புயல் என்பது நீர்ப்பசை நிரம்பிய வெப்பநிலையில்
உள்ள சுழலும் காற்று. கோடைக் காலத்தில் கடலின்
மேற்புறம் கூடுதலாக வெப்பமடையும்.
29O. செல்சியஸிற்கும் கூடுதலாக கடல் வெப்பம்
கூடும்போது, புயல் உருவாக வாய்ப்பு ஏற்படும்.
அப்போது அந்தப் பகுதியில் கடல்நீர் கூடுதலாக
ஆவியாகும்.
சூடான காற்றுக்கு அடர்த்தி குறைவு என்பதால்,
நீர்த்திவலைகளை ஏந்தி அது மேலே எழும்பும்.
கடல் மட்டத்தைவிட உயரே செல்லும்போது,
காற்றின் அடர்த்தி குறைவு. எனவே, அந்த
வெப்பக் காற்றுக் குமிழி விரிவடையும்.
விரிவடையும் வாயு சுழலும். எனவே,
அந்தக் குமிழியும் சுழன்றுகொண்டே மேலே
செல்லும்.
கடல் மட்டத்திலிருந்து உயரே செல்லச்செல்ல
வெப்பநிலை குறையும். எனவேதான், மலைப்
பகுதிகள் குளிர்ச்சியாக இருக்கின்றன.
சூடான காற்று குளிர்கிறது என்றால் அங்கே
காற்றழுத்தம் குறையும். எனவே, வேறு ப
குதியிலிருந்து காற்று வேகவேகமாகப் பாயும்.
சுழன்று வீசுவதால் புயல் கடலின் மேலே நகரும்.
கடல் மீது காற்று வீசும்போது ஏற்படும் உராய்வு
விசையை விட நிலத்தின் மீது உராய்வு விசை
கூடுதல். எனவேதான், நிலத்தில் வீரியம் குறைந்து
புயல் மறைகிறது.
மேலும், நிலத்தின் மீது கடலுக்குச் சமமாக
நீர்நிலைகள் இல்லை. எனவே நிலத்தின் மீது
புயல் கடந்து சென்றாலும், கடலில் தான் புயல்
உருவாகும்.
நன்றி- பட்டம்- தினமலர்
மறுமொழியொன்றை இடுங்கள்