உலகின் மகிழ்ச்சியான நாடு : 139வது இடத்தில் இந்தியா : டுவிட்டரில் டிரெண்டிங்

உலகின் மகிழ்ச்சியான நாடு : 139வது இடத்தில் இந்தியா : டுவிட்டரில் டிரெண்டிங் Tamil_News_large_2734054

புதுடில்லி :
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா
139வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பின்லாந்து உள்ளது.
இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

இன்று(மார்ச் 20) சர்வதேச மகிழ்ச்சி நாள். ஒவ்வொரு ஆண்டும்
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு
வருகிறது. இதன்படி 2021ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்
பட்டுள்ளது. ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வு குழு இதை
வெளியிட்டுள்ளது.

சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட
பல விஷயங்களை வைத்து இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கொரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்பு, அரசு
அவர்களுக்கு எப்படி உதவிகரமாக இருந்தது ஆகியவற்றையும்
உள்ளடக்கி இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில்
பின்லாந்து நாடு முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து சில
ஆண்டுகளாக இந்த நாடு முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

இதற்கடுத்து டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நெதர்லாந்து,
நார்வே, சுவீடன், லக்சம்பர்க், நியூசிலாந்து, ஆஸ்திரியா நாடுகள்
உள்ளன. கணக்கெடுக்கப்பட்ட 156 நாடுகளில் இந்தியா 144 வது
இடத்திலும், மதிப்பீடு செய்யப்பட்ட 149 நாடுகளில் இந்தியா 139 வது
இடத்தில் உள்ளது.

நம்மை விட பாகிஸ்தான்(105), வங்கதேசம்(101) சீனா(84) போன்ற
நாடுகள் முன்னோக்கி உள்ளன. மிகவும் மகிழ்ச்சியற்ற நாடாக
ஆப்கானிஸ்தான் (149) உள்ளது. ஜிம்பாப்வே(148), ருவாண்டா(147),
போட்ஸ்வானா(146) இடங்களில் உள்ளன.

இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
#InternationalDayOfHappiness, #WorldHappinessDay,
#Finland உள்ளிட்ட ஹேஷ்டாக்குகளில் பலரும் தங்களது
கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அப்படி பதிவிட்ட சிலரின்
கருத்துக்கள்.

உலகின் மகிழ்ச்சியான நாடு : 139வது இடத்தில் இந்தியா : டுவிட்டரில் டிரெண்டிங் Gallerye_142401427_2734054

* இந்தியா இந்த நிலையை எட்ட முழுக்க முழுக்க பிரதமர்
மோடி தான் காரணம். ஏனென்றால் அவர் தான் நாள் ஒன்றுக்கு
18 மணிநேரம் உழைக்கிறார்.

* ஒவ்வொருவரின் வீட்டிலும் சுயநலமாக இருக்கும் அரசியல்
விளையாட்டு மற்றும் எதிர்மனையான எண்ணங்கள் பரப்படுவதே
காரணம்.

* முதலில் எதன் அடிப்படையில் இப்படி ஒரு சர்வே நடத்தப்பட்டது.
நம் நாட்டு மக்கள் தொகை எவ்வளவு, மற்ற நாட்டின் மக்கள்
தொகை எவ்வளவு.

இதுபோன்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
பொதுவாக பலரும் தங்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள என்ன
செய்ய வேண்டும் என அறிவுரையாக வழங்கினர். நேர்மறையாக
சிந்தியுங்கள், எதற்கும் கவலைப்படாதீர்கள், போதும் என மனதிற்கு
உட்படுத்துங்கள், உடல் ஆரோக்கியம், இறையருள், யோகா,
உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

இதை பின்பற்றினாலே மனம் ஒரு அமைதியான நிலையில் தெளிந்த
நீரோடை போன்று இருக்கும், அதுவே உங்களின் வாழ்க்கை
ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சிகரமாக கொண்டு செல்லும் என சிலர்
கருத்து பதிவிட்டுள்ளனர்.

-தினமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: