
உடல் பருமன் இன்று பெரும்பாலான மக்களை வதைக்கும்
ஒரு பெரிய நோய்யாக இருக்கிறது.மாறி வரும் உணவு
பழக்கங்கள்,வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம் என
பல காரணங்கள் இருக்கிறது.
உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இல்லாமலும்,உடம்பு மீது
அக்கறை இல்லாமலும் இருந்துவிட்டு உடல் எடை அதிகரித்த
பின் ஜிம்மிற்கும்,மருத்துவமனைக்கும் செல்பவர்கள் அதிகம்.
உடல் எடை அதிகரிக்க சக்கரை முக்கிய காரணம் அதனால்
சக்கரையை தவிர்க்க வேண்டும்.டி,காபி,ஸ்வீட்ஸ்,சாக்லேட்,
எண்ணையில் பொறித்த உணவுகள் தவிர்ப்பது நல்லது.
உடல் எடை குறைப்பதற்கு எளிமையான இயற்கை மருத்துவம்
பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
மருதம்பட்டை பொடி 50கி
லவங்கப்பட்டை பொடி 50கி
அருகம்புல் பொடி 50கி
வாழைத்தண்டு பொடி 50கி
சீரக தூள் 50கி
இவை அணைத்தும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்
வாங்கி ஒன்றாக கலந்து வைத்து கொண்டு காலை மாலை
உணவுக்கு முன் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் பொடியை
கலந்து குடிக்க வேண்டும்.
15 நாளில் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் வெளியேறும்.
இதை எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
தொப்பை குறையும்,ஜீரண உறுப்புக்கள் வலுப்பெறும்
,இரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும்
ப.பி
படம்-இணையம்
மறுமொழியொன்றை இடுங்கள்