அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்

அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும் Tamil_News_large_2813942

அழிந்து வரும் விலங்கு தேவாங்கு! 
அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற 
வேண்டும் என வலியுறுத்தும், திண்டுக்கல் மாவட்டத்தில் 
செயல்படும், ‘சீட்ஸ்’ அறக்கட்டளையின் நிறுவனர் முத்துசாமி: 

பார்ப்பதற்கு குரங்கு போல இருந்தாலும், சற்று அவலட்சணமாக 
இருக்கும் விலங்கினம் தான் தேவாங்கு. அதனால் தான் 
கிண்டலாக சிலரை, தேவாங்கு என்கின்றனர். 

இந்த வகை விலங்கு கள், கடல் மட்டத்திலிருந்து 100 – 800 மீட்டர் 
உயரம் வரையுள்ள மலைக்கரடுகளில், மரங்களில் வசிக்கின்றன. 
பல காரணங்களால், இவை அழிவின் விளிம்பில் உள்ளன. 

திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார், கரூர் மாவட்டத்தில், 30க்கும் 
மேற்பட்ட மலையடிவார கிராமங்களில் இந்த விலங்குகள் 
வசிக்கின்றன. இவை நான்கு வகைகளாக உள்ளன. மலேஷியா, 
சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த நான்கு வகை
 தேவாங்குகளும் வாழ்கின்றன.

 சாம்பல் நிற தேவாங்குகள், நம் நாட்டில் வசிக்கின்றன. 
சாம்பல் நிற தேவாங்கு இனத்தின் புகலிடமாக விளங்குவது, 
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைக்குன்றுகள் தான். 
இவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 
இதற்கு காரணம், மலைக்குன்று களை ஒட்டி வரும் மக்களின், 
தேவாங்கு குறித்த தவறான புரிதல் தான். 

காடுகளில் கிடைக்கும் இயற்கை பொருட்களை எடுக்க 
செல்பவர்களால், இந்த விலங்குகளுக்கு துன்புறுத்தல் 
ஏற்படுகிறது. இதனால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து 
வருகிறது. மேலும், ஜோசியம் பார்க்க இந்த விலங்குகளை 
கடத்துகின்றனர். 

முடக்குவாதத்தை இதன் எண்ணெய் போக்கும்; 
ஆண்மை குறைபாட்டை நீக்கும் என்பன போன்ற தவறான 
எண்ணங்களால், இந்த விலங்குகள் கொல்லப்படுகின்றன.

குழந்தை உண்டாகி இருப்பவர்கள், இந்த விலங்கை பார்த்தால், 
அதுபோன்ற தோற்றத்துடன் குழந்தை பெறுவர் என்ற மூட 
நம்பிக்கையும் உள்ளதால், இந்த விலங்கை அடித்து 
கொல்கின்றனர். சிறுவர்களும், விளையாட்டுக்காக அணிலை
 அடித்து கொல்வது போல, தேவாங்கை அடித்து கொல்கின்றனர். 

இதை தடுக்க, காந்தி கிராமம் பல்கலைக்கழக தாவரவியல் 
துறை, ‘ஹேபிடேட்’ அறக்கட்டளை, வனத்துறை இணைந்து, 
தேவாங்கு காணப்படும் கிராமங்களில் விழிப்புணர்வை 
ஏற்படுத்தி வருகிறோம். 

காட்டுக்குள் சென்று பொருட்களை எடுக்கும் மக்களுக்கு, 
நாட்டிலேயே வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறோம். காட்டுக்குள் 
செல்லும் மக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, 
அவர்களுக்கு மதிப்பு கூட்டுதல் தொடர்பான பயிற்சி அளிக்கிறோம். 

மூலிகை பொருட்களை பறிக்க காட்டுக்குள் சென்று வரும் 
பெண்களுக்கு கிடைக்கும் வருமானத்தை, நாட்டிற்குள்ளேயே 
ஏற்படுத்த, தேனீ பெட்டிகளை வழங்குகிறோம். இந்த பகுதிகளை 
தேவாங்கு சரணாலயமாக மாற்றுவதன் மூலம், இந்த விலங்குகளை 
அழிவிலிருந்து காக்கலாம்!

சொல்கிறார்கள் -தினமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: