சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு
காலாண்டுக்கும் மத்திய அரசு திருத்தி வருகிறது. நாளை ஏப்ரல்
1ஆம் தேதி முதல் புதிய ஏப்ரல் – ஜூன் காலாண்டு தொடங்க
உள்ளது.
இந்நிலையில், ஜூன் காலாண்டுக்கான சிறு சேமிப்பு வட்டி விகிதம்
குறித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் – ஜூன் காலாண்டுக்கு சிறு சேமிப்பு திட்டங்களுக்கு
வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதங்கள்
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும்
என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய வட்டி விகிதங்கள்:
சேமிப்பு டெபாசிட் (Savings deposit) : 4%
1 ஆண்டு டைம் டெபாசிட் (1 Year Time deposit) : 6.8%
2 ஆண்டு டைம் டெபாசிட் (2 Year Time deposit) : 6.9%
3 ஆண்டு டைம் டெபாசிட் (3 Year Time deposit) : 7%
5 ஆண்டு டைம் டெபாசிட் (5 Year Time deposit) : 7.5%
5 ஆண்டு தொடர் வைப்பு நிதி (RD) : 6.2%
சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் (Senior citizen savings
scheme) : 8.2%
மாத வருமான திட்டம் (Monthly Income Account Scheme) :
7.4%
தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings certificate) :
7.7%
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) : 7.1%
கிசான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra) : 7.5%
(115 மாத முதிர்வு)
செலவமகள் சேமிப்பு திட்டம் (Sukanya Samriddhi Account Scheme)
: 8%
கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
இதில் சேமிப்பு டெபாசிட், பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
திட்டங்களுக்கு வட்டி விகிதம் மாற்றப்படவில்லை. மற்ற
அனைத்து திட்டங்களுக்கும் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
கிசான் விகாஸ் பத்திரம் திட்டத்தில் இதற்கு முன் 7.2% வட்டி
வழங்கப்பட்டது. ஆனால் அப்போது முதிர்வு காலம்
120 மாதங்களாக இருந்தது. தற்போது வட்டி விகிதம் 7.5% ஆக
உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், முதிர்வு காலம் 115
மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
;நன்றி: தமிழ் சமயம் செய்திகள்
மறுமொழியொன்றை இடுங்கள்