தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!

sleep2

இரவில் தூக்கம் வரவில்லையென்றால் கசகசா
என்று சொல்லப்படும் மருந்து சரக்கை ஒரு கரண்டி
எடுத்து அரைத்து ஒரு டம்ளர் பசும் பாலில்
அரைத்து கரைத்து மாலையில் சாப்பிட்டால் இரவு
நல்ல தூக்கம் வரும்!

———————————————

ஒரு நாள் உங்களுக்கு தூக்கம் போதாது இருந்தால்
மறுநாள் சற்று அதிகம் தூங்கி உங்கள்
உடல் அதனை ஈடு செய்யும் ஆற்றல் கொண்டது.

ஆனால் கடன் அதிகமானால் கவனஈர்ப்புத் திறன்,
முடிவு எடுக்கும் திறன்,
செயற்படும் திறன் போன்ற பல உடற் செயற்பாடுகள்
பாதிப்புறும்.

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

நம் அனைவருக்கும் தாயின் பாசம் தான் தெரியும், நாம் வளர்ந்து நம் வேலைகளை நாமே செய்துக் கொள்கிற வரை நம்மை தாங்கி நிற்பவள் தாய். இந்த காலகட்டங்களில் நமக்கு, பொதுவாக எல்லோருக்குமே தந்தையிடம் பெரிதாக ஈடுபாடு இருக்காது, அம்மா சாப்பாடு ரெடியா? அம்மா என் டிரஸ் ரெடியா? அம்மா ஸ்கூலுக்கு போயிட்டு வரேன் அம்மா எனக்கு பாக்கெட் மணி கொடு, அம்மா அப்பாகிட்டே சொல்லு எனக்கு அது வேணும், இது வேணும் என்று அம்மாவே உலகமாக இருப்போம்.

அப்பாவிடம் பாசம் இருந்தாலும் ஒரு சிறிய இடைவெளியிருக்கும் அது வயதாக வயதாக பெரிதாகிக் கொண்டே போகும் ஒரு கட்டத்தில் தந்தையும் மகனும் பேசிக் கொள்வதே குறைந்து விடும். நம் தந்தையை நாம் புரிந்து கொள்வது எப்போது என்றால் நாம் தந்தையாகும் போது தான், இந்த சூழ்நிலையில் அப்பா எப்படி கஷ்டப் பட்டிருப்பார் என்பதை நாம் நம் வாழ்கையில் அனுபவிக்கும் போது தான் உணர்வோம்.

தந்தையின் தியாகமும் தாய் செய்யும் தியாகத்திற்கு குறைந்ததல்ல, குடும்பத்தில் அமைதியான, அழகான சுமுக நிலை நிலவ வேண்டுமானால் அதற்கு தந்தையின் பங்கு மிக முக்கியமானது. தந்தை ஒரு குடிகாரராகவோ, மற்ற ஏதும் கெட்டப் பழக்கம் உள்ளவராகவோ இருந்தால் பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் மனைவி மக்கள் எல்லாரும் பாதிக்கப்படுவர்.

வாழ்கைக்கு பொருளாதாரம் மிகவும் முக்கியமானது அது இருந்தால் தான் வாழ்வின் எல்லா நிகழ்வுகளையும் சுவைக்க முடியும். தந்தை சீரான பொருளாதார வசதி அளித்தால் தான் தாயால் அவள் கடமைகளை சரிவர செய்ய முடியும், குழந்தைக்கு பாலுட்டுவதிலிருந்து பள்ளி கல்லூரிக்கு பணம் கட்டுவது வரை. தந்தையின் பங்கு கட்டிடத்தின் அடியில் இருக்கும் அஸ்திவாரம் போல் வெளியே தெரிவதில்லை.

தாயின் பங்கு வெளிப்படையானது எந்த குழந்தையும் புரிந்து கொள்ளும் தாய் நமக்காக பாடுபடுகிறாள் என்று, ஆனால் தந்தையின் பங்கை புரிந்து கொள்ள நமக்கு வயதும் முதிர்ச்சியும் தேவைப்படுகிறது.

ஒரு தாய் தன் பிள்ளைகளை 10 மாதந்தான் சுமக்கிறாள் ஆனால் தந்தை தன் மனைவி மக்களை இறக்கும் வரை நெஞ்சில் சுமக்கிறான். தன் பிள்ளைகள் செய்யும் தவறுகளை தன்னை கடினமாக்கிக் கொண்டு கண்டிக்கும் போதே தந்தையின் தியாகம் தொடங்கி விடுகிறது. தன் பிள்ளைக்கு தன் மேல் வெறுப்பு வரும் என்று தெரிந்தும் தன் பிள்ளை வழி தவறி விடக்கூடாது என்பதற்காக அவ்வாறு நடந்துக் கொள்கிறார்.

ஒருவன் தந்தையாகிவிட்டப் பிறகு தனக்கென்று எதையும் சிந்திப்பதில்லை, இதை பிள்ளைக்கு வாங்கலாம் இதை மனைவிக்கு வாங்கலாம் என்று தனக்கான தேவைகளை முற்றும் குறைத்துக் கொள்கிறான், பொருளாதர வகையில் பாhத்தால் கூலித் தொழிளாலி தந்தை முதல் கோடீஸ்வரத் தந்தை வரை பல விதமான அழுத்தங்களை கஷ்டங்களை பொருளீட்டும் போது சந்திக்க வேண்டி வருகிறது, அனைத்தும் யாருக்கு மனைவி மக்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையான தந்தையர்களின் பிரதான நோக்கமாய் இருக்கும்.

தந்தையைப் பற்றி நாம் உணரும் போது தந்தை நம்முடன் இருக்க மாட்டார், நாம் தந்தையாகும் போது தான் நம் தந்தையைப் பற்றி முழுமையாக உணர்வோம். எங்கோ படித்த ஒரு விசயத்தை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன், 10 வயது வரை என் தந்தையை விட பலசாலி யாரும் இல்லை, என் தந்தைக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறோம்.

(அதனால் தான் ரயில் எப்படி ஓடுகிறது, விமானம் எப்படி பறக்கிறது என்பது போன்ற கேள்விகள் கேட்கிறோம்) 15 வயசுக்கு பிறகு தந்தை இந்த காலத்துக்கு பொறுந்தாத ஆள் என்று நினைக்கிறோம், 20 வயதுக்கு மேல் என் தந்தைக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறோம், 30 வயதுக்கு மேல் தந்தையிடம் ஆலோசனைக் கேட்டால் நல்லது என்று நினைக்கிறோம், 40 வயதுக்கு மேல் இந்த பிரச்கனைக்கு தந்தை இருந்திருந்தால் நல்ல தீர்வு சொல்லியிருப்பார் என்று நினைக்கிறோம் இது ஒவ்வொருவர் வாழ்விலும் நடக்கும் விசயம்.

ஆக தந்தையை நாம் புரிந்துக் கொள்ள வயதும் அனுபவமும் தேவைப் படுகிறது. இன்று நாம் படித்து நல்ல வேவையிலோ, நல்ல தொழிலோ இருப்பதற்கு தந்தை என்ற அந்த ஏணியை பயன் படுத்தித் தான் வந்திருப்போம் (ஏணியை உதைப்பவர் எத்தனையோ பேர்) அதற்கு தான் முன்னோர்கள் சொன்னார்கள் ‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்று. தந்தைக்கு நிகர் தந்தையே.

=======================================

(படித்ததில்பிடித்தது)

நன்றி: http://rajakamal.blogspot.com/2010/06/blog-post_21.html

மனித உறவுகள் மேம்பட…

சமீபத்தில் படித்த புத்தகம் ஒன்றில்,
“மனித உறவுகள் மேம்பட…’ என்ற தலைப்பில்
கொடுத்திருந்த அறிவுரைகள் அற்புதம். இதோ
அவை…

========================================
குடும்பத்திலும் சரி… அலுவலகத்திலும் சரி… மனித
உறவுகளில் விரிசல் ஏற்படாமல் இருக்கவும்,
ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்கவும்,
இதோ சில எளிய வழிகள்…

* நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

* அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை விடுங்கள்.

* எந்த விஷயத்தையும், பிரச்னையையும் நாசூக்காகக் கையாளுங்கள்.

*விட்டுக் கொடுங்கள்.

* சில நேரங்களில், சில சங்கடங்களை சகித்து தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.

* நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று கடைசி வரை வாதாடாதீர்கள்.

* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

* உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல், இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.

* அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய், ஆசைப் படாதீர்கள்.

* எல்லாரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

* கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.

* அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.

* உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.

* மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கிற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.

* மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும், இனிய, இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்.

* புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.

* பேச்சிலும், நடத்தையிலும் திமிர்தனத்தையும், தேவையில்லாத மிடுக்கு காட்டுவதைத் தவிர்த்து, அடக்கத்தையும், பண்பாட்டையும் காட்டுங்கள்.

* பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல், நீங்களே பேச்சைத் துவங்க முன் வாருங்கள்.

*தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள். பாராட்டுக்கு மயங்காத
மனிதனே இல்லை; அதுவே, உங்களுக்கு வெற்றியாக அமையும்.

==============================================
–அந்துமணி பா.கே.ப
நன்றி: வாரமலர்( தினமலர்)

NOBODY’S PERFECT

 

NOBODY’S PERFECT

A man and his girlfriend were married. It was a large celebration. All of their friends and family came to see the lovely ceremony and to partake of the festivities and celebrations. A wonderful time was had by all. The bride was gorgeous in her white wedding gown and the groom was very dashing in his black tuxedo.

Everyone could tell that the love they had for each other was true. A few months later, the wife comes to the husband with a proposal: “I read in a magazine, a while ago, about how we can strengthen our marriage.” she offered. “Each of us will write a list of the things that we find a bit annoying with the other person. Then, we can talk about how we can fix them together and make our lives happier together.”

The husband agreed. So each of them went to a separate room in the house and thought of the things that annoyed them about the other. They thought about this question for the rest of the day and wrote down what they came up with. The next morning, at the breakfast table, they decided that they would go over their lists. “I’ll start,” offered the wife. She took out her list. It had many items on it. Enough to fill 3 pages, in fact. As she started reading the list of the little annoyances, she noticed that tears were starting to appear in her husband’s eyes.

“What’s wrong?” she asked. “Nothing” the husband replied, “keep reading your list.”

The wife continued to read until she had read all three pages to her husband.

She neatly placed her list on the table and folded her hands over top of it.

“Now, you read your list and then we’ll talk about the things on both of our lists.” She said happily.

Quietly the husband stated,”I don’t have anything on my list. I think that you are perfect the way that you are. I don’t want you to change anything for me.

You are lovely and wonderful and I wouldn’t want to try and change anything about you.”

The wife, touched by his honesty and the depth of his love for her and his acceptance of her, turned her head and wept.

The moral:

In life, there are enough times when we are disappointed, depressed and annoyed. We don’t really have to go looking for them. We have a wonderful world that is full of beauty, light and promise. Why waste time in this world looking for the bad, disappointing or annoying when we can look around us, and see the wonderous things before us?

I believe that we are happiest when we see and praise the good and try our best to forget the bad.

Nobody’s perfect but we can find perfectness in them to change the way we see them.

We want others to be perfect, but God accepts us and finds us beautiful the way we are.

__,_._,___
from fwd mail

உங்க‌ள் வேலைப் ப‌ளு இதை விட‌ அதிக‌மா?

நீங்க‌ செய்யும் வேலையில் இருக்கும் க‌ஷ்ட‌ங்க‌ள் உங்க‌ளுக்கு தெரியும்.எந்த‌ அள‌வு க‌ஷ்ட‌ங்க‌ளை நீங்க‌ வேலைல‌ அனுப‌விக்க‌றீங்க‌ன்னு தெரிய‌னுமா?கீழே வ‌ரும் கேள்விக்கெல்லாம் ப‌தில் சொல்லுங்க‌.எவ்ளோ அதிக‌மான‌ கேள்விக்கு “ஆம்” ப‌தில் சொல்றீங்க‌ன்னு நோட் ப‌ண்ணிக்கோங்க‌.

ஆஃபீஸில் ஏசி,ஃபேன் அடிக்க‌டி ம‌க்க‌ர் ப‌ண்ணுதா? டெம்ப்ரேச்ச்ர் இவ‌ர்க‌ள் வேலையிட‌த்தை விட‌ அதிக‌மாய் போகுதா?

உங்க‌ ஆஃபீஸ் ரூமை ச‌ரியா ஸ்வீப்ப‌ர்ஸ் கிளீன் ப‌ண்ற‌தே இல்லையா?இதை விட‌ குப்பையாவா இருக்கு உங‌க‌ ஆஃபீஸ் ரூம்?

இதில் இருக்கும் ரிஸ்க்கை விட‌வா உங்க‌ லைஃப்ல‌ ரிஸ்க் அதிக‌ம்?

உங்க‌ள் பேச்சுக்கு ஆஃபீஸ்ல‌ யாரும் ச‌ரியா ரெஸ்பான்ஸ் த‌ர்றது இல்லை,இக்னோர் ப‌ண்றாங்க‌ன்னு குறைப்ப‌ட‌ரீங்க‌ளா..இ ந்த‌ சிறுமியை விட‌ அதிக‌மாவா புற‌க்க‌ணிக்கப்ப‌ட‌றீங்க‌‌?

நிச்ச‌ய‌மாய்த் தெரியும்.ஒரு கேள்விக்கும் ஆம்ன்னு ப‌தில் சொல்லி இருக்க‌மாட்டீங்க‌.

உல‌கில் எவ்ளோ ம‌க்க‌ள் ந‌ம்ம‌ளைவிட‌ தாழ்ந்த‌ நிலைல‌ இருக்காங்க‌ன்னு தெரிஞ்சிகிட்டீங்க‌ளா..க‌வ‌லைக‌ளைத் தூக்கி தூர‌ப் போட்டுட்டு வேலையை பாருங்க‌.முடிஞ்சா க‌ஷ்ட‌ப‌ட‌ற‌வ‌ங்க‌ளுக்கு ஏதாவ‌து உத‌வி ப‌ண்ண முடியுமான்னு பாருங்க.

=============================================

Posted by *இயற்கை ராஜி*

நன்றி: http://iyarkai09.blogspot.com/search/label/Quiz

True Incident!! – Really Interesting

from fwd mail
=============

|:) True Unbelievable Incident!! – In Chennai :)|

True Incident!! – Really Interesting

The incident was really shared by my friend you is currently working in reputed firm near OMR way

” This peace of information is useful for each and every one who travels by Bus “

I am working in Chennai One (Thoraipakkam), Chennai. I usually travel by Metropolitan Transport Corporation(MTC) bus, from jain college stop (Which is near to my office) to tidel park and from Tidel park I will catch train, to home. MTC bus comes from kelambakkam(19B,21H) mostly wont stop in tidel park in early days. So I usually prefer to get into T51 bus, which will stop in tidel park stop. After some time 19B started stopping in tidel park also.

Today while returning from office at around 8.30 pm, I was in a hurry to catch my 9.28 pm train at Tidel park. I got up a bus(19B) in Jain College at around 8.45 pm, and asked the conductor to give a ticket for tidel park stop. He said, the bus wont stop there , and he asked me to get down at signal if it stops there or else get down at stop next to tidel park. I was arguging with him that I am going daily with the same bus and get down in the tidel park stop. But he was keep on saying the same thing.. I got irritated with conductor response. Suddenly I remembered a complaint phone no.[9884301013] I read in one bus sometime back and noted down in my mobile. I called that no. and said about the incident that conductor is not stopping in the usual stop.

The MTC representative (person at the other end) asked me to give the phone to the conductor. The conductor was not interested to talking with his official. The MTC rep. asked me the bus registration no. He enquired where is the bus at that time and I said it is in Kandhanchavadi. The MTC rep. said he will come in the line and talk to them. I was curious how he will come and catch the bus.

After few mins. the wireless transmitter(to track the bus using GPS), near the driver in the bus started shouting :confused1: … Driver stop the bus. Driver stop the bus in the left side of the road. Driver was not sure what is happening may be his first experience, for others(including me) it is the real first experience. The driver stopped the bus and started listening to the transmeter. The MTC rep. enquired why the bus is not stopping in tidel park stop. The driver said he stops in tidel park stop and in the previous trip also he has done. The rep. asked him then why the conductor is saying like that . He asked the conductor what is the issue. The conductor was speechless . The driver somehow managed the situation and supported the conductor by saying that the conductor was new to this route. The driver asked excuse for the incident and said he will stop in the Tidel Park stop

The MTC rep. said he wanted to talk the passenger who called him. I went near the transmitter and spoke to the MTC rep. He said sorry for the incident happened and asked sorry on behalf of MTC. Everyone in the bus were surprised of things happening. I came back to my seat and I was so embarrassed as all were looking at me. Few passengers asked me what is the no. and whom I called. They also took the no. The bus stopped in Tidel Park stop then. After getting down I called the MTC rep. and said the bus stopped in the stopping.

It was a nice experience for me and others who travelled in the bus, including driver and conductor and I was very shocked after this incident. Yes, nowadays good things are happening in government sector also and technology is used properly.

Complaint Phone no. for MTC bus: 9884301013 ,9445030516 ,9383337639

 

Click this bar to view the original image of 800x405px.

 

Click this bar to view the original image of 800x377px.

 

Click this bar to view the original image of 800x427px.

 

ஜெயிக்க வழிகள் – என்.சொக்கன்

=

மனித மனம் எப்படிப்பட்டது என்பதில் தொடங்கி திட்டமிடுதல்,
வித்தியாசமாகச் சிந்தித்தல், கனவு காணுதல், விடாமுயற்சி,
பாஸிட்டிவ் சிந்தனை, ரிஸ்க் எடுப்பது, விட்டுக்கொடுப்பது, ஈகோ,
பொறாமை, பர்ஃபெக்ஷன், கோபம், அடுத்தவர்களுக்கு உதவுவது,
தகவல்தொடர்பு, உறவுகள், நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்
கொள்வது, பணம் சம்பாதிப்பது, தலைமைப் பண்புகள் என்று
சகலத்தையும் குட்டிக்குட்டிக் கட்டுரைகளாக அமைத்துக்
கொடுத்திருக்கிற அருமையான புத்தகம், ஹல் அர்பன்
எழுதிய “லைஃப்’ஸ் க்ரேட்டஸ்ட் லெஸன்ஸ்
(Life;s Greatest Lessons)


ஹல் அர்பன் முப்பத்தைந்து வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றியவர். அந்த அனுபவத்தின் அடிப்படையில் தன்னுடைய குழந்தைகளுக்குச் சொல்ல விரும்பிய வாழ்க்கைப் பாடங்களைக் கட்டுரைகளாக எழுதினார். பின்னர் இவை எல்லோருக்கும் பயன்படும்வண்ணம் நூல்வடிவம் பெற்றுப் பல லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றன. ஏராளமானோரின் வாழ்க்கையையே தடம் மாற்றி வழிகாட்டியிருக்கின்றன.

நூற்றைம்பது பக்கங்களுக்குள் பலநூறு கதைகள், அனுபவக் சிந்தனைகள், தத்துவங்கள் என்று கொட்டி நிரப்பியிருக்கும் இந்தப் புத்தகத்திலுள்ள இருபது வாழ்க்கைப் பாடங்களில் சில…

* நீங்கள் விரும்பும் “வெற்றி’ எது என்று தெளிவாக வரையறுத்துக்கொள்ளுங்கள். வெறுமனே பணம் சம்பாதிப்பது மட்டும் வெற்றியாகிவிடாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

* ரொம்பச் சிரமப்பட்டு எதிர்நீச்சல் போட்டுதான் முன்னேறியாகவேண்டும். அதேநேரம், உங்களைப்போல் கஷ்டப்பட்டு உழைக்காமல் முன்னுக்கு வருகிறவர்களும் இருப்பார்கள். அவர்களைப் பார்த்துப் புலம்பாமல், உங்கள் முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

* உங்களுடைய வெற்றி, தோல்வி இரண்டுமே எதேச்சையாக வருபவை இல்லை. அதிர்ஷ்டத்தாலோ துரதிருஷ்டத்தாலோ நிகழ்பவை இல்லை. எல்லாம் நீங்கள் எடுக்கும் முடிவுகளில்தான் இருக்கிறது.

* வெற்றிக்கு சில பழக்கங்கள், ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள் அவசியம். ஜெயித்தவர்களைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்களிடம் உள்ள எந்தெந்தப் பழக்கங்கள் உங்களிடம் உள்ளன? எவையெல்லாம் விடுபடுகிறது? ஏன்? யோசியுங்கள்.

* உங்களுக்கு சின்னச் சின்ன உதவி செய்தவர்களுக்குக்கூட மனமார நன்றி சொல்லப் பழகுங்கள்.

* திறமை உள்ளவர்களுக்கு மரியாதை கொடுங்கள். மற்றவர்களைவிட நீங்கள்தான் உசத்தி என்கிற அகம்பாவம் வேண்டாம்.

* உங்களை உழைக்கத் தூண்டுவதற்கு இன்னொருவரை எதிர்பார்க்காதீர்கள்.

*சில சமயங்களில் ஒன்றைப் பெறுவதற்காக நீங்கள் இன்னொன்றை இழக்கவேண்டியிருக்கலாம். அதுமாதிரி தருணங்களில் எது முக்கியம் என்று நன்றாக யோசித்து முடிவெடுங்கள்.

* எல்லோருக்கும் 24 மணி நேரம்தான் . ஆகவே “எனக்கு நேரமே போதலை’ என்று புலம்பாதீர்கள்.

*வெற்றியைத் துரத்தும் அவசரத்தில் உங்கள் உடம்பை மறந்துவிடாதீர்கள்.

*தோல்வியே இல்லாத வாழ்க்கை போரடிக்கும். பெரிய வெற்றியாளர்கள்கூட அவ்வப்போது தோற்றிருக்கிறார்கள். நீங்களும் எப்போதாவது தோற்கலாம். தப்பில்லை

* நீங்கள் எவ்வளவு ஜெயித்தாலும் சரி, எத்தனை உயரத்துக்குச் சென்றாலும் சரி “நல்ல மனிதர்’ என்று பெயர் எடுக்காவிட்டால் அவை எல்லாம் அர்த்தம் இழந்துவிடுகின்றன. வெற்றிக்காகக் குணத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். “நான் நல்லவனாக வாழ்ந்தேன்’ என்கிற திருப்திதான் மற்ற எல்லாவற்றையும்விட மிகப்பெரியது!.

-என்.சொக்கன்

நன்றி: குமுதம் 12-1-11

கார்த்திகை விளக்கு – டிப்ஸ

[dheebam.jpg]

கார்த்திகை விளக்குகள் ஏற்றும்போது

அருமையான அடுக்கு விளக்குகள் வேண்டுமா.?

வீட்டிலுள்ள பழைய இட்லித் தட்டுகளின் குழிகளில் எண்ணெய் விட்டு, மெல்லிய திரிபோட்டு ஏற்றி, ஒவ்வொரு அறையின் மத்தியிலும் ஒன்று வைத்தால் வீடே ஒளிமயமாக இருக்கும்.

உபயோகிக்கும் இடலித் தட்டுகளானால், தீபம் எரியும் இடத்தில் திரியின் அடியில், ஈர மஞ்சள் பொடி அல்லது சந்தனத்தை உருட்டி வைத்து விட்டால், தட்டில் கரி படியாது. தட்டை சுத்தப்படுத்தி மீண்டும் உபயோகிக்கலாம்.

===============================

>எஸ்.நிரஞ்சனி, சென்னை 125

நன்றி: அவள் விகடன் 19-11-10

தன்னை ஜெயித்தவன்

Posted by sanyasi

நன்றி: http://sanyasii.wordpress.com/category/தேடல

=========================================

 

 

=

உண்மையான வீரன் என்பவன் தன்னை ஜெயித்தவன். மற்றவரை ஜெயிப்பது என்பது காலத்தின் கோலம். நீ எவரையேனும் ஜெயித்தால் உன்னை இன்னொருவன் ஜெயிப்பான். ஆக இங்கு வெற்றி  தோல்விகள் மாறி மாறி ஏற்படும்.

தன்னை ஜெயித்தவனை எவனும் ஜெயிக்க முடியாது. தன்னை ஜெயித்தவனை கண்டு உலகம் மௌனமாய் அடங்கும். அவனுக்குப் போரும் தேவையில்லை.

தன்னை ஜெயித்தவன் மற்றவருக்கு இதம் சொல்வதற்க்காகவே பிறந்தவன். வழிகாட்டுவதற்க்காகவே வாழ்பவன் அவனால் போரிட முடியாது. அவன் போர் வேறுவிதம் தன்னை அறிதலை பரப்புவதுதான் அவன் உண்மையான போர். தன்னை அறிந்தவர்களை உற்பத்தி செய்வதுதான் அவன் உண்மையான தொழில்.

உலகம் தன்னை அறிந்தவர்களை அதிகம் கொண்டிருந்தால் மௌனமாக இருக்கும். தன்னை அறியாதவர்களால் தான் இவ்வளவு அல்லல் படுகிறது. தன்னை அறிதல் என்பது, தன் உடம்பு பற்றிய சிந்தனை அல்ல, தன் உடம்பு மீறிய சிந்தனை. தான் உடம்பல்லா என்று தெரிந்தவனால் தான் வாழ்க்கையை நன்கு புரிந்து கொள்ள முடியும்.

பந்த பாசம் அறுதல் என்பது பந்தபாசத்தை அடக்கிக் கொள்வதல்ல, எவர் மீதும் பிரியமில்லாமல் சீறுவது அல்ல, வெறும் முரட்டு பிடிவதமல்ல. “மௌனமாக இருத்தல்” மௌனமாக இருத்தலே பந்த பாசம் அற்று இருத்தல், தன்னை அறிதல்.

காமம் போன்றே கோபமும் மிகக்கொடுமையான வியாதி. காமத்தில் சிக்கிக் கொண்டவன் எப்படி கருத்தழிந்து போகிறானோ அதே போல கோபத்தில் சிக்கிக் கொண்டவனும் உருத் தெரியாமல் போகிறான்.

வாழ்க்கை என்பது முற்றிலும் கெடுதல்களே நடக்கும் விஷயமுமல்ல, முற்றிலும் நல்லவைகளே நடக்கும் விஷயமுமல்ல. நல்லதும் கெட்டதும் மாறி மாறி வரும். நாலு கெட்டது நடந்தபோது நடுவே முள்செடியில் பூத்த மலர்போல ஒரு நல்லதும் நடக்கும்.

வாழ்க்கை விசித்திரமானது அது எந்த இலக்கணத்திற்க்கும் அடங்காதது இது இந்த வகையானது என்று வரையறுத்துக்கூற இதுவரை எவருக்கும் திறனிருந்ததில்லை. திறனுடையோர் இதைப் பற்றி வெளியே சொல்லவில்லை.

எதனையும் இழக்க சித்தமாயிருப்பவனுக்கு இறையருள் வெகு சீக்கிரமே கிட்டுகிறது. அதுபோல் மற்றொன்றும்…
காதல் எனபது பக்தியின் முதல் படி தன்னை மறந்து தன் காதலைவெளிப்படுத்துகிறவனால் மட்டுமே இறைவனையும் அதைவிட அதிகமாய் காதலித்து தன்னை அர்ப்பணிக்க முடியும். கூச்சமும், மற்றவர்கள் பார்கிறாய்களே என்ற உணர்வும் இருப்பவனால் எதையும் நேசிக்க முடியாது அடையவும் முடியாது..

– எழுத்துச் சித்தர் பாலகுமாரன்

மன உளைச்சலிலிருந்து விடுபட…!

[thenkachi.bmp]

=

மன உளைச்சலிலிருந்து விடுபடறதுக்கு மூன்று முக்கிய வழிகள்

சொல்லுவாங்க. அதை சுருக்கமா RED –ன்னு சொல்லுவாங்க.

Relaxation – இடை ஓய்வு

Exercise – உடற்பயிற்சி

Diet – திட்டமிட்ட உணவு முறை.

தியானம் – மூச்சப் பயிற்சி – இதெல்லாம் இடை ஓய்வுக்கு வழிகள். எந்த வேலையையும் தொடர்ந்து செய்யக்கூடாது!

எல்லார்கிட்டேயும் கலகலப்பா பழகணும்.

மாசத்துல ஒரு நாளாவது குடும்பத்தோடு வெளியே போயிட்டு வரணும். சுலபமான உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

உடற்பயிற்சி என்கிறது நமக்காக நாம் செய்கிற ஒரு நீண்ட கால முதலீடு. LONG TERM INVESTMENT. அளவுடன் சாப்பிடணும். மெதுவா சாப்பிடணும்.

இதையெல்லாம் கொஞ்சம் மனசிலே வச்சுக்கிட்டு நடந்துகிட்டா, மகிழச்சியா இருக்கும் வாழ்க்கை!

சில பேர் சாப்பாட்டு விஷயத்திலே ரொம்ப அக்கறை எடுத்துக்கிறது உண்டு.

ஒரு குண்டு ஆசாமி, சாப்பிட உட்கார்ந்தார். முதல்லே ஒரு மாத்திரை சாப்பிட்டார்.

‘எதுக்கு?’’ –ன்னு கேட்டேன்.

‘பசி எடுக்கறதுக்கு..!’’-ன்னார்.

சாப்பிட்டு முடிச்சார். பிறகு – மறுபடியும் ஒரு மாத்திரை சாப்பிட்டார்.

‘இது எதுக்கு?’’ –ன்னு கேட்டேன்.

‘சாப்பிட்டது ஜீரணமாகிறதுக்கு!’’ – ன்னார்…!

================================

நன்றி:

இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

« Older entries Newer entries »