மனிதனுக்குள் இருக்கும் காதலாகட்டும் ; சோகமாகட்டும் ;
இன்பம் – துன்பம் எதுவாகிலும் அவற்றைக் குடும்பத்தில்
ஒருவராகப் பார்க்கப்படும் சிட்டுக்குருவிகளோடு பகிர்ந்து
கொண்டு ஆறுதலை தேடுவதுண்டு.
இந்நிலையில், மனிதனுக்கும் சிட்டுக்குருவிக்கும்
இடையேயான எல்லையற்ற பாசப் பிணைப்பை வெள்ளித்
திரையில் தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் பாடல்
காட்சிகளில் இடம்பெற செய்து, மிக அழகுற காட்சிப்
படுத்தினர்.
அதற்கேற்ப, பாடலாசிரியர்களும் உயிரோட்டமான பாடல்
வரிகளை உணர்வுபூர்வமாக உட்புகுத்தினர். அவற்றிலுள்ள
அனுபவங்களை நாமும் அறிந்துகொள்வோம். அன்றைய
தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே.சோமு நண்பர் ஒருவரை
சந்திப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
நண்பரோ வீட்டில் இல்லை. ஆனால், நண்பரின்
துணைவியாரோ வீட்டிலுள்ள சிட்டுக்குருவிகளிடம் பேசிக்
கொண்டிருந்தாராம். அதற்கு சிட்டுக்குருவிகளும் அதன்
பாஷையில் பதிலளித்துக் கொண்டிருந்ததாம்.
அவற்றை உற்றுக் கவனித்த இயக்குனர், “சிட்டுக்குருவிகளிடம்
என்ன பேசினீர்கள்” என நண்பரின் துணைவியாரிடம் கேட்க,
அதற்கு அவரோ, “வெளியே சென்ற என் கணவர் எப்ப வீடு
திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு எனக்கு மட்டுமல்ல ; எங்கள்
வீட்டு சிட்டுக்குருவிகளுக்கும் உண்டு” என்றாராம்.
அதனைக் கேட்டு ஆச்சர்யப்பட்டுபோன கே. சோமு, அவற்றைத்
தான் இயக்கிய, ‘டவுன் பஸ்’ என்ற திரைப்படத்தில் காட்சிப்படுத்த
விரும்பினாராம். அதற்காக பாடலாசிரியரும் கவிஞருமான
கா.மு.ஷெரீப்பிடம் அவற்றை பாடலாக்கி தருமாறு கூறினாராம்.
கவிஞரோ, “சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?
என்னை விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பலே” என்ற
உள்ளன்புமிக்க பாசமிகு பாடலை கற்பனை நயதோடு இயற்றி
விட்டாராம். அப்பாடல் இயக்குனருக்கு மிகவும் பிடித்துப்போகவே,
அவற்றை அத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தி விட்டாராம்.
அது மட்டுமின்றி ; அப்பாடல் காட்சியானது – தொடங்குவதற்கு
முன் , அப்படத்தில் நடித்த அஞ்சலிதேவி சிட்டுக்குருவிகளிடம்
பேசும் வசனங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.
வரவேற்புக்குரிய அந்த வசனங்களை இதோ உங்களுக்கு
விருந்தாகப் படைக்கிறோம்,
“என்னடா ராஜா…நீங்களெல்லாம் இப்படி சத்தம் போடுறீங்க.
சொல்ல மாட்டீங்களா. சொல்லுங்கடா. நீங்க சொல்லலனா
உங்களோட நான் பேசமாட்டேன். டுடு.. டுடு.. ஓ…அய்யா இன்னும்
ஏன் வரலன்னு கேட்குறீங்களா. வந்திடுவார். ஆங். நான்
உங்களுக்கு ஒரு சேதி சொல்லட்டுமா என தொடங்கும்
அப்பாடலை , இன்று கேட்டாலும் மனது மட்டற்ற மகிழ்ச்சியில்
திளைக்கும். ; அங்கமெல்லாம் ஆனந்தக் கூத்தாடும்.
நன்றி: ஜீ நியூஸ்
மறுமொழியொன்றை இடுங்கள்