
மனதுக்கு உயிரூட்டும் வார்த்தைகள்
நவம்பர் 13, 2018 இல் 10:02 பிப (அனுபவ மொழிகள்)
ஒருவரை மன்னிக்கும் அளவிற்கு
நல்லவனாக இருக்கலாம்.
ஆனால் மீண்டும் அவரை நம்பி ஏமாறும்
அளவிற்கு முட்டாளாக இருக்க கூடாது!
–
———————————
–
வாய்ப்பும் வசதியும் சூழ்நிலையும்
கிடைத்தும், தவறு செய்யாதவன் தான்
உண்மையான உத்தமன்
–
———————————
–
கோபத்தில் மிருகத்தை மிஞ்சுகிறான்
மனிதன்
பாசத்தில் மனிதனை மிஞ்சுகிறது
மிருகம்!
–
——————————–
–
தூசி விழும் கண்களும்,
நம்பிக்கை வைக்கும் இதயமும்
எப்பொழும் கலங்கும்!
–
——————————-
தாகூர் எண்ணக் களஞ்சியம்
நவம்பர் 12, 2018 இல் 6:01 பிப (அனுபவ மொழிகள்)
நெஞ்மாகிய என் பாத்திரத்தை இந்த அமைதியான
நேரத்தில் முக்கியிருக்கிறேன்,
அன்பினால் அது தன்னை நிறைத்துக்கொண்டுள்ளது
–
———————————–
–
தொலைவிலுள்ள குன்றுகளிடையே தங்களை
மறைத்துக் கொண்டு ஆற்றின் நீரை நிரப்புகின்றன
–
————————————-
தொகுத்தவர்: த.கோவிந்தன்
கங்கையின் மடுவைப்போல் கலக்கமடையாமல் இரு…!!
நவம்பர் 10, 2018 இல் 6:58 பிப (அனுபவ மொழிகள்)
* உபகாரம் செய்யாதவர்களுக்கும் உதவியே செய்வது,
பிரியமாக இருப்பது, செய்நன்றி மறக்காமல் இருப்பது,
விழுந்தவர்களைத் தூக்கி விடுவது ஆகியவையே நற்குலத்தில்
பிறந்தவர்களுக்கு அடையாளங்கள்.
– பஞ்சதந்திரம்
–
—————————————-
* திரேதாயுகத்தில் யாகங்களைச் செய்வதால் அடையும்
பயனையும், துவாபரயுகத்தில் எம்பெருமானை
அர்ச்சிப்பதால் கிடைக்கும் பயனையும்,
கலியுகத்தில் கேசவனுடைய திருநாம சங்கீர்த்தனம்
ஒன்றைச் செய்தே பெறலாம்.
– வேதவியாசர்
–
——————————————
* தன்னை யாராவது பூஜித்தால் அதற்காக சந்தோஷப்
படுவதில்லை. அவமதித்தாலும் தாபம் அடைவதில்லை.
கங்கையின் மடுவைப்போல் எவன் கலக்கமடையாமல்
இருக்கிறானோ, அவனே அறிவாளி என்று
சொல்லப்படுவான்.
– விதுர நீதி
–
——————————————
* ஹே சூரிய பகவானே! நாங்கள் செய்யும் பாவங்களை
மன்னித்து எங்களைப் பாவமற்றவர்களாகச் செய்வாய்.
நாங்கள் உன்னை எப்போதும் வழிபட்டுக்
கொண்டிருக்கிறோம்.
– ரிக் வேதம்
–
———————————————–
* ஹே சூரிய பகவானே! ஒளிக்கெல்லாம் ஒளி தருபவனே,
உலகங்களில் வியாபித்திருப்பவனே! எனக்கு சிறப்பையும்
பொருளையும் அருள்வாய்.
என் பாவங்களைப் போக்கி எனக்கு மங்களங்களை
அருள்வாய்.
– மகாகவி பவபூதி எழுதிய “மாலதீ மாதவம்’
–
————————————————-
By தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
நன்றி-வெள்ளிமணி
மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை. ..
நவம்பர் 10, 2018 இல் 6:55 பிப (அனுபவ மொழிகள்)
* மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை.
அவன் தன்னைத் தானே அழித்துக்கொள்கிறான்.
– புத்தர்
–
—————————————–
* மனம் அமைதியாக இருப்பதற்குக்குச் சமமான
உறவு இல்லை,
சத்தியத்தைவிட உயர்ந்த தவம் இல்லை.
முக்தியைவிட மிகப் பெரிய இலாபம் இல்லை.
கங்கைக்குச் சமமான வேறு ஒரு நதியே கிடையாது.
– சனக மகாமுனிவர்
–
———————————————-
* எவன் சுயநலத்தைத் தியாகம் செய்கிறானோ, எவனுக்குப்
பொறாமையும் கர்வமும் இல்லையோ, எவன் அன்பாகவும்
பணிவாகவும் இனிமையாகவும் பேசுகிறானோ,
எவனுக்கு இந்த உலக சுகபோகங்களில் ஆசை இல்லையோ,
அவனே ஸ்ரீ ராமபிரானின் உண்மையான ஊழியன்.
– சமர்த்த ராமதாஸ்
–
——————————————
* கங்கைக்குச் சமமான தீர்த்தம் இல்லை, பெற்ற தாய்க்குச்
சமமான குரு இல்லை. பகவான் விஷ்ணுவிற்குச் சமமான
கடவுள் இல்லை.
அதேபோல் குருவைவிடச் சிறந்த தத்துவம் கிடையாது.
– சனக மகாமுனிவர்
–
———————————————–
* கலியுகத்தில் எவனாவது ஒருவன் அற்பமான தர்மத்திற்கு
முயற்சி செய்தாலும்கூட, அவன் கிருதயுகத்தில் பெரும் தவம்
செய்து எத்தகைய புண்ணியத்தை அடைவானோ அவ்வளவு
புண்ணியத்தை எளிதில் அடைவான்.
– பராசர முனிவர்
–
——————————————
By தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
நன்றி-வெள்ளிமணி
ஒரே நிமிடத்தில் புண்ணியம்–கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
நவம்பர் 7, 2018 இல் 2:06 பிப (அனுபவ மொழிகள்)
* தன்னுடைய புத்தகம், பெண், பணம் இவை பிறரிடம்
கொடுத்தால் போனது போனதுதான். ஒருவேளை திரும்பி வருவதாயின்
புத்தகம் கிழிந்தும், பெண் மாசுபடிந்தும், பணம் அளவு
குறைந்தும்தான் வரும்.
* முதலை வாய்ப்பட்ட மணியை எடுத்து விடலாம். அலைபாயும்
கடலையும் அப்புறமாகத் தாண்டிடலாம். பாம்பையும் மாலையாக
கழுத்தில் அணிந்திடலாம். ஆனால் மூடனைத் திருத்த யாராலும்
இயலாது.
* ஆறு தரம் பூமியை வலம் வருதலும், பதினாராயிரம் தடவை
காசியில் குளித்தலும், பலநூறு தடவை சேது ஸ்நானம்
செய்தாலும் ஆகிய இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயைப்
பக்தி பூர்வமாக ஒரு தரம் வணங்கினால் கிடைக்கும்.
* விளக்கு நமக்கு எத்தனை வண்ணமாக உதவி செய்கிறது என்பதை
நாம் அது இல்லாதபோதுதான் உணர முடியும். தாய் நம்மை
எப்படியெல்லாம் வளர்க்கின்றாள் என்பதை தாய் இல்லாத
போதுதானே உணர முடிகிறது.
* பறவைகட்கு இரு சிறகுகள்; மனிதனுக்கு இரு கால்கள், இரு
கைகள், இரு கண்கள். புகை வண்டிக்கு தண்டவாளங்கள்
இருப்பதுபோல் மாணவர்களுக்கு இரு குணங்கள் இருக்க வேண்டும்.
ஒன்று அடக்கம், மற்றொன்று குருபக்தி. இந்த இரு குணங்கள்
உள்ள மாணவன்தான் முன்னேற்றமடைவான்.
* இன்பமான சொல்லும், சிரித்த முகமும், பார்வையும்,
நண்பர்களின் சொல்லைக் கேட்க வேண்டுமென்ற எண்ணமும்,
அவர்களைக் கண்டவுடன் சந்தோஷப்படுதலும் ஆசையில்லாதவனின்
லட்சணங்களாகும்.
* தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன்
ஜுவாலை மேல்நோக்கி எழுவதுபோல் உயர்ந்த குணத்தை
கீழ்ப்படுத்த சொப்பனத்திலும் முடியாது.
இன்சொல் மட்டுமே பேசுங்கள்–திருமுருக கிருபானந்த வாரியார்
நவம்பர் 7, 2018 இல் 2:04 பிப (அனுபவ மொழிகள்)
திருமுருக கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
———–
இன்சொல்லலை பேசுகிறவர்களுக்கு உலகில்
ஒரு வகையான துன்பமுமில்லை.
எம வாதனையும் கிடையாது. சிவகதி திண்ணமாகக்
கிடைக்கும்.
தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல்
நம் உள்ளம் உருகினால் உருகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றி
விடுவான்.
–
எதனையும் பலமுறை சிந்தித்துச் செய்ய வேண்டும். ஒருவர்
போன வழியிலேயே, சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது
மூடத்தனம்.
–
எங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாகக்
கிடைக்கக்கூடிய பூவினாலும், நீரினாலும் நாம் வழிபட
வேண்டும். வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள்
போன்றவை
–
எல்லாத் தேசத்தாரும், எல்லா நாட்டாரும், எல்லா
நிறத்தாரும், எல்லா சமயத்தாரும் கருத்து வேறுபாடின்றி
ஒப்பமுடிந்த உண்மை வேதம் நமது திருக்குறள் ஒன்றேயாம்.
உலகிலுள்ள எல்லா அறங்களையும் தன்னகத்தே கொண்டு
சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது திருக்குறள்.
திருமால், குறள் வடிவு கொண்டு இரண்டடியால் மூவுலகையும்
அளந்தவர். வள்ளுவர், தமது குறளின் இரண்டடியால் எல்லா
உலகங்களையும் அளந்தவர்.
திருக்குறள் ஓதுவதற்கு எளிது. மனப்பாடம் செய்வதும்
சுலபம். ஒரு முறை படித்தாலே போதும். உணர்தற்கு அரிது,
வேதங்களிலுள்ள விழுப்பொருள்களை எல்லாம் விளக்கமாக
உரைப்பது. நினைக்கும்தோறும் நெஞ்சில் தெவிட்டாத இன்பத்தை
ஊற்றெடுக்கச் செய்வது.
கடல் தண்ணீர் வற்றிவிட்டாலும் சூரியன் தட்பத்தை
அடைந்தாலும், சந்திரன் வெப்பத்தை அடைந்தாலும் திருக்குறள்
தனது பெருமையினின்றும் குறையாது.
திருக்குறளைத் தொட்டாலும் கை மணக்கும். படித்தாலும் கண்
மணக்கும். கேட்டால் செவிமணக்கும். சொன்னால் வாய் மணக்கும்.
எண்ணினால் இதயம் மணக்கும். அத்தகைய தெய்வ மணம் வீசும்
சீரும் சிறப்பும் உடையது திருக்குறள்.
கனிகள் நிறைந்துள்ள ஓர் மரத்தில் வகையறியா ஒருவன்
சுவைமிகுந்த கனிகளை விலக்கிக் கைப்புடைய காய்களை மென்றதை
ஒக்கும் இன்னாத சொற்களைக் கூறுவோனின் இயல்பு. எனவே
மனத்தூய்மையுடன் வாழ்ந்து இறைவன் திருவருளால்
இன்சொல்லைக்கூறப் பயின்று நாம் அனைவரும் இம்மை
இன்பத்தையும் அடைந்து நற்கதி பெறுவோமாக.
–
———————————————-