ஒரு சிறப்பு வகைக் கறையான்களே ஈசல்கள்!
ஒரு புற்றில் உள்ள கறையான்களை இராணி, ஆண்,
வாகை (பாதுகாப்பு) மற்றும் பணிக் கறையான் என,
நான்கு விதமாகப் பிரிக்கலாம்.
மழைக்காலத்தில் இவை முட்டைகளை இடும்.
இதிலிருந்து வெளி வருபவையே புற்றீசல்கள்.
இவை பறந்து சற்றே தொலைவான இடத்தை அடைந்து,
அங்கே புதிய புற்றைத் தோற்றுவிக்கும்.
அதன் பயணத்தின் இடையே பாம்பு, பல்லி, கோழி
போன்ற விலங்குகளுக்கு உணவாகி விடுகின்றன.
தப்பிப் பிழைக்கும் சில ஈசல்கள் வெகுதொலைவு
கடந்து இறகுகளை உதிர்க்கும். பின்னர் தனது
இணையைக் கண்டுபிடித்து, நிலத்தில் தகுந்த
இடத்தைத் தேர்வுசெய்து புதிய புற்றை உருவாக்கும்.
அந்தத் துளையின் உள்ளே முட்டை இடும்.
வாகை மற்றும் பணிக் கறையான்கள் உருவாகும்.
தட்டான்களைப் பொறுத்தமட்டில், நீர்நிலைகளில்தான்
முட்டையிடும். போன மழைக்காலத்தில் இடப்பட்ட
முட்டைகளில் இருந்து வெளிவந்த லார்வா புழு வளர்ந்து
முதிர்ந்து தட்டானாக மாறும்.
மழைக்காலத்தில் இவை வெளியேவரும் என்பதால்,
‘தட்டான் தாழப்பறந்தால் மழை வரும்’ என்பார்கள்.
–
வெங்கியைக கேளுங்கள்- (பட்டம்- தினமலர்)
மறுமொழியொன்றை இடுங்கள்