தாக்கத்தை ஏற்படுத்திய மலையாளப் படம்… தமிழ் ரீமேக்கில் ஒப்பந்தமான ஐஸ்வர்யா ராஜேஷ்..!

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை
ஏற்படுத்திய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம்
தமிழில் ரீமேக் ஆக உள்ள நிலையில், இப்படத்தில்
ஐவர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட்
நடித்திருந்த படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. புதிதாகத்
திருமணமான பெண் ஒருவர், பழமைவாதக் கொள்கைகளும்
ஆணாதிக்கமும் நிறைந்த கணவரின் குடும்பத்தில் படும்
கஷ்டங்கள், தொடர்ந்து அவர் எடுக்கும் முடிவு என்ன என்பதைச்
சொல்லியிருந்த படம் இது.

மலையாளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய
தாக்கத்தை ஏற்படுத்திய இப்படத்தை தற்போது தமிழ் மற்றும்
தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர்.

இதற்கான ரீமேக் உரிமையை இயக்குனர் ஆர்.கண்ணன்
கைப்பற்றி உள்ளார். இப்படத்தை அவரே இயக்கவும் உள்ளார்.

இந்நிலையில், பெயரிடப்படாத இந்த படத்தில் ஹீரோயினாக
நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்ததையடுத்து,
இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த படத்தின் பூஜை இன்று(மார்ச்.03) நடைபெற்றது.
இதில் இயக்குனர் ஆர்.கண்ணன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த படத்திற்கு
பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.

நன்றி-குமுதம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

<span>%d</span> bloggers like this: