கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

சென்னை:
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில்
இரவு நேர ஊரடங்கு வரும் செவ்வாய்கிழமை(ஏப்ரல்-20)
முதல் அமல்படுத்தப்படுகிறது என தமிழக அரசு
அறிவித்துள்ளது.

இதன்படி, புதிய கட்டுபாடுகளின் படி,
இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு
அமலில் இருக்கும்.

ஞாயிறு முழு ஊரடங்கு

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்று
கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
இரவு ஊரடங்கின்போது ஆட்டே, பஸ், போன்ற தனியார்
வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.

12 ஆம் வகுப்பு பொது தேர்வு ஒத்திவைப்பு

 • மே மாதம் நடைபெற இருந்த 12 ஆம் வகுப்பு தேர்வு
  ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்முறை
  தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடத்தப்படும்.
 • ஓட்டல்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
  பார்சல் வாங்க மட்டுமே அனுமதி.

*ஸ்விகி சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட
நேரங்களில் உணவு விநியோகம் செய்யலாம்.

*தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி.
அதற்கு மேல் அனுமதித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாஸ்க் அணியாமல் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டால்
தியேட்டர் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்படும்.

 • மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் இடையே இரவில் அரசு,
  தனியார் போக்குவரத்து அனுமதி கிடையாது.

*ஐ.டி. பணியாளர்கள் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்து
பணியாற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

*அனைத்து சுற்றுலாதலங்களும் மூடப்படும்.

 • இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்தாலும் ஊடகங்கள்
  மற்றும் பத்திரிகை துறையினர் இரவு நேரங்களில்
  தடங்கல் இன்றி செயல்படலாம்.

*மாநிலத்தில் பெட்ரோல் நிலையங்கள் வழக்கம் போல்
இயங்கலாம்

*கல்லூரி மற்றும் பேராசிரியர்கள் வீட்டில் இருந்தே
ஆன்லைன் வகுப்பு எடுக்க அனுமதி

*இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய
பொருள்கள் உற்பத்தி, விநியோகம் செய்ய தடையில்லை

முழு நேர ஊரடங்கின் போது உணவகங்கள் காலை
6 மணி முதல் 10மணிவரையிலும் மதியம் 12 மணி முதல்
3 மணி வரையிலலும் ஈடுபடலாம். மாலை 6 மணி முதல்
9 மணி வரையில் பார்சல் சேவையில் ஈடுபடலாம்.

*மின் வணிக சேவை நிறுவனங்களுக்கு
ஞாயிற்றுகிழமைகளில் அனுமதிகிடையாது.

*விளைபொருட்கள், எரிபொருள், மருந்துகள் மற்றும் அதன்
சார்ந்த வாகனங்கள் முழு நேரமும் இயங்க அனுமதிக்கப்
படுகிறது.

*ஷாப்பிங்மால்கள் ஜவுளிக்கடைகள் 50 சதவீத
பணியாளர்களுடன் இரவு 9 மணி வரையில் இயங்க
அனுமதிக்கப்படுகிறது.

*ஐ.டி.,உள்ளிட்ட நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களை
வீட்டில்இருந்தே பணியமர்த்த நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

கும்பாபிஷேக விழாக்களுக்கு தடை

மதம் சார்ந்த கூட்டங்கள், திருவிழாக்கள் நடத்த தடை
விதிக்கப்படுகிறது.

ஏற்கனவே அனுமதி வாங்கியுள்ள கோவில் கும்பாபிஷேக
விழாக்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்

ஏற்கனவே கும்பாபிஷேகம் நடத்த அனுமதி பெற்றுள்ளவர்கள்
உரிய நடைமுறைகளை பின்பற்றுவதுடன், கோவில்
நிர்வாகத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட 50 பேர் மட்டுமே
பங்கேற்க வேண்டும்

புதிதாக கும்பாபிஷேக விழாக்களுக்கு அனுமதியில்லை

புதிதாக கோவில் கும்பாபிஷேக விழாக்கள் நடத்துவதை
கோவில் நிர்வாகத்தினர் ஒத்திவைக்க வேண்டும்.

இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது

தினமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: