காதை தொட்டுக் கொண்டே…
ஜூலை 8, 2017 இல் 8:22 முப (அனுபவம்)
நான், மதுரை, ஆர்.சி., நடுநிலைப் பள்ளியில், 1984ல் ஒன்றாம்
வகுப்பு சேர்ந்த போது நடந்த நிகழ்வு…
தற்போது என் வயது 38. அப்போதெல்லாம், பள்ளியில் சேர்வதற்கு,
வலது கையால் இடது காதை தொட வேண்டும். அப்படி தொட்டால்
தான், பள்ளியில் சேர்த்து கொள்வர்.
‘நீ பார்ப்பதற்கு சிறுமியாக இருப்பதால், உன் வலது கையால்,
இடது காதை தொட சொல்லுவர். அப்படி தொட்டால் தான்,
பள்ளியில் சேர்த்துகொள்வர். எனவே, இப்போதிலிருந்து, காதை
தொட பழகிக்கொள்’ என்று என் பெற்றோர், இரண்டு நாட்களுக்கு
முன்பே பயத்தை ஏற்படுத்திவிட்டனர்.
மறுநாள், தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்தவுடன்,
நான் காதை தொட்டுக்கொண்டே இருந்தேன்.
‘நான் சொல்லாமலேயே நீ தொட்டுவிட்டாயே’ என்று சிரித்தபடி
கேட்டார் தலைமையாசிரியர்.
‘தொடவில்லை என்றால், பள்ளியில் சேர்க்க மாட்டீர்கள் என்ற
பயத்தில், வரும் வழியில் காதை தொட்டுக்கொண்டே தான் வந்தாள்’
என்றனர் பெற்றோர்.
அதற்கு தலைமை ஆசிரியர், ‘நீ நன்றாக தொட்டுவிட்டாய்…
உன்னை பள்ளியில் சேர்த்து கொள்கிறோம்’ என்றார்.
பள்ளியில் சேரும் போது அழாமல், படிப்பில் ஆர்வமாய் இருந்ததை
பாராட்டியதோடு, சாக்லேட்டும் கொடுத்தார் தலைமை ஆசிரியர்.
அந்த வயதில், ஏன் இவ்வாறு தொட சொன்னர் என்று புரியவில்லை.
பிள்ளைகளை, ஐந்து வயது நிரம்பும் முன் பள்ளியில் சேர்க்கின்றனரா
என்றும், பிள்ளைகளின் வளர்ச்சியை தெரிந்துக் கொள்ள இவ்வாறு
செய்தனர் என்றும், அதன் பின் தான் புரிந்தது.
ஆனால், இன்றைய காலகட்டத்தில், பிள்ளைகளை, மூன்றரை
வயதிலேயே ப்ரி கே.ஜி.,யில் சேர்த்து விடுகின்றனர்; நான்கு வயதில்,
எல்.கே.ஜி.,யில் சேர்த்து, எழுத ஆரம்பித்து விடுகின்றனர்.
குழந்தைகள் எத்தனை பாவம்.
அந்த நாளை என்னால் மறக்க முடியவில்லை
–
———————————————–
– கே.சிவசங்கரி, மதுரை.
எளியதொரு புன்னகை
ஜூலை 7, 2017 இல் 10:55 முப (அனுபவம்)
சில நாட்களுக்கு முன்னர் வாடகைக் கார் ‘புக்’
செய்திருந்தேன். அரை மணி நேரமாகியும் வண்டி
வரவில்லை. அழைத்தேன். பதிலில்லை.
அந்தக் காரை ரத்து செய்யலாம் என்று நினைத்த போது
ஓட்டுநரே அழைத்தார்.
“தம்பி டிராபிக்கா இருக்கு, வந்துட்டு இருக்கேன்.
பத்து நிமிஷத்துல வந்தர்றேன், கேன்சல் பண்ணிடாதீங்க”.
இருபது நிமிடம் கழித்து வந்தார். வயது 50-க்கும் மேல் இருக்கும்.
பக்கத்தில் ஒரு இளைஞர் இருந்தார். காரில் ஏறியவுடன்
‘ஒன் டைம் பாஸ்வேர்’டைச் சொன்னேன். செல்பேசியின்
செயலியில் அந்த எண்ணை அவரால் அழுத்தவே முடியவில்லை.
பிறகு எப்படியோ அந்த இளைஞர் எண்ணை அழுத்திக்
கொடுத்தார். காரைக் கிளப்பியபோதும் செயலியைச் சரியாக
அழுத்தாததால் கார் கிளம்பவில்லை. அந்த இளைஞரே பிறகு
அதையும் அழுத்தித் தந்தார்.
நான் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தேன். பிறகு அவரே பேச
ஆரம்பித்தார். “இந்த தொடுற போன் யூஸ் பண்ணதில்லைங்க
தம்பி. ரெண்டு நாளாதான் இதுல ஓட்டுறேன். நேத்து ஆன்
பண்ண தெரியாமலேயே காரை எடுக்கல தம்பி.
இவன் என் பையன், காலேஜ்ல படிக்கிறான். இன்னக்கி ஒருநாள்
கத்துக் குடுக்க வந்திருக்கான்”.
அந்தப் பையன் எதற்கும் இருக்கட்டும் என்று தலையாட்டி
வைத்தான். நான் பதிலேதும் சொல்லவில்லை. அந்தப் பையன்
ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
அலுவலகம் வந்ததும் அவரே சரியாக ட்ரிப்பை முடித்து வைத்தார்.
சரியாக பட்டனை அழுத்திவிட்டதாக உணர்ந்து அவர் மகனைப்
பார்த்தார். அவனும் தலையாட்டினான். என் பக்கம் திரும்பி,
“ ஜீரோ காட்டுதுங்க. பேங்க்ல பணத்தை போட்டீங்களா?” என்று
கேட்டார்.
ஆமாங்க என்றேன். அவர் மகன் அது ‘வேலட்’ நைனா என்றான்.
அவர் தலையாட்டிக் கொண்டார்.
நான் இறங்குவதற்குள் அடுத்த சவாரியிடமிருந்து அவருக்கு
அழைப்பு வந்திருந்தது. அவரே அதை சரியாக உற்றுப் பார்த்து
‘அக்செப்ட்’ செய்துவிட்டு, முகம் முழுக்கப் புன்னகையோடு
என்னையும் அவர் மகனையும் பார்த்தார்.
அளப்பரிய தொழில்நுட்பங்களை, எளியதொரு புன்னகை
வென்றெடுத்த தருணமது.
–
——————————————-
நெல்சன் சேவியர்
தி இந்து
பின்னோக்கி செல்வது…
ஒக்ரோபர் 3, 2016 இல் 2:11 பிப (அனுபவம், பொதுவானவை)
ஒரு சமயம், காந்தியடிகளுடன் நேரு போன்றவர்கள்
நடைப்பயணம் சென்றுகொண்டிருந்தனர். அப்போது
அவர்கள் சென்ற வழியில் ஒரு சிறு ஓடை குறுக்கிட்டது.
–
அதைப் பார்த்த காந்தியடிகள், அதில் இறங்காமல் நின்றபடி
பின்னே வந்தவர்களிடம், ‘‘இதைத் தாண்டிவிட முடியுமா?’’
எனக் கேட்டார். அதற்கு நேருவோ, ‘‘ஓ முடியுமே’’ எனக்
கூறியவாறு சற்றுப் பின்னோக்கிச் சென்று மறுபடி வேகமாய்
ஓடிவந்து அதைத் தாண்டினார்.
–
காந்தியடிகள் புன்னகைத்தவாறே, ‘‘பரவாயில்லை. தாண்டி
விட்டீர்கள். ஆனாலும், ஒரு சிறு விஷயம். ஐந்து அடி அகலமுள்ள
இந்த ஓடையைத் தாண்டுவதற்கு நீங்கள் 10 அடி தூரம் பின்னால்
செல்ல வேண்டியது இருந்தது’’ எனச் சொல்ல…
அங்கிருந்தவர்கள் அனைவரும் அதைக் கேட்டுச் சிரித்தனர்.
–
—————————–
குழந்தை மனம்…
ஏப்ரல் 4, 2013 இல் 7:49 பிப (அனுபவம்)
–
எல்லோருக்குள்ளும் புதைந்து கிடக்கும் குழந்தை குணம்….
ஒரு சிலரால் மட்டுமே வெளிகாட்டி கொள்ளமுடியும்…!
——————–
நன்றி: முகநூல்
தனிமை
பிப்ரவரி 21, 2013 இல் 2:39 முப (அனுபவம்)
பல காரணங்களால் நாம் தனிமையில் இருக்க விரும்பலாம். சிலருக்கு.. கடற்கரை ஓரமாக நடந்துச் செல்ல தோன்றும்.. சிலருக்கோ ஒத்தயடிப்பாதையில் நடந்துப் போக பிடிக்கும். என்னைப் போல சிலருக்கு மலை உச்சிக்குச் சென்று வர பிடிக்கும். எந்த மாதிரியான தனிமை உங்களுக்குப் பிடிக்கும். மீண்டும் நினைவுப்படுத்திக்கோங்க.
கண்டுபாவனை
பிப்ரவரி 3, 2013 இல் 3:15 பிப (அனுபவம்)
பொறுமைக்கான மாசூல் அது!!
–
=================================
நன்றி:
ஆன்லைன் வர்த்தகம் மூலம் தங்கம்…
ஏப்ரல் 25, 2012 இல் 2:56 முப (அனுபவம்)
கான்பிடன்ஸ் கார்னர்..
பிப்ரவரி 18, 2012 இல் 5:04 முப (அனுபவம்)

கால் சறுக்கி மல்லாந்து விழப்போனபோது,
சக்கர நாற்காலியில் இருந்த இளைஞர் தாங்கிப்
பிடித்தார். மிக வேகமாக அடிபட்டிருக்க வேண்டியவர்
தப்பித்தார்.
–
நன்றி சொல்ல திரும்பியபோது தாங்கிப் பிடித்த இளைஞர்
கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
–
. ”நான்காண்டுகளுக்கு முன் இதே போல் விழுந்தேன்.
என்னைத் தாங்கிப் பிடிக்க யாருமில்லை. என்னால்
பிடிக்க முடிந்ததில் மகிழ்ச்சி”என்றார்
–
===============================================
>நமது நம்பிக்கை – ஜனவரி 2012 (இதழிலிருந்து)