தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது?

தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு
எப்படிச் சுமக்கிறது? யானையால் அப்படி முடியுமா?

இழுவைப் பணிக்காக வளர்க்கப்படும் குதிரைகளின்
எடை ஒரு டன் என்றாலும், அவற்றால் இரண்டு டன்
சுமையை இழுத்துச் செல்ல முடியும்.

யானையும் மற்ற விலங்குகளைவிட அதிக அளவு
சுமையை இழுத்துச் செல்லும். பொதுவாக, விலங்குகளின்
எடையில் 10 சதவீதம் மட்டுமே எலும்பு;
யானையில் இது 20 சதவீதம். எனவே, யானை கூடுதல்
பளு தாங்கும் தன்மை கொண்டுள்ளது.

அதன் எடையை போல சுமார் ஆயிரம் மடங்கு எடையை
எறும்புகள் சுமந்து செல்வதை ஓர் ஆய்வில் கண்டு
பிடித்தனர். இதற்கான காரணம் கொள்ளளவுக்கும்
மேற்பரப்புக்கும் இடையே உள்ள கணித உறவுதான்.

எடுத்துக்காட்டாக, ஒரு செ.மீ. நீளம் x அகலம் x உயரம்
உடைய ஒரு கனசதுரத்தைக் கணக்கில் கொள்ளுங்கள்.
அதன் மொத்தக் கொள்ளளவு 1 கனசதுர செ.மீ. அதற்கு
ஆறு பக்கம் இருப்பதால், அதன் மொத்த மேற்பரப்பளவு
6 சதுர செ.மீ. ஆகும்.

இதனால் கொள்ளளவும் மேற்பரப்பு விகிதமும்
1:6 என அமைகிறது.
இப்போது 10 செ.மீ. அகலம், நீளம், உயரம் உடைய
கனசதுரத்தை எடுத்துக்கொள்வோம். அதன் மொத்தக்
கொள்ளளவு 1000 கனசதுர செ.மீ. அதன் மேற்பரப்பு
600 சதுர செ.மீ. அதாவது கொள்ளளவு மேற்பரப்பு விகிதம்
10:6 என வெகுவாக மாறிவிட்டது.

இங்கே கொள்ளளவு என்பது, எடை எனவும் மேற்பரப்பு
என்பதை திசுவின் ஆற்றல் எனவும் கொள்ளலாம்.
ஆகவே உருவில் சிறிய விலங்குகளின் திசு ஆற்றல்
கூடுதலாக இருக்கும்.

எறும்பு போன்ற சிறிய உயிரினங்களின் இயக்கத்தைக்
கூர்ந்து ஆராய்ந்து கற்பதன் மூலம், நவீன ரோபோ
தயாரிப்பு முதலியவற்றில் புதுமை காணமுடியும் எனக்

கருதி, ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வெங்கியைக் கேளுங்க (பட்டம்- தினமலர்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: