பெண்கள் வெல்லம் சாப்பிடுவது மிகவும் நல்லது

வெல்லத்தின் நன்மைகள் ஏராளம் தாராளம். அவற்றின் நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். குறிப்பாக வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

இரும்புச் சத்து வெல்லத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம். சித்த மருத்துவத்தில் சில நோய்களுக்கான மருந்தில் வெல்லத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வெல்லம் ஒரு ஆன்டி அலர்ஜிக் என்று பலருக்கும் தெரியாது.

வெல்லத்தில் அதிக நார்ச்சத்து உண்டு. அது உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்யக் கூடியது. அதனால்தான் உணவு உண்ட பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுகிறார்கள் பலரும். செரிமானத் திரவங்களைத் தூண்டிவிட்டு, ஜீரணத்தை சரி செய்கிற சக்தி வெல்லத்துக்கு உண்டு.

வெல்லம் நம் இந்திய உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய இயற்கை இனிப்பு ஆகும்.

பழங்காலத்திலிருந்தே, வெல்லம் சமையலறையில் மட்டுமல்ல, ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

வெல்லம் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படுகிறது.

வெல்லத்தில் ஃபோலிக் அமிலம், இரும்பு, கால்சியம், செலினியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் எல்லாம் நம் உடலில் ஏற்படும் பல நோய்களை தடுக்கிறது.

ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரைக்கு பதில் வெல்லம் நல்ல மாற்றா? சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட இது இயற்கையானது என்று ஏன் நினைக்கிறோம்? இந்தக் கூற்றை ஆராய்ந்து, வெல்லத்தின் ஊட்டச்சத்து மதிப்பை சிறப்பாக ஆராய்ந்து, சர்க்கரையுடன் ஒப்பிடலாம்.

அகமதாபாத் அப்பல்லோ மருத்துவமனையின் ஆலோசகர் டாக்டர் ஷஷிகாந்த் நிகம் கூறுகையில்,

கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருளின் ஒரு வடிவம்தான் “வெல்லம்” என்று விளக்குகிறார். இதில் 65-70 சதவீதம் சுக்ரோஸ் உள்ளது, அதே சமயம் வெள்ளை சர்க்கரையில் 99.5 சதவீதம் சுக்ரோஸ் உள்ளது.

வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும்போது வெல்லத்தில் சுக்ரோஸ் குறைவாக இருப்பதால், அதை உட்கொண்ட பிறகு குளுக்கோஸ் அளவு மெதுவாக அதிகரிக்கிறது என்று டாக்டர் நிகாம் கூறுகிறார்.

இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையைவிட வெல்லத்தின் தாக்கம் குறைவு தான். ஆனால் கிளைசெமிக் இன்டெக்ஸ் எனப்படும் ஒரு முக்கிய காரணி காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு இது அவ்வளவு நல்லதாக கருதப்படுவதில்லை.

இரத்த சர்க்கரையில் தேங்காய் வெல்லம் மற்றும் டேபிள் சர்க்கரையின் விளைவுகளை ஒப்பிடும் சமீபத்திய ஆய்வில் இதே போன்ற வடிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கரும்புச் சர்க்கரையை விட வெல்லத்தில் உள்ள புரதச் சத்து அதிகம். எனினும் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரைக்கு சிறந்த மாற்றாக வெல்லம் உட்கொள்ளலாம் ஆய்வு பரிந்துரைக்கவில்லை.

பல இந்திய பாரம்பரிய உணவுகளில் வெல்லம் ஒரு பகுதியாகும். கரும்பு உற்பத்தி மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் வெல்லம் எப்போதும் நம் வீடுகளில் விரும்பப்படுகிறது.

பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், குறிப்பாக இரும்பு மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் நல்ல ஆதாரமாக வெல்லம் உள்ளது என்று டாக்டர் நிகம் விளக்குகிறார். வைட்டமின் பி12 நிறைந்த வெல்லம் சந்தையில் எளிதாகக் கிடைக்கிறது.

(இங்கே வெல்லத்தைப் பற்றி கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. மருத்துவ ஆலோசனையைப் பெற்று உட்கொள்வது சிறந்தது.)

நன்றி: கல்கி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: