
நுாற்றாண்டுகள் கண்ட கண்ணாடி தொழில்நுட்பம்.
இருந்தாலும், அதில் இன்னமும் புதுமைகள் தென்பட்டபடியே
இருக்கின்றன. ஜெர்மனியின் கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்கள், ‘திரவக் கண்ணாடி’ என்ற புதிய பொருள்
நிலையை உருவாக்கி வெற்றி கண்டுள்ளனர்.
பொதுவாக வெப்பத்தால் உருகி, திரவ நிலையை அடையும்
பொருட்கள், குளிர்ச்சியடைகையில், படிப்படியாக மறுபடியும்
திட நிலைக்குத் திரும்புகின்றன. அப்படி திரும்புகையில்,
அந்தப் பொருளில் சுதந்திரமாக இயங்கிக்கொண்டிருந்த
மூலக்கூறுகள் ‘உறைந்து’ நின்றுவிட, திட வடிவம் உண்டாகிறது.
ஆனால், திரவக் கண்ணாடியில், மூலக்கூறுகள் முற்றாக
உறைந்துவிடாமல், அருகாமையிலுள்ள மூலக்கூறுகளுடன்
சற்றே இளக்கமாக இருக்கின்றன. இதனாலேயே அவை திரவ
நிலையில் இருப்பது போன்ற தோற்றம் உண்டாகிறது.
திரவக் கண்ணாடியின் நடைமுறை பயன்களை கான்ஸ்டான்ஸ்
விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்கியுள்ளனர்.
தினமலர்
மறுமொழியொன்றை இடுங்கள்