நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்

அமெரிக்காவின் 16ஆவது குடியரசுத் தலைவரான ஆபிரகாம் லிங்கன் ஒரு நாள்  அமெரிக்கப் பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். போகும் வழியில் ஒரு பன்றிக்குட்டி சேறு நிறைந்த பள்ளத்தில் மாட்டித் தவித்துக் கொண்டு இருந்தது. அதைக் கண்ட உடனே வண்டியை நிறுத்துமாறு சொன்ன ஆபிரகாம் லிங்கன்,
வண்டியை விட்டு இறங்கி அந்தப் பன்றிக் குட்டியை நோக்கிச் சென்றார். அருகில் சென்ற லிங்கன் தன் கைகளால் அந்தப் பன்றியைச் சேற்றிலிருந்து வெளியே தூக்கிக் கரையேற்றினார்.

பன்றியைத் தூக்கிவிட்ட ஆபிரகாம் லிங்கனின் ஆடையில் சேறும் சகதியும் அப்பியிருந்தன. ஒரு பன்றியைக் காப்பாற்றுவதற்காக ஆபிரகாம் லிங்கன் பாடுபட்டதை அங்கிருந்த அனைவரும் பாராட்டினர்.

அங்கிருந்தவர்களைப் பார்த்து, நண்பர்களே உண்மையில் பன்றியின் துன்பத்தைப் போக்குவதற்காக மட்டும் நான் உதவவில்லை என்றார் ஆபிரகாம் லிங்கன். அனைவரும் புரியாமல் விழித்தனர்.

அதற்கு அவர், பன்றிக்கு உதவவில்லை என்றால் என் உள்மனம் உறுத்திக் கொண்டே இருந்திருக்கும். ஓர் உயிரைக் காப்பாற்றியதன் மூலம் நிம்மதி பெற்றது. அதுதான் உண்மை என்றார்.

நாட்டு மக்களைக் காப்பதில் மட்டுமல்லாமல் ஓர் அய்ந்தறிவு உயிரினத்தைக் காப்பதிலும் அக்கறை கொண்டு திகழ்ந்ததால்தான் வரலாற்றில் வாழ்கிறார் ஆபிரகாம் லிங்கன்.

(படித்தேன்! ரசித்தேன்!)

  • மு.அன்புக்கரசன், பெரியகுளம்
    நன்றி- பெரியா பிஞ்சு -2014

1 பின்னூட்டம்

  1. Jim said,

    மே 17, 2021 இல் 4:08 முப

    Lincoln died in 1865. Car was invented in 1886. How can Lincoln travel by car?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: