செம்மஸ்டர் எக்ஸாம் எழுதி முடிச்சுட்டு எங்க அப்பாவுக்காக
காலேஜ் வாசல்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன், நல்ல வெயில்,
எனக்கு பக்கத்துல இருந்த கருப்புசாறு கடைல செம்ம கூட்டம் ,
தாத்தா ரொம்ப மும்முரமா வேல செஞ்சிட்டு இருந்தாரு,
வந்தவங்க எல்லாருக்கும் கரும்புச்சாறு குடுத்துட்டும், அடுத்து
வெயிட் பண்றவங்களுக்குக்காக கரும்பா அறைச்சுட்டும் தாத்தா
வழகத்த விட ரொம்ப பிஸியா இருந்தாரு,
தாத்தாக்கு இன்னைக்கு நல்ல collectionனு யோசிச்சுட்டு
இருக்கும் போதே, தாத்தா மூஞ்சுல ஒரு கடுகடுப்பு தெரிஞ்சது,
வழக்கமா என்ன பார்த்து சிரிக்குற அந்த சிரிப்பும் இன்னைக்கு
இல்ல,
எனக்கு ஒன்னும் புரியல நல்ல கூட்டமா இருக்கு பின்ன எதுக்கு
மனுஷன் டென்ஷன இருக்காருன்னு ஒரே கொழப்பம்.
கூட்டம் மெதுவா குறைய ஆரம்பிச்சது,ரொம்ப தயக்கத்தோட
தாத்தா பக்கத்துல போய்,
“என்ன தாத்தா, வியாபாரம் தான் கல’கேட்டுதுல பின்ன எதுக்கு
மூஞ்ச தூக்கிட்டு வேட்சுருக்கியாம்”னு கேட்டேன்
பதிலுக்கு எதுமே சொல்லாம, கரும்பு சக்கைய அள்ளி குப்பைல
போட்டுட்டு இருந்தாரு.
“ச்ச தேவ இல்லாம கேட்டுடோமோ, வழக்கமா நல்ல பேசுவாருன்னு
தானா கேட்டோம்”னு யோசிச்சுட்டு இருக்கும் போதே
“கூட்டம் நல்லாத்தான்மா வருது,ஆனா வரவைங்க பாதி பேரு
“ஐஸ்” போடா வேண்டாம்னு சொல்றாங்க, இந்த வெயிலுக்கு
“ஐஸ்” போட்டு குடிச்சா தானா நல்லா இருக்கும்”னு அவரு
சொன்னதும்
“நீ எதுக்கு தாத்தா feel பண்ற அவங்களுக்கு எப்படி புடிக்குதோ
அப்படி குடிக்குறாங்க”,
“அது இல்லாமா, ஐஸ் போட்டு குடிச்சாதான் எனக்கு கூட ஒரு ரூபா
லாபம் கிடைக்கும், வெயில் காலத்துல நாலு காசு பாத்தாதான்
உண்டு,நானும் முடிஞ்ச வரைக்கும் நல்ல ஐஸ் கட்டியா தான் வாங்கி
போடுறேன்…
இன்னைக்கு ஒரு 20 கிளாஸ்சு ஐஸ் போடாம போயிருக்கு,
20 ரூபா லாபம் போச்சு கண்ணு, இந்த வாரம் இப்படியே தான்
போகுது”னு அவரு பேச பேச எனக்கு ஒன்னுமே புரியல,
“ஒரு நாளைக்கு சராசரியா 200ரூபா செலவு செய்யுற மக்கள்
இருக்குற இதே ஊருல, வெறும் 20ரூபா கூடுதல் லாபத்துக்காக ஏங்குற
மக்களும் இருக்குறாங்க, காசோட மதிப்பு இருக்குற இடத்துக்கேற்ப
மாறுது”னு யோசிச்சுட்டு இருக்கும் போதே
அப்பா என் பக்கத்துல வந்து “போலாமா”னு கேட்டாரு
“அப்பா நாம கரும்புச்சாறு குடிப்போமா”னு கேட்டேன், அப்பாவும்
சரினு தலை அசைக்க
“தாத்தா, ரெண்டு கரும்புச்சாறு, நிறைய ஐஸ் போட்டு தாங்க”னு
சொன்னதும்.
” பொக்க வாய் எல்லாம் பல்லாக” சிரித்து கொண்டே கரும்பை
அரைத்தார்.
-ஷேக் அப்துல்லா
மறுமொழியொன்றை இடுங்கள்