விலைவாசியை சமாளிக்க..

பணமாக செலவழியுங்கள்

எந்தப் பொருள் வாங்கினாலும் பணமாக செலவழியுங்கள்.
க்ரெடிட் கார்டுகள் உபயோகித்தீர்களானால் அதன் வட்டிகளால்
நீங்கள் செலவிட்ட பணத்துக்கு அதிகமா திருப்பிச் செலுத்த
வேண்டியிருக்கும்.

தவிர க்ரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் உபயோகிக்காமல்
பணமாக செவழிக்கும் பொழுது, பணத்தின் மதிபை
உணர்வீர்கள்.

=========================================================


குறைந்த சக்தி மின்விளக்குளைத் தேர்ந்தெடுங்கள்

இப்பொழுது பல நல்ல ப்ராண்டட் குறைந்த சக்தி மின் விளக்குகள்
ஒரு வருட கியாரண்டியுடன் கடைகளில் கிடைக்கின்றன.
குழல் விளக்குகள் அல்லது குண்டு பல்புகளுக்குப் பதிலாக,
குறைந்த மின் சக்தி விளக்குகளைதெ தேர்ந்தெடுங்கள்.
இதனால் உங்கள் மினசார பில்லில் பெரும் மாற்றத்தைக்
காண்பீர்கள்.

===================================================
நன்றி: தேவதை இதழ்

சின்ன விஷயமும் பயமளிக்கும்..!

ஒரு சின்ன விசயம் மனிதனை எந்த அளவிற்கு
பயத்துக்குள்ளாக்குகிறது என்பதை காலையில்
என் அனுபவத்தில் உணர்ந்தேன்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலை எழுந்து
காய்கறிகள் வாங்க செல்வது வழக்கம். இன்றும்
சென்றிருந்தேன். பல கடைகள் வரிசையாக இருக்கும்.
அதிகாலை என்பதால் அவ்வளவு வெளிச்சம் இல்லை.

ஒரு கடையின் மூலையில் நின்று கொண்டு
காலிபிளவரை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
அந்த கடையின் முதலாளி ஒரு சீனப்பெண். அவள்
என்னைப்பார்த்து திடீரென, “பாஸ், சினேக் சினேக்”
என கத்தினாள்.

பாம்பு என்றால் எனக்கு பயம் அதிகம். அதனால்
காலிபிளவரை அங்கேயே போட்டுவிட்டு ஒரே
ஓட்டமாக ஓடி கடைக்கு வெளியே சென்றேன்.

எல்லோரும் என்னைப்பார்த்து சிரிசிரி என்று சிரிக்க
ஆரம்பித்தார்கள். எனக்கோ ஒன்றும் புரியவில்லை.
எதற்காக இப்படி சிரிக்கிறார்கள்? பின்புதான்
எனக்கு விசயம் தெரிந்தது. அவள் என்னைக்கூப்பிட்டது
எதற்கு என்றால், ‘புடலங்காய் (Snake Gourd)
வந்திருக்கிறது. உனக்கு வேண்டுமா’ என கேட்க நினைத்து
‘சினேக் சினேக்’ என்று கூப்பிட்டுருக்கிறாள்.
நான் பாம்பு என நினைத்து பயந்து ஓடியிருக்கிறேன்.
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மலேசியாவில்
பாம்புகள் மிக அதிகம்.

பாம்பு இல்லை எனத் தெரிந்தும் கூட காலிபிளவர்
வாங்காமலேயே வந்துவிட்டேன்.

*************************************************
>இனியவன்

http://www.iniyavan.com/2011_10_01_archive.html

இது தான் வாழ்க்கை!

நன்றி:

http://www.tamilthottam.in/t22693-topic#130545

======================

வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களை ஒரு சிறிய புகைப்படத்தினுள்ளே அடக்கப்பட்டுள்ளது.

சிறு வயதிலிருந்து வளர்ந்து பெரியவர்களாகி இறக்கும் வரையான காலப்பகுதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த இடைப்பட்ட காலப்பகுதிக்குள் மனிதன் போடும் ஆட்டங்கள் தான் எத்தனை?

வாழ்க்கையின் மிக நீண்ட காலப்பகுதி ஓர் சிறிய படத்துக்குள் அடைக்கப்பட்டுள்ளமை சந்தோசம் அளிக்கும் விடயம் ஆக உள்ளது.

வாழ்க்கையை ரசித்து வாழுங்கள் இன்னும் அழகாகும்…

காந்தியும் நானும் – காந்தி ஜெயந்தி

இன்று அக்டோபர் 2 ம் தேதி . இன்று முக்கியமான ஒரு தலைவருக்கு பிறந்த நாள் . அவர் தான் அண்ணல் காந்தியடிகள் . காந்தி ஜெயந்தியை இன்று அனைவரும் கொண்டாடுகிறோம் . இந்த இனிய நாளில் அவரின் நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் .

காந்திஜியின் இளம் வயதில் ஒருவரோடு நட்பு கொண்டுருந்தார். அந்த நண்வர் சுருட்டு குடிக்கும் வழக்கமுடையவர். அவருடன் சேர்ந்ததால் காந்திஜிக்கும் இந்தக் கொடிய பழக்கம் தொற்றிக்கொண்டது. சுருட்டு குடிக்கும் பழக்கத்தை நாகரீகம் உள்ளவர் என்பதைக் காட்டிக் கொள்ள காந்திஜியும் நண்பருடன் சேர்ந்து புகை பிடிக்கத் துவங்கினார்.

இப்பழக்கத்தின் காரணமாக செலவுக்குப் பணம் தேவைப்பட்டது. சுருட்டு வாங்குவதற்கு பணம் வேண்டுமே. சில காலம் கடைகளிலும் நண்பர்களிடமும் பணம் கடனாகப் பெற்று சுருட்டு வாங்கினார்.

கடனை அடைப்பதற்குப் பணம் தேவைப்பட்டதும் என்ன செய்வது என்று யோசித்தார்.

தமது மூத்த சகோதரரின் தங்கக் காப்பிலிருந்து ஒரு பகுதியை காந்தி வெட்டி எடுத்தார். இவ்வாறு செய்யும் போது அவர்மீது அவருக்கே வெறுப்பும் வேதனையும் ஏற்பட்டது. தாம் செய்யும் செயல் எத்தனையது என்று எண்ணிப் பார்த்து தாங்கொணாத துயரம் அடைந்தார்.

கடைசியாக, தாம் செய்த தவறுகள் எல்லாவற்றையும் தந்தையிடம் கூறி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர் செய்தவற்றை, நேரில் சொல்வதற்கு நடுக்கமாக இருந்தது. எனவே காகிதத்தை எடுத்தார். தாம் செய்த குற்றங்களுக்குத் தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

காந்திஜியின் தந்தை கரம்சந்த் காந்தி உடல்நலம் சரியில்லாததால் படுத்த படுக்கையாக இருந்தார்.

தந்தையிடம் சென்று தாம் எழுதிய கடிதத்தைக் கொடுத்தார். அவர் படித்துவிட்டு தரும் தண்டனையை எதிர்நோக்கி அருகில் நின்றிருந்தார்.
காந்திஜி தந்த அந்த கடிதத்தை வாங்கிக்கொண்ட தந்தை, எழுந்து உட்கார்ந்துகொண்டார். கடித்த்தைப் படித்தார். படிக்கும்போது அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

கடிதத்தைப் படித்து முடித்தும் கண்களை மூடிக் கொண்டார். பிறகு கடிதத்தைக் கிழித்துப் போட்டார். பிறகு படுத்துக்கொண்டார்.

தான் செய்த தவறுகளுக்கு தந்தையிடம் தண்டனையை எதிர்பார்த்து நின்ற காந்திஜி அழுதார். கோபம் கொண்டு திட்டுவார் அல்லது அடிப்பார் என்று காந்திஜிஎண்ணினார்.

தந்தையிடம் காந்திஜி மறைக்காமல், தமது தவறுகளைக் கூறி மன்னிப்புக் கேட்டாரல்லவா? குற்றம் செய்வதை ஒப்புக்கொள்பவ‌ர்களை மன்னிக்க வேண்டும் என்பதே தந்தை கரம்சந்த் காந்தியின் எண்ணமாக இருந்தது.
இதை காந்திஜிஅஹிம்சை என்று உணர்ந்தார்.

அன்பால் எதையும் வெல்லாம் என்பதே அஹிம்சையின் ஆணிவர். இந்த தத்துவம், இளம் பிள்ளையாக இருக்கும் போதே காந்திஜியின் மனத்தில் ஆழ வேரூன்றச் செய்தது இந்தச் சம்பவமே!

பெரும் சாதனைகளை பிற்காலத்தில் செய்ய அஹிம்சையும் சத்தியமுமே காந்திஜிக்குத் துணையாக நின்றன.

தந்தையிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பையும் பெற்றபிறகு காந்திஜி, தேவையற்ற பழக்கங்கள் அனைத்தையும் விட்டுவிட்டார்.

———————————————————

நான் பள்ளியில் படிக்கும் போது நடந்த சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது . எங்கள் பள்ளியில் ஆண்டுதோறும் விளையாட்டு விழா , ஆண்டு விழா நடைபெறும் . நான் அப்போது 7 ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் . விளையாட்டு விழாவில் மாறுவேடப் போட்டி உண்டு .

அதில் நானும் கலந்து கொள்ள ஆசை . ஜேம்ஸ் சாரிடம் , சார் , என்ன வேஷம் போடலாம் என்று கேட்டேன் . ( ஏற்கனவே , நான் 6 ம் வகுப்பில் வேறு மாறுவேடப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன் ) . ஏய் , நீ காந்தி வேடம் போடு . நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும் என்றார் . சரி என்று சொன்னேன் .

காந்தியை பற்றிய விவரங்களையும் , பொருள்களையும் சேகரித்தேன் . காந்தியை பத்தி ஜேம்ஸ் சாரே எழுதி தந்தார் . காந்தி அணிந்த கண்ணாடி போல , எங்க தாத்தா வைத்திருந்தார் . காந்தி கண்ணாடி எங்க தாத்தா கொடுத்தார் . கடிகாரம் , எங்கூட படித்த நண்பன் வீட்டில் இருந்ததை கொடுத்தான் . கதர் வேட்டி எங்கப்பா கொடுத்தார் .

பின்னர் , போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன் . எல்லோரும் பாராட்டின‌ர் .

காந்தி ஜெயந்தியை கொண்டாடும் இவ்வேளையில் அவ‌ர் கூறிய‌ க‌ருத்துக்க‌ளை நினைவு கூறுவோம் .

-=========================

>ஸ்டார்ஜ‌ன்

நன்றி: http://ensaaral.blogspot.com/2009/10/blog-post.html

பெண்களை எளிதில் கவர…

 

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி?
என்பது அநேக ஆண்களின் கவலை. என்னென்னவோ
செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர
முடியவில்லையே என்பது தான் இன்றைய தலைமுறை
இளைஞர்களின் ஆதங்கம்.

இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை
இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர்.
ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம்
கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி
தோல்வியிலேயே முடிகிறது.

உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில்
கவரமுடியும்

=========================================
(படித்ததில் பிடித்தது)
நன்றி: http://yarlosai.com/?p=11807

தம்பதிகள் சலிப்பில்லாது வாழ..

?

உள்ளம் முழுவதையும் இருவரும் முழுமையாக
புரிந்து கொள்க .

விட்டு கொடுத்து வாழ பழகுக .

இருவரும் இணைந்து விவாதம் முறையாக நடத்துக .

குறைகளை புண்படாத வகையில் சுட்டிகட்டுக .

எப்போதும் பளிச்சென இருக்க பழகுக
.
பாலியல் ரீதியான குறைபாடுகள் இருப்பின் தீர்க்க
செய்க .

மணமுறிவு தீர்வு என எக்காலத்திலும் எண்ணாதீர்கள்
.
வள்ளுவர் காட்டிய இன்பத்து பால் இருநூற்று
ஐம்பது பாடல்களை இருவரும் சேர்ந்து படிக்க செய்க .

நம்புங்கள் நூறாண்டுகள் கணவன் மனைவியாக
சேர்ந்து வாழ முடியும் அதற்க்கு முயற்சி செய்க .

வாழ்க்கை வாழ்வதற்கே .

======================================
நன்றி:
http://polurdhayanithi.blogspot.com/2011/03/blog-post_21.htm

தன்நம்பிக்கை – பதட்டம்.

ஒரு மான் பிரசவ வலியில் துடித்தது. அது குட்டிகளைப் பிரசவிப்பதற்கு காலியாக இருந்த ஒரு குகைக்கு சென்றது. தனது குட்டிகளை நலமாக பிரசவித்தது. சிறிது காலம் அந்த மானும் தனது குட்டிகளுடன் அந்த குகையிலேயே வசித்து வந்தது. வெகு நாட்களாக வெளியே சென்றிருந்த சிங்கம் அந்த குகைக்கு திரும்பி வந்தது. குட்டிகளை அழைத்துக் கொண்டு ஓட முடியாது என்பதை உணர்ந்த மான் உடளே தன் குட்டிகளிடம்

” சிங்கம் குகைக்கு அருகில் வந்ததும், எல்லோரும் சத்தமாக எனக்கு சிங்கம் கறி வேண்டும் என்று கத்துங்கள்” என்று சொன்னது.

சிங்கம் குகை அருகில் வந்த உடன் குட்டி கத்தியதை குகையின் எதிரொலியால் பயங்கரமாக கேட்ட சிங்கம் நம்மைவிட பலசாலியான மிருகங்கள் உள்ளே இருப்பதாக நினைத்து ஓட்டமெடுத்தது.

ஒரு நரி, ஓடி வருகிற சிங்கத்தை பார்த்து,

” ஏன் ஓடுகிறீர்கள் ? ” என்று கேட்க,

” என்னுடைய குகையில் வேறு ஏதோ மிருகங்கள் குடியிருக்கின்றன. எவை என்னைக் கொள்வதற்கு காத்திருக்கிறது ” என்று சிங்கம் சொன்னது. அதை கேட்ட நரி,

” வேறு மிருகங்கள் இல்லை. மானும் அதன் குட்டிகளும்தான் இருக்கிறது. எனக்குத் தெரியும், வாருங்கள் பெரிய மானை நீங்கள் சாப்பிடுங்கள். குட்டிகளை நான் சாப்பிடுகிறேன்.” என்றது. அதற்கு சிங்கம்,

” சரி வருகிறேன். ஆனால் நீ ஏற்கனவே என்னை ஏமாற்றியவன், அதனால் உன்னுடைய வாலையும் என்னுடைய வாலையும் முடிந்து கொண்டு செல்வோம் ” என்று சொல்லி அதன் வாலைத் தன்னுடைய வாலுடன் பிணைத்துக் கொண்டது. சிங்கத்தை நரி அழைத்து வருவதைப் பார்த்த மான், அருகில் இரண்டும் வந்த உடன் தன் குட்டிகளிடம் சத்தமாக,

” கவலைப்படாதீர்கள் பிள்ளைகளே, இன்று நாம் எப்படியும் சிங்கக்கறி சாப்பிடுவோம், அதை எப்படியாவது அழைத்து வந்து விடுவேன் என்று நரி அண்ணன் சொல்லிச் சென்றுள்ளது. நிச்சயம் நரி அண்ணன் சிங்கத்துடன் வரும் ” என்று சொன்ன உடன்,

இதை கேட்ட சிங்கம் தலைதெறிக்க ஓடியது. அதன் வாலோடு தன் வாலைப் பிணைத்திருந்த நரி அடிபட்டு இறந்தது.

– இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்வது, எந்த சூழ்நிலையிலும் தன்நம்பிக்கையும் முயற்சியையும் விட்டுவிட கூடாது. ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் அதை நினைத்து கவலை படுவதாலோ வருத்தப் படுவதாலோ எந்த மாறுதலும் நிகழப்போவதில்லை. அதை நினைத்து கவலைப் படுவதற்கு பதிலாக அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்தால் நடப்பவையாவது நல்லவையாக நடக்கும்.

======================

(படித்ததில்பிடித்தது)

அந்த நேர ஆசை..!

வனவாசம், ராவண வதம் எல்லாம் முடிந்து
அயோத்திக்குத் திரும்பிய பிறகு சீதை கருவுருகிறாள் .

கருவை வயிற்றில் சுமந்த சீதைக்கு ஒரு வித்தியாசமான
ஆசை .

”வனவாசத்தின் போது தங்கியிருந்த இடங்களையும்
காடுகளையும் பார்க்க வேண்டும் ‘ என்கிறாள் சீதை .

ராமபிரான் அதைப் பிடிவாதமாக மறுத்துவிட்டார் .
‘ நம் மனதில் துயரமான எண்ணங்களைப் பதிய வைத்த
இடங்கள் அவை . சந்தோஷமான இந்தத் தருணத்தில்
அங்கு ஏன் போக வேண்டும் ? ‘ என்று கேட்டார் ராமபிரான் .

ஆனால், அரசவையில் இருந்த முனிவர்கள் எல்லோருமே
சீதையின் பக்கம்தான் ! ‘ கர்ப்பிணியின் மசக்கை விருப்பத்தை
அலட்சியம் செய்யக்கூடாது .

தேவியைக் கூட்டிச் சென்று அவர் விரும்பும் இடங்களைச்
சுற்றிக் காட்டு ராமா ! ‘ என்று உத்தரவிட்டார்கள் .

கருவின் இதயம் தாயிடமிருந்துதான் உருவாகிறது . இரண்டு
இதயங்களும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ள நேரத்தில்
ஏற்படும் ஆசைகளைத் தான் ‘ மசக்கை ‘ என்கிறோம்.
அதை நிறைவேற்ற வேண்டியது குடும்பத்தாரின் கடமை .

==================================
நன்றி:
— ஆனந்தவிகடன் .
http://santhanamk.blogspot.com/2011/05/blog-post_19.html

ஹி.. ஹி… அனுபவம் – பிளவுஸும் நானும்!

ஆம்படையான் வாய்ப்பதும், ஆடை வாய்ப்பதும் அவரவர்

அதிர்ஷ்டம் என்ற ஒரு பழமொழி சொல்வார்கள்.

ஆண்டவன் அருளால் எனக்கு முதல் பாதி பழமொழி

நிஜமாகிவிட்டது. ஆனால் அடுத்த பாதி? இதைக் கேட்டுவிட்டு

நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

இப்போது இருப்பதுபோல் பெண்களுக்கான நவநாகரிக

உடைகள் நான் பள்ளியில் படிக்கும்போது இல்லை. அந்தப்

பாவாடை சட்டையையும் “வளரும் குழந்தை’ என்று

டெய்லர் தாராளமாகத் தைத்து விடுவார் என்பதால், இரண்டு

ஆட்கள் உள்ளே புகுந்து கொள்ளலாம். சர்க்கஸ் கூடாரம் போல்

பாவாடை தைப்பார்கள். தாவணியும், புடைவை அளவில் பாதி

இருக்கும்.

படித்து முடித்து வேலைக்குப் போகும்போதுதான் பிரச்னையே

ஆரம்பித்தது. சட்டை தைத்து தர அருமையான டெய்லர்

கிடைத்தார். அவர் ஒரு கட்சியின் தீவிர தொண்டர். அடிக்கடி

ஆர்ப்பாட்டம், மறியல் என்று கலந்துகொண்டு சிறை சென்று

விடுவார். நான் துணியைக் கொடுத்து அது தைத்த வர சமயத்தில்

மூன்று மாதங்கள் கூட ஆகிவிடும். இந்த இடைப்பட்ட காலத்தில்

எனக்கு உடம்பு இளைத்தோ, சற்று பருமனாகியோ அளவுகள்

சரியாக இருக்காது.

மாரபைப்பால் அவரும் மரணமாக, எனக்கு சிரமம் ஆரம்பித்தது.

அரும்பாடுபட்டு ஒரு டெய்லரைக் கண்டு பிடித்து நான்கு

துணிகளைக் கொடுத்தேன். அவர் ஒருவாரம் கழித்து வரச்

சொன்னார். அதன்படி நானும் சென்றேன். அவர் மேஜையில்

துணிகளைப் பரப்பி வைத்து, தீவிரமாக தன் மகனுக்கு வெட்ட

கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அத்தனையும் என்னுடைய

சட்டைத் துணிகள். அதில்தான் அந்தப் பையன் சட்டை தைக்கக்

கற்றுக்கொண்டு இருந்தான்.

என்னைப் பார்த்த டெய்லர், “நீங்க வீட்டுக் போங்கம்மா; பாதி

முடிச்சுட்டேன். இன்னும் இரண்டு நாளில் முடிந்துவிடும்’ என்றார்.

அதன்படியே சட்டைகள் வந்தன. அரக்கப்பரக்க அதை அணிந்து

கொண்டு பள்ளிக்குக் கிளம்பியபோது வழியில் பார்த்தவர்கள்

வழக்கத்தை விட அதிகமாகச் சிரித்து, “என்ன டீச்சர், இந்த

சட்டைதான் புது ஃபேஷனா? ஒவ்வொரு கையும் வேவ்வேறு

அளவில் இருக்கிறதே’ என்றனர்.

அப்போதுதான் நான் அதனையே பார்த்தேன். பின்னர் இடது கைப்

பக்கம் புடைவையை சற்று இழுத்துவிட்டு சமாளித்து, மாலையில்

டெய்லரிடம் கேட்டபோது, “போனால் போகிறது விடுங்கள்.

பையனுக்குக் கொஞ்சம் புரிபடலை. அடுத்ததில் பார்த்து கொள்வோம்’

என்றார்.

எனக்குத் தலை சுற்றியது. போனால் போகிறது என்று நானல்லவா

சொல்ல வேண்டும்? அடுத்த துணிகளையும் சின்னப் பையன்

தைத்துக் கற்றுக் கொள்ளப் போகின்றானா? வேண்டாம் விஷப்

பரிட்சை என்று எனக்குத் தெரிந்த பெண்மணியைத் தேடி தைத்துத்

தர சொன்னேன். ஏகப்பட்ட நிபந்தனைகள் போட்டார். “துணியைக்

கொடுத்துவிட்டு உடனே நச்சரிக்கக்கூடாது. வீட்டு வேலைகளை

முடித்து விட்டு, தைப்பதற்கு மூடும் இருந்தான் தான் தைப்போன்’

என்று சொல்லி நான்கு மாத இடைவெளியில் சட்டையைக்

கொடுத்தவர், பின்னர் “தைப்பதையே நறுத்தி விட்டேன்’ என்றார்.

இதையெல்லாம் பார்த்த என் கணவர் ஒரு டெய்லர் ஜோக்

சொன்னார். ஒருவன் துணி எடுத்து டெய்லரிடம் கொடுத்து விட்டு,

ஒரு குற்றத்துக்காக பதினான்கு ஆண்டுகள் சிறையில் இருந்து

விட்டு வெளியில் வந்ததும் முதலில் டெய்லரை தேடிச் சென்றானாம்.

“சட்டை தைச்சாச்சா. பட்டன் கட்ட வேண்டியதுதான் பாக்கி’ன்னானாம்.

அடுத்தவரை நம்பிப் பயன் இல்லை. நம் கையே நமக்கு உதவி

என்று டைய்லரிங் வகுப்புக்குச் சென்றேன். ஆனால், தொடர் அறுவை

சிகிச்சைகள் செய்ததால், தையல் மிஷினில் உட்காரக்கூடாது என்று

சொல்லிவிட்டார்கள். கோடை விடுமுறைக்கு என் மகளைப் பார்க்க

சென்னை சென்ற எனக்கு அந்தத் தெருவில் ஒரு டெய்லரைப்

பார்த்ததும் சந்தோஷமாகி விட்டது.

கஜினி முகம்மது மாதிரி மீண்டும் துணிகளுடன் படையெடுத்து

பிளவுஸ் தைத்துத் தர முடியுமா என்றேன். “முடியும், ஆனா

முடியாது’ என்றார். ஒரு பிளவுஸ் தைக்கும் நேரத்தில் ஒரு சுடிதார்

தைத்தால் அதற்குத்தான் கூலி அதிகம் என்றார். பின் ஏகப்பட்ட

வேண்டுதலுடன் (மந்திரியின் சிபாரிசுக் கடிதம் தான் பாக்கி) அரை

மனத்துடன் சம்மதித்தார்.

முதல் இரண்டு துணிகளை அழகாகத் தைத்துக் கொடுத்ததும்

எனக்குத் தலைகால் புரியவில்லை. வாராது மாமணி வந்தது

போல் மகிழ்ந்து மேலும் நான்கு துணிகளைக் கொடுத்தேன்.

அன்று போனவரை இன்றுவரைக் காணவில்லை. எல்லோரிடமும்

கடன் வாங்கிவிட்டு ஊரைவிட்டே ஓடிவிட்டாராம்.

என் நிலையைப் பார்த்ததும் பரிதாபப்பட்ட என் மகள், ஒரு பிரபல

ஜவுளிக்கடைக்கு அழைத்து சென்றாள். அங்கு ரெடிமேட்

பிளவுஸுகள் இருந்தன. பளபளவென்ற பட்டுத் துணியிலும்,

ஜொலிக்கும் கல் வேலைப்பாடுகளுடன் இருந்ததை எல்லாம்

ஒதுக்கிவிட்டு எனக்கேற்றாற்போல் தேடினேன். பஃப் வைத்த

கை முழங்கை வரை கை வைத்த சட்டைகளையும் ஒதுக்கி

எளிமையாகத் தேடினேன். இரண்டு அங்குலக் கை வைத்தது,

அதுகூட இல்லாமல் முதுகு என்ற மிரட்டிய சட்டைகளும் உண்டு.

ஒரு வழியாக எளிமையான முறையில் நேர்த்தியாகத் தைக்கப்பட்ட

சட்டையை எடுத்த விலையைப் பார்த்ததும் எனக்குக் கிறுகிறுவென்றது.

விலை ஜஸ்ட் அறுநூறு ரூபாய்!

அது ஏதேனும் பேக்கேஜ் சிஸ்டமா, ஒரு பிளவுஸ் விலைதான்

என்று கேட்ட எனக்கு விளக்குவதற்கே அந்த விற்பனைப்

பெண்மணி ஒரு காஃபி குடித்திருக்க வேண்டும். “விலையைப்

பார்க்காதே உனக்கு வேண்டியதை எடுத்துக்கொள்’ என்று என்

மகள் சொன்னாலும் எனக்கு மனம் கேட்கவில்லை.

எல்லாவற்றையும் விட உச்சக்கட்டம் இந்தத் தமிழ் புது

வருடத்துக்குத் தைத்த சட்டைத்தான். வழக்கம் போல் ஒரு

மாதத்துக்கு முன்பே கொடுத்து, சித்திரை புதுவருஷத்துக்கு முதல்

நாள் வந்த சட்டையை மறுநாள் பூஜை முடிந்ததும் அணியத்

தொடங்கினேன். அப்போழுது தான் அதிர்ச்சியாக இருந்தது.

அதில் பட்டனே தைக்கவில்லை.

வீட்டில் வேறு “கோயிலுக்குப் போகவேண்டும் சீக்கிரம் கிளம்பு’

என்று அவசரப் படுத்த சேஃப்டி பின்னை மாட்டிக்கொண்டு ஜோபனா

ரவி போல் இழுத்து போர்த்திக்கொண்டு சென்றேன்.

(ஒரு வேளை ஷோபனா ரவிக்கும் என்னைப் போல் சிறந்த

டெய்லர் கிடைக்காமல் திண்டாடினாரோ) வடிவேலு ஒரு படத்தில்

பைக்குக்கு பெட்ரோல் போடும் போது, “இஞ்சின் இருக்கா?’ என்று

கேட்பது போல், இனி சட்டை தைத்து வந்தால் பட்டன் இருக்கிறதா

என்று பார்க்க வேண்டும்போல் இருக்கிறது.

எனக்கு நன்றாக தைத்துக் கொடுப்பவர்கள் ஒன்று ஊரைவிட்டுப்

போய்விடுகிறார்கள் அல்லது உலகத்தை விட்டு போய்

விடுகின்றார்கள். அல்லது தொழிலையே நிறுத்திவிடுகின்றார்கள்.

இதற்கு என்னதான் தீர்வு என்று கேட்டதற்கு, என் மகள் சொன்ன

பதில், “நீ பேசாமல் ரெடிமேட் சுடிதார் போட்டுக்கொள்.’

=================================================

– டி. உமா மகேஸ்வரி, திருவெண்காடு

நன்றி: மங்கையர் மலர்

 

சந்தர்ப்பங்களை உருவாக்குங்கள்

ஒரு தேவதையை சிற்பி வடித்தார். அது பறப்பதற்குத் தயாரான நிலையில்

இரு இறக்கைகள் கைகளின் இருபுறமும் விரித்து இருந்தது. கையில் கூர்மையான கத்தி ஒன்று இருந்தது.தேவதையின் முகத்தில் முன்புறம் தலை முடி தொங்கிக் கொண்டிருந்தது. பின்பக்கமோ வழுக்கை.சிலையின் கீழே உள்ள பீடத்தில் உரையாடல் ஒன்று பொறிக்கப் பட்டிருந்தது:-

நீ ஏன் பெருவிரல் நுனியில் நிற்கிறாய்?

எந்த நேரத்திலும் பறப்பதற்குத் தயாராக.

இரண்டு இறக்கைகள் விரிந்திருப்பது ஏன்?

காற்றைவிட வேகமாக கடுகிப் பறப்பதற்காக.

உன் கையில் கூரிய கத்தி ஏன்?

நான் கத்தி முனையைவிடக் கூர்மையானவன் என்று உணர்த்துவதற்காக.

உன் தலைமுடி ஏன் முகத்தின் முன்னால் தொங்குகிறது?

பார்ப்பவர்கள் எளிதில் என்னைப் பற்றுவதற்காக.

பின்னால் வழுக்கை ஏன்?

ஒருமுறை பிடிக்கத் தவறுபவன் கையில் அகப்படாமல் இருப்பதற்காக.” நீ யார் ?”

“நான் தான் சந்தர்ப்பம்.”

“உன்னை சிற்பி யாருக்காக படைத்தான்?”

“உனக்காகத்தான்.”

சந்தரப்பம் வரும்போது அதைப் பிடித்துப் பயன்படுத்தத் தவறினால் அது

அகப்படாது என்பதை அருமையாக உணர்த்துகிறது இந்த சிலை.

முன்னேற சந்தர்ப்பங்களை நாமே உருவாக்க வேண்டும்.சந்தர்ப்பங்களை சாதகமாக உருவாக்கிக் கொள்வோம்

Posted by Pristli Jose

நன்றி http://jose6687.blogspot.com/2010/09/blog-post_13.html

« Older entries Newer entries »