இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இட ஒதுக்கீடு?

facebook.com/Angry Bird

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இட ஒதுக்கீடு 
வேண்டும்? உச்ச நீதிமன்றம் எழுப்பிய இந்தக் கேள்விக்கான 
பதில்.

இருவழிச் சாலைகளின் நடுவில் சிறிய கான்கிரீட் தடுப்புச் 
சுவர் பாத்திருப்போம். அது எதற்காகக் கொண்டு 
வரப்பட்டது? தனக்கு ஒதுக்கப்பட்ட பாதையில் போகாமல், 
முன்னால் இருப்பவரை முந்துவதற்காக, எதிர் திசையில் 
பயணிப்பவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதையில் சென்று 
போக்குவரத்து நெரிசலை உருவாக்கும் ஒரு சில முட்டாள்கள் 
இருப்பதால் சாலைக்கு நடுவே அந்தத் தடுப்புச் சுவர் 
அமைத்தோம்.

பல ஆண்டுகளாக இந்தத் தடுப்புச் சுவர்கள் இருக்கின்றனவே… 
மக்கள் திருந்தியிருப்பார்கள் என்று அவற்றை அகற்றினால் 
என்ன ஆகும்?

இட ஒதுக்கீடும் அதுபோலத்தான். பிறருக்கு நியாயமாகக் 
கிடைக்க வேண்டிய உரிமையை அவர்கள் பிறந்த சாதியைக் 
காரணம் காட்டிப் பறிப்பவர்கள் இருந்ததால், அனைவரின்
 உரிமையையும் பாதுகாப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது 
தான் இட ஒதுக்கீடு.

எப்படி சாலையில் இருக்கும் தடுப்புச் சுவரை அகற்றினால் 
மீண்டும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுமோ, அதுபோல 
இட ஒதுக்கீட்டை அகற்றினால் மீண்டும் சாதியைக் காரணம் 
காட்டிப் பிறரது உரிமையைப் பறிக்கும் நிலை தொடங்கும்.

சாதியை சட்டத்தால் ஒழிக்க முடியாது. இட ஒதுக்கீடு 
அதற்காகக் கொண்டு வரப்பட்டதும் அல்ல. மக்களால் 
மட்டுமே சாதியை ஒழிக்க முடியும்.

முதலில் மக்கள் தங்கள் மனதில் இருக்கும் சாதிப் 
பெருமையைத் தூக்கி ஏறியட்டும். தங்கள் வாழ்விலிருந்து 
சாதியை ஒழிக்கட்டும். தங்கள் திருமணங் களிலிருந்து 
சாதியை ஒழிக்கட்டும். யார் எந்தச் சாதி என்று தெரியாத 
ஒரு புதிய தலைமுறை உருவாகட்டும். 
அப்பொழுது ஒழிக்கலாம் இட ஒதுக்கீட்டை!

—————————-நன்றி-விகடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: