சிவராத்திரி – விரதமுறை!


சிவராத்திரி - விரதமுறை! E_1615036921

சிவராத்திரி விரதம் இருக்கும் பெண்கள், காலையில் பால்,
மதியம் ஒரு டம்ளர் அரிசி கஞ்சி, இரவு பாலும், பழமும்
சாப்பிட்டு, நான்கு யாமங்கள் எனப்படுகிற நான்கு
காலங்களும் கோவிலுக்கு சென்று, சிவனின் பாடல்கள்
மற்றும் துதிகளை படிக்கலாம்.

நான்கு காலங்கள் போக முடியாதவர்கள்,
இரவு, 11:30 மணிக்கு மேல், அதிகாலை, 1:00 மணி வரை
நடைபெறும் லிங்கோற்பவ காலத்திற்கு சென்று வரலாம்
அல்லது முதற்கால சிவபூஜைக்கு சென்று வந்து, வீட்டில்
சிவபுராணம், திருவாசகம் படிக்கலாம்.

மகா சிவராத்திரி முடிந்து, பொழுது விடிந்ததும்,
மகேஸ்வர பூஜை எனும் வழிபாட்டை, கட்டாயம் செய்ய
வேண்டும். இதற்கு, ‘பாரனை’ என்று பெயர்.

சிவசக்தி படத்துக்கு, வெண் பொங்கல் அல்லது பால் பாயசம்
படைத்து, ஆரத்தி காட்டிய பின் சாப்பிட்டு, விரதத்தை பூர்த்தி
செய்ய வேண்டும்

——————
-வாரமலர்

பின்னூட்டமொன்றை இடுக