தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்

தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில் 622405

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஜனவரி 8-ம் தேதி
வெளியான படம் ‘மாறா’. திலீப் குமார் இயக்கத்தில்
வெளியாகியுள்ள இந்தப் படத்தில் மாதவன்,
ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவதா நாயர் உள்ளிட்ட பலர்
நடித்துள்ளனர்.

பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்
படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சார்லி’
படத்தின் தழுவல்தான் ‘மாறா’. ஆகையால், ‘சார்லி’
படத்தைப் பார்த்தவர்களுக்கு ‘மாறா’ படம் பிடிக்கவில்லை.

கலவையான விமர்சனங்களையே இப்படம் பெற்று வந்தது.
இணையத்தில் படத்தைப் பாராட்டி விமர்சனம் செய்த
அனைவருக்கும் நன்றி தெரிவித்து வந்தார் மாதவன்.

அதில் ரசிகர் ஒருவர், ” ‘சார்லி’ படத்தைப் பார்த்தவர்களுக்கு
இது நிஜமாகவே மிகவும் சுமாரான படம். முதல் 30 நிமிடங்கள்
கழித்து இந்தப் படத்தைப் பார்ப்பது மிகக் கடினமாக
இருந்தது. உண்மையில் மாதவன்தான் படத்தைக்
கெடுத்திருக்கிறார். மிகவும் சோகமான, மன அழுத்தம்
இருக்கும் கதாபாத்திரம்” என்று மாதவனின் ட்விட்டர்
கணக்கைக் குறிப்பிட்டுத் தெரிவித்தார்.

அவருக்கும் பதிலளிக்கும் விதமாக மாதவன்,
“ஐயோ, உங்களை ஏமாற்றியதற்கு மன்னித்துவிடுங்கள் சகோ.
அடுத்த முறை நன்றாக இருக்க முயல்கிறேன்” என்று
தெரிவித்துள்ளார். இந்தப் பதில் இணையத்தில் பெரும் வ
ரவேற்பைப் பெற்றுள்ளது.

பலரும் இதுதான் மாதவன், என்னவொரு பக்குவமான பதில்
என்று பாராட்டி வருகிறார்கள்.

இந்து தமிழ் திசை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: