங்கே அவருக்குப்
பார்வையைத் தந்து அருளினாள். விழிகளில் புது வெளிச்சம்
பிறந்தவுடன், சுந்தரர் நெகிழ்ந்து தொழுதார்.
ஏகாம்பரநாதரையும் காமாட்சி அன்னையையும் வணங்கிப்
பாடினார்.

‘காணக் கண் அடியேன் பெற்றவாறே’ என்று நிறையும்
அற்புதமான தேவாரப் பதிகங்கள்
அப்போதுதான் பிறந்தன.
அந்தப் பாடல்களில் ஒன்று, சுந்தரமூர்த்தி நாயனாருக்கு
அருள் செய்த அந்த அம்மை, அப்பனின் கதையையே
விவரிக்கிறது. லேசாகக் குறும்பு கலந்த சுவையான பாடல்
அது:

எள்கல் இன்றி இமையவர் கோனை,
ஈசனை வழிபாடு செய்வாள்போல்,
உள்ளத்து உள்கி உகந்துமை நங்கை,
வழிபடச் சென்று நின்றவா கண்டு,
வெள்ளம் காட்டி வெருட்டிட, வஞ்சி
வெருவி ஓடித் தழுவ, வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை, எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே!

-தேவர்களுக்கெல்லாம் தலைவர், எங்கள் சிவபெருமான்.
அந்தச் சிவனின் மனைவி என்ற முறையில், அவருக்கு
இணையான பெருமையைக் கொண்டவள் இந்தத் தேவி.
ஆனாலும், எல்லாரையும்போல் அவளும் சிவனை
வணங்குகிறாள்,

முறைப்படி பூஜை செய்து வழிபடுகிறாள். உமையம்மை
இறைவனை வழிபட்டது இதே காஞ்சிபுரத்தில்தான்.
இங்கிருந்த கம்பா நதிக்கரையில், மணலாலேயே
சிவலிங்கத்தைச் செய்து வணங்கி வந்தாள் அவள். தேவியின்
பக்தியைச் சோதிக்க எண்ணினார் சிவபெருமான். அதன்மூலம்
அவளுடைய பெருமையை இந்த உலகிற்குப் புரியவைக்க
நினைத்தார்.

திடீரென்று ஒருநாள், ஆற்றில் வெள்ளம் பெரிதாகப்
பொங்கி வந்தது, நதிக்கரை மேலிருந்த உமையம்மையின்
சிவலிங்கத்தைச் சுற்றி வளைத்துக்கொண்டது.
அவள் பதறிப்போனாள், ‘மணலால் செய்த சிவலிங்கம்
ஆயிற்றே, நீர் பட்டால் கரைந்துவிடுமோ? அப்படியே
வெள்ளத்தில் அடித்துச் சென்றுவிடுமோ’ என்றெல்லாம்
தவித்தாள்,

துடித்தாள், செய்வதறியாது திகைத்தாள், ஓடிச் சென்று
அந்தச் சிவலிங்கத்தைத் தழுவிக்கொண்டாள். மறுகணம்,
அங்கே ஏகாம்பரநாதர் ஒரு பவளக் கம்பத்தின் வடிவத்தில்
வெளிப்பட்டார். தேவியைக் கரம் பிடித்தார். இன்றும் அதே
திருக்கோலத்தில் அவர்கள் காஞ்சிபுரத்தில்
எழுந்தருளியுள்ளார்கள்.

இந்தக் கதையைச் சொல்ல வந்த சுந்தரர், சிவனைக்
‘கள்ளக் கம்பன்’ என்கிறார், ‘‘எங்கள் அம்மையைப்
பயமுறுத்துவதற்காகவே பொய்யான வெள்ளத்தை ஏவியவனே,
அட, திருட்டுப் பயலே’’ என்று உரிமையாக அவனைச்
செல்லம் கொஞ்சுகிறார்.

அதற்காக? கடவுளைக் ‘கள்ளக் கம்பன்’ என்று
சொல்லலாமா?
சுந்தரரும் இதையும் யோசித்திருக்கிறார்போல.
இதே திருத்தலத்தில் பாடிய இன்னொரு தேவாரப் பாடலில்,
இதே இறைவனை ‘நல்ல கம்பன்’ என்று புகழ்ந்து பாடிச் சரி
செய்துவிடுகிறார்:

வெல்லும் வெண் மழு ஒன்று உடையானை,
வேலை நஞ்சு உண்ட வித்தகன் தன்னை,
அல்லல் தீர்த்து அருள் செய்ய வல்லானை,
அருமறை அவை அங்கம் வல்லானை,
எல்லை இல் புகழாள், உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை, எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே!

-எப்போதும் போரில் வெல்லுகின்ற வெள்ளி மழு
ஏந்தியவனை, பாற்கடலில் பொங்கி வந்த விஷத்தை உண்ட
வித்தகனை, நம் துயரங்களை நீக்கி அருள் செய்ய வல்லவனை,
அரிய வேதங்களை உண்டாக்கக்கூடியவனை, எல்லை இல்லாத
புகழுக்கு உரிய உமை எனும் நங்கையால் வழிபடப்படுகிற
நல்ல கம்பனை, எங்கள் இறைவனைக் காண்பதற்காகப் பார்வை
பெற்றேன், நான் செய்த புண்ணியம் என்னே!

இந்தக் காட்சியைக் கவி காளமேகமும்கூடப் பாடியிருக்கிறார்.
அவர் தேவியைப் போற்றும் அந்த வரி,
‘காக்கைக்கு ஒரு கொக்கின் கீழே இருக்கும் கரும் குயிலே!’

என்னது? காக்கை, கொக்கு, குயில் என்று பறவைகளின்
பெயர்களாக வருகிறதே, இது பக்திப் பாடல்தானா?

அதுதான் காளமேகத்தின் சாமர்த்தியம். மேலோட்டமாகப்
பார்த்தால் கொக்குக்குக் கீழே காக்கையும் குயிலும்
உட்கார்ந்திருப்பதுபோன்ற ஓர் எளிய காட்சியை அமைத்துவிட்டு,
அதற்குள் வேறு ஓர் அர்த்தத்தை ஒளித்துவைத்திருக்கிறார் அவர்.

காக்கைக்கு என்றால், இங்கே ‘காத்தலுக்கு’, அதாவது,
‘காப்பாற்றுவதற்கு’ என்று அர்த்தம். கொக்கு என்றால்,
தமிழில் மாமரம் என்றும் ஒரு பொருள் உண்டு. காஞ்சிபுரத்தில்
கம்பா ஆற்றங்கரையில் அந்த மரத்தின் கீழ்தான் உமையம்மை
தவம் புரிந்தாள். ஆக, ‘காக்கைக்குக் கொக்கின்கீழ் குயில்’
என்றால், நம்மைக் காப்பாற்றி அருள்வதற்காக மாமரத்தின்
அடியில் தவம் செய்தவள் குயில் போன்ற தேவி!

அன்றைக்கு உமையம்மையின் தவத்தை மெச்சி அவளுக்குக்
காட்சி கொடுத்தார் சிவபெருமான். கூடவே இரண்டு நாழி
நெல்லையும் கொடுத்தார் என்கிறது தலபுராணம். ‘நாழி’
என்பது பழந்தமிழர்களின் அளவு முறைகளில் ஒன்று. ஆழாக்கு,
உழக்கு, உரி, படி, குறுணி, கலம், மரக்கால் என்று இன்னும்
ஏராளமான அளவுகளை அவர்கள் பயன்படுத்தி வந்தார்கள்.
ஒரு நாழி நெல் என்பது, இன்றைய கணக்கில் சுமார் ஒன்றே
கால் லிட்டர். ஆக, சிவபெருமான் உமையம்மைக்குக்
கொடுத்தது, இரண்டரை லிட்டர் நெல்.

அன்னைக்கு எதற்கு இந்த நெல்?

‘இதைக் கொண்டு நீ நல்ல செயல்களைப் புரிவாய்’ என்று
அருளினார் சிவபெருமான். தேவியும் அதன்படி முப்பத்திரண்டு
விதமான நல்ல அறங்களைச் செய்தாள். காஞ்சியில் தேவி
புரிந்த அந்த அறச் செயல்களில் சில: யாகம் வளர்த்தல்,
துறவிகளுக்கு மடங்கள் அமைத்துத் தருதல், இல்லறத்தில்
உள்ளோருக்கு வீடுகள் கட்டித் தருதல், தண்ணீர்ப் பந்தல்கள்,
பூஞ்சோலைகள் அமைத்தல், உடல் ஊனமுற்றோருக்கு உதவுதல்,
நோயுற்றோருக்கு மருந்துகளை வழங்கி ஆதரித்தல்,
புனித நூல்களை ஓதச் செய்தல், நிலத்தைத் தானமாக வழங்குதல்,
பசுவைத் தானமாக வழங்குதல்!

இப்படி எல்லாருக்கும் நலன்களை அருளிய அந்தத் தேவியை,
அபிராமி பட்டர் வணங்கிப் போற்றுகிறார், ‘‘நீ செய்தவை வெறும்
32 அறங்கள் அல்ல, 33 அறங்கள்’’ என்கிறார், தன்னுடைய
‘அபிராமி அந்தாதி’யில்:

ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு, அண்டம்
எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி, ஒருவர்
தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு
சென்று, பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய், இதுவோ உந்தன்
மெய்யருள்?

-அபிராமி அன்னையே, உனக்கு என் ஐயன் சிவபெருமான்
இரண்டு நாழி நெல்லை அளந்து கொடுத்தான். அதைக் கொண்டு
இந்த உலகம் முழுவதும் சிறக்கும்படி அறங்களைச் செய்தாய் நீ!
அதுமட்டுமா? செந்தமிழ் என்கிற மிகப் பெரிய வரத்தை எனக்கு
அருளினாய். அதைக் கொண்டு நான் உன்னைப் புகழ்ந்து
பாடுகிறேன், உனக்குப் பாமாலை சூட்டி மகிழ்கிறேன். இது
ஒன்றுதான் எனக்கு மிகப் பெரிய சந்தோஷம்! ஆனால், இங்கே
உள்ளவர்கள் எல்லாருக்கும் உன் பெருமை புரிவதில்லை. நான்
உன்மீது வைத்திருக்கும் பக்தியும் புரிவதில்லை.

நான் ஒரு புலவன் என்பதால், கண்டவர்களையும் புகழ்ந்து பாடச்
சொல்கிறார்கள். இப்படி யார் யாரைப் பற்றியோ உண்மையையும்
பொய்யையும் கலந்து பாடுவது எனக்குப் பிடிக்கவில்லை,
மீண்டும் மீண்டும் உன் பாதங்களில்தான் பணிகிறேன்,
நீ புரியும் மெய்யருளுக்காக வேண்டி நிற்கிறேன்

—————————————–
கண்ணனைக் காணாத கண் – கட்டுரையின் ஒரு பகுதி
நன்றி- ஆன்மிக மலர்- குங்குமம்
(தொடரும்)

அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு

மே 4: அக்னி நட்சத்திரம்

அக்னியின் மறு பெயர் சூரியன். சூரிய ஓளி கூர்மை அடைந்து உஷ்ணம் அதிகரிக்கும்போது, அக்குறிப்பிட்ட காலம் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு கத்திரி என்ற பெயரும் உண்டு. இச்சொல்லின் பொருள் வேனிற் காலத்துக் கடுங்கோடை என்பதாகும்.

அக்னி நட்சத்திரம் வந்துவிட்டால் வெயில் கடுமையாக இருக்கும். வெயில் உடலில் பட்டால், உடலிலுள்ள எலும்புகள் திண்மை பெறும். இளஞ்சூரிய ஒளியில் விட்டமின் டி உள்ளது என்று மருத்துவம் கூறுகிறது. அதுமட்டுமல்லாமல் வெயில் கிருமி நாசினியாகவும் விளங்குகிறது.

அக்னியின் தோற்றம்

ஆயிரம் நாக்குகள் கொண்ட செந்நிறமுடையவன் அக்னி தேவன். யாகங்களில் இடப்படும் ஆகுதிப் பொருட்களை தேவாதி தேவர்களுக்கு எடுத்துச் செல்பவர் அக்னி தேவன் என்கிறது வேதம். அதனால் அக்னி தேவனுக்கு புரோகிதன் என்ற தகுதியும் உண்டு. இந்த அக்னி தேவன் மூன்று வகையான உருவமாகக் காணப்படுகிறான். நெருப்பு, மின்னல், சூரியன் என்பவை ஆகும்.

அக்னியால் கூறப்பட்ட பல புராணங்களின் தொகுப்பிற்கு அக்னியின் பெயர் வைக்கப்பட்டு அக்னி புராணம் என்று அழைக்கப்படுகிறது. தேவர்களின் புரோகிதன் என்று ரிக் வேதம் குறிப்பிடப்படுகிறது.

அக்னியின் தோற்றத்தை விளக்குகிறது வேதம். அக்னிக்கு ஏழு கைகள், இரண்டு தலைகள், மூன்று கால்கள். இவரது நாக்கானது தீப்பிழம்பாய் ஏழு பிளவுகளுடன் வெளிப்படுகிறது. சிவப்பு நிறமான அக்னியின் உடலில் இருந்து ஏழு விதமான ஒளிக்கிரணங்கள் வர்ண ஜாலமாய் வெளிப்படுகின்றன. அக்னியின் வாகனம் ஆடு. அக்னி, பெரும் செல்வந்தன் என்று கருதப்படுகிறான்.

உயிர் வாழ்க்கைக்கு உரமிடும் அக்னி

அக்னியை பகவானாகக் கொண்டிருப்பதால். அக்னியைக் காலையும் மாலையும் வீட்டிலேயே ஹோமமாக வளர்த்து பூஜிப்பதுண்டு. இதற்கு அக்னி ஹோத்திரம் என்று பெயர். யாகங்களில் இடப்படும் பசு நெய் காற்றில் புகையாகக் கலந்து உயிர் வளர்ச்சிக்கு உரமிடும் என்பது ஐதீகம்.

அக்னியின் அகோரப் பசி

சுவேதகி என்ற மன்னன் பன்னிரெண்டு ஆண்டுகள் யாகம் நடத்தினான். அவன் தொடர்ந்து யாகத்தீயில் நெய் இட்டுக் கொண்டிருந்தான். இதனால் அக்னிக்கு அகோரப் பசி ஏற்பட்டது. இந்தப் பசியைத் தீர்த்துக் கொள்ளும் வழி தெரியாமல் திணறினான் அக்னி.

பசி தீரும் வழி

இந்தப் பசி தீரும் வழி என்ன என்று ஆராய்ந்தார்கள் தேவர்கள். அவர்களால் இதனை அறிய முடியாததால், பிரம்மாவை அணுகினர். பிரம்மாவும் பெருங்காடு ஒன்றினைத் தீ நாக்குகளால் தின்று தீர்த்தால் மட்டுமே, அக்னியின் இந்த அகோரப்பசி தீரும் என்று சாஸ்திரங்களைக் கண்டு உணர்ந்து கூறினார்.

அக்னியும், யமுனை ஆற்றங்கரையில் இருந்த காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் இந்திரனோ மழையைப் பொழிந்து, அக்னி தன் தீ நாக்குகளால் உண்ண முடியாதபடி ஈரப்படுத்தினான். இந்திரனுக்கு தெரியாமல் காட்டை உண்டுவிடலாம் என்று பல உருவங்களை அக்னி எடுத்தும் பலன் இல்லை. அக்னிக்கு சங்கடம் ஏற்பட்டு துவண்டுபோனது.

முதியவர் வடிவம்

அக்னி, முதியவர் வேடம் தாங்கி யமுனைக் கரையில் உலா வந்தார். பசிக்கொடுமை வாட்டி வதக்கியது. இந்த நேரத்தில் கிருஷ்ணரும், அர்ச்சுனனும் அங்கே வந்தனர். அவர்களை அடைந்தார் முதியவர். பசிக்கிறது என்றார். பசியைப் போக்க உதவுவதாகக் கிருஷ்ணரும் வாக்கு அளித்தார். உடனே தன் சுயரூபம் கொண்டான் அக்னி.

அம்புக் கூடாரம்

இந்திரனின் மழை தன்னை உண்ணவிடாமல் தடுக்கிறது என்பதை முதியவர் உருவில் இருந்த அக்னி கூற, அர்ச்சுனனை அம்புக் கூடாரம் அமைக்க கிருஷ்ணர் உத்தரவிட்டார். அர்ச்சுனனும் காண்டவ வனம் முழுவதும் மூடும் அளவில் ஆயிரமாயிரம் அம்புகளைக் கொண்டு கூடாரம் அமைத்தான்.

கிருஷ்ணரின் கட்டளை

காண்டவ வனத்தைச் சாப்பிடலாம் என்று கிருஷ்ணர் அக்னிக்கு அனுமதி அளித்திருந்தாலும், அவரது ஒரு கட்டளைக்கு உட்பட்டே அதனை செய்யலாம் என்றார். இருபத்தியொரு நாட்களுக்குள் வயிறு நிறைய உண்டுவிட வேண்டும் என்பதே அது. இதனை ஒப்புக்கொண்ட அக்னி, காட்டை உண்பதற்காகத் தன் தீ நாக்குகளை நீட்டினான். இந்திரன் மழை பொழியத் தொடங்கினான். ஆனால் மழையின் ஒரு துளி கூட, அம்புக் கூடாரம் வழியாக நுழைய முடியவில்லை என்பதே உண்மை.

அக்னி பகவான் முதல் ஏழு நாட்கள் மரங்களின் கீழ்ப் பகுதியையும், அடுத்த ஏழு நாட்கள் மரங்களின் நடுப்பகுதியையும், அதற்கும் அடுத்த நாட்களில் நுனிப் பகுதியையும் உண்டு பசியாறினான். கிருஷ்ணருக்கு அளித்த வாக்கினையும் நிறைவேற்றினான்.

அக்னியின் போக்கு

முதல் ஏழு நாட்கள் அக்னியின் நிலை ஏறுமுகமாகவும், நடு ஏழு நாட்களில் அதன் தாக்கம் கடுமையாகவும், மூன்றாவது ஏழு நாட்களில் குறைவாகவும். இருக்கும். இதனை உணர்வுபூர்வமாகவே அறிய முடியும்.

தானமும் தர்மமும்

பசிப்பிணி போக்குதலே சிறந்த தானம். அதுவே அன்னதானம். கொதிக்கும் வெயில் உள்ள நாட்களில் வயிற்றுப் பசியையும் தாகத்தையும் தாங்கவே முடியாது. எனவே அக்னி நட்சத்திர நாட்களில், குடிநீருடன் அன்னதானம் வழங்க வேண்டும். வாய் வாழ்த்தாவிட்டாலும், வயிறு வாழ்த்தும் என்பது கிராமங்களில் வழக்கத்தில் உள்ள சொலவடை. இத்துடன் குடை, செருப்பு, விசிறி, நீர்மோர், பானகம் ஆகியவற்றையும் வெயில் நேரத்தில் வழங்கலாம்.

ஈசன் இணையடி நிழலே

சர்வேஸ்வரனான சிவன் பொதுவாகவே அபிஷேகப் பிரியன். அக்னி நட்சத்திர நாட்களில், லிங்க பாணத்திற்குச் சற்று மேலே தாரா பாத்திரம் என்ற துளை உள்ள பாத்திரம் தொங்கும். அதில் பக்தர்கள் அளிக்கும் பன்னீர், இளநீர், வாசனை திரவியங்களான வெட்டி வேர், சந்தனம், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், மஞ்சள் பொடி, வாசனைப் பொடி, ஏலக்காய் பொடி உட்படப் பல பொருட்கள் கலந்த நீரை பக்தர்கள் அளித்தாலும் தாரா பாத்திரத்தில் சிவாச்சாரியார் சேர்ப்பார்கள்.

அலங்காரப் பிரியனான பரந்தாமனோ பள்ளி கொண்டு இருப்பதே அலைகள் தாலாட்டும் பாற்கடலில்தானே.

அக்னி நட்சத்திரம் 2016 ம் ஆண்டு மே 4-ம் தேதி
தொடங்கி மே 28-ம் தேதி நிறைவடைகிறது.


தமிழ் தி இந்து காம்

« Older entries Newer entries »