@prakashT_ –
பிறர் நேசிக்கிறார்கள் என நினைத்து நினைத்தே
தன்னைத்தானே நேசித்துக் கொண்டிருக்கின்றனர்
பலர்…
@oorkkavalaan –
‘முள்ளை’ மிதிக்கும் அதே செருப்புதான் ‘மலரையும்’
மிதிக்கின்றது…
@சாத்வீக சைத்தான்
- இலக்கை எட்டும்வரை நமது வெற்றி உறுதி செய்யப்
படவில்லை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
@Vinayaga Murugan – ஜல்லிக்கட்டில் வென்று
முதலிடத்துக்கு வந்தவருக்கு கார் பரிசு. இரண்டாவது
இடத்துக்கு வந்தவர் எனக்கு பரிசு எதுவும் தரவில்லை
என்று பேட்டி தருகிறார்.
இன்னும் பலர் தங்களுக்கு பரிசு கிடைக்கவில்லை என்று
புலம்புகிறார்கள். மாடு பிடிப்பது விளையாட்டு என்றால்
அவங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு தரலாம் இல்லையா?
பாடி பில்டிங்கைக் கூட விளையாட்டாக அங்கீகரித்து அரசு
வேலை தருகிறார்கள். ஒருவேளை மாடு பிடிப்பவர்களுக்கு
அரசு வேலை வாய்ப்பு தர முடியவில்லை என்றால்
அவர்களது பயிர்க்கடனை தள்ளுபடி செய்யலாம்.
@Ramanujam Govindan –
வாழ்க்கையே வெறுத்து விட்டது என்று யாருக்கேனும்
செய்தி அனுப்பிவிட்டு கூகுளைத் திறந்தால்
‘அரளி விதை வேண்டுமா? ரெடிமேடாய் அரைத்தே வைத்து
விற்கிறோம்!’ எனச் சொல்கிறது! – #செயற்கை_அறிவு
@Prabhakaran Namashivayam Rajendran –
பத்து வருடங்களுக்கு முன், அடையாறு புற்றுநோய்
மருத்துவமனையின் சிகிச்சையால் என் தந்தை புற்று
நோயிலிருந்து மீண்டு வந்தார்.
இன்று தந்தை நலமுடன் இருக்கிறார்.தனிப்பட்ட முறையில்
நான் மருத்துவர் சாந்தாவிற்கு நன்றிக்கடன்
பட்டிருக்கிறேன். அவரது மறைவிற்கு இரங்கல்கள்!
மறுமொழியொன்றை இடுங்கள்