வள்ளலாரின் தனிச்சிறப்பு

வள்ளலாரின் தனிச்சிறப்பு – chinnuadhithya

வள்ளலார் மற்ற ஞானிகளின் கொள்கை வரிசையில் மிகவும் வேறுபட்டவர்..

பளிச்சிடும் வெள்ளாடை மட்டுமே உடுத்துபவர்..

காவி ஆடை உடுத்த மாட்டார்.

உடம்பில் எந்த மணி மாலைகளையும் அணிய மாட்டார்.

ஆற்காடு செருப்பு அணிந்து கொள்வார்.

கைகளை வீசி நடக்காமல் கைகளைக் கட்டியே நடப்பார்..

கைகளில் திருஓடு வைத்துக் கொள்ள மாட்டார்..

சாப்பாடு வேண்டும் என்று எவரிடமும் கேட்கமாட்டார்.

கைகளில் மணிவைத்து உருட்ட மாட்டார்.

சிம்மாதனத்தில் அமரமாட்டார்.

ஆடம்பர வீட்டில் தங்க மாட்டார்.

தனக்கென ஆசிரம்ம் அமைத்து கொள்ளமாட்டார்..

அதிகமாக உணவு உட்கொள்ள மாட்டார்.

உயர்ந்த திண்ணையில் உட்கார மாட்டார்..

கை நீட்டி பேசமாட்டார்.

எவருக்கும் ஆசிர்வாதம் செய்ய மாட்டார்..

எவரையும் காலில் விழந்து வணங்க ஒப்புக் கொள்ளமாட்டார்..

தீட்சை என்பன போன்ற விளையாட்டு காரியங்களை செய்ய மாட்டார்..

சத்தம் போட்டு பேசமாட்டார்..

சண்டை தகராறு வாதங்கள் செய்ய மாட்டார்..

ஆச்சார சங்கறப விகற்பங்களை செய்ய மாட்டார்.

உயிர்கொலை செய்வதற்கு ஆதரவு தரவே மாட்டார்..

புலால் உண்பதை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்.

மூட நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்.

பணத்தை கையிலே தொடவே மாட்டார்.

தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளமாட்டார்.

உண்மையை மட்டுமே பேசுவார்..எழுதுவார்.

எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்தவர். வாழ வேண்டும் என்று சொன்னவர்.

வாடியப்பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர்….

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்று சொன்னவர்.

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றவர்.

ஜீவ காருண்யத்தால் மட்டுமே மோட்ச வீட்டின் திறவு கோல் கிடைக்கும் என்றவர்..

வேதம் ஆகம்ம் புராணம் .இதிகாசங்கள்.சாத்திரங்கள் அனைத்தும் பொய் என்றும் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் ஆணித்தரமாக சொன்னவர்.

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்க்க் கூடாது என்றவர்.

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றவர்..

தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக் கூடாது என்பதை தெளிவாக சொன்னவர்.

கடவுளைத்தேடி காடு.மலை.குகை.

குன்று களுக்கு சென்று தவம் செய்ய தேவை இல்லை என்றவர்.

கடவுள் ஒருவரே ! அவர்தான் அருட்பெருஞ்ஜோதி என்பதை கண்டு பிடித்தவர் .

அகத்தில் உள்ள உள் ஒளியான ஆன்மாவே ஒளியான கடவுள் என்றவர்.

தன்னை இயக்கும் ஆன்மாவை ஒவ்வொருவரும் காண வேண்டும் என்றவர்.

தன்னை அறிந்தால் தான் தலைவனை அறியமுடியும் என்றவர்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே அருளைப் பெற முடியும் என்றவர்.

மூட நம்பிக்கையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்..

எதிலும் பொது நோக்கம் வேண்டும் என்றவர்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டை உலகில் உள்ளோர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.கடைபிடிக்க வேண்டும் என்றவர்.

மூச்சி பயிற்சி. வாசியோகம்.தியானம்.தவம் யோகம்.குண்டலனி. போன்ற இயற்கைக்கு மாறாக எதையும் செய்ய கூடாது என்றவர்.

தவத்திலே மூழ்க கூடாது என்றவர்.

உயிர்களுக்கு உபகாரம் செய்வதாலே எல்லா நன்மையும் கிடைக்கும் என்றவர்.

ஆலய வழிபாடு.உருவ வழிபாடு செய்ய வேண்டாம் என்றவர்.

பொய்யான சாமிகளுக்கு அபிஷேகம் ஆராதனை.ஆட்டம் .பாட்டம்.கொண்டாட்டம் போன்ற காரியங்களை செய்ய வேண்டாம் என்றவர் .

எவரையும் தொடமாட்டார்.தொட்டு பேசவும் மாட்டார்.

உண்மைக் கடவுளை தனக்குள்ளே கண்டவர்

உணவு உட்கொள்ளாமலே வாழும் வழியைத் தெரிந்து கொண்டு வாழ்ந்தவர்..

நரை.திரை.பிணி.மூப்பு.பயம்.மரணம் இல்லாமல் வாழ்ந்தவர்..

கடவுளை ஒளி வடிவிலே கண்டவர்.

ஏழைகளின் பசிப்பிணியை போக்குவற்காக.சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை தோற்றுவித்தவர்.

ஒளி வழிப்பாட்டிற்காக.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை தோற்றுவித்தவர்..

தன் கொள்கைகளுக்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்தவர்..

சங்கத்திற்காக தனிக் கொடியான மஞ்சள் வெள்ளயை அறிமுகப் படுத்தியவர்.

மனிதர்களைப் பிரித்து வைத்த சாதி.சமய.மதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்.

உலக மக்கள் ஒழுக்க நெறியோடு வாழ்ந்து இறைவன் திருஅருளைப் பெற வேண்டும் என்றவர்..

ஒழுக்கம் என்றால் என்ன என்பதை உலக மக்களுக்கு சொல்லிக்காட்டி.வாழ்ந்தும் காட்டியவர்.

உலக மக்களுக்காக உண்மை நூலான *திருஅருட்பா* வைத் தந்தவர்.

மரணம் என்பது இயற்கையானது அல்ல .

செயற்கையானது என்பதை முதன் முதலில் கண்டு பிடித்தவர்.

மரணம் அடையாமல் ஒளி தேகத்தோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர்.

இறைவனிடம் ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்றவர்..

மனித குலத்தை மாற்ற. வேண்டும் என்பதற்காக இறைவனால் வருவிக்க உற்றவர்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே தாயாகவும் தந்தையாகவும் ஏற்றுக் கொண்டவர்.

தன் பெயருக்கு முன்னால் சிதம்பரம் இராமலிங்கம் என்றே கைஎழுத்து போடுவார்.

இப்படி எல்லா வகைகளிலும் வேறு பட்டவர் வள்ளல் பெருமான் அவர்கள்

அவர் பெருமையை சொல்லி மாளாது.

பகிர்வு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: