உடலின் ஏதாவது முக்கிய உறுப்பு செயலிழந்து
போவதே இறப்பு எனப்படுகிறது.
எனினும் ஓர் உயிரி மடியும்போது, அதில் உள்ள எல்லா
செல்களும் உடனே மடிந்து விடுவதில்லை.
இயற்கைச் சாவு எனும்போது மூச்சு விடுதல் நின்று
போகிறது. எனவே ஆக்சிஜன் இல்லாமல், முதலில்
மூளை செயலிழக்கும். அதன் பின்னர் இதயம்,
கல்லீரல், சிறுநீரகம் போன்றவை செயலிழக்கும்.
தோல், கண், கார்னியா, இதய வால்வுகள் முதலியவை
சுமார் ஒரு நாள் சிதையாமல் இருக்கும். வெள்ளை
அணுக்கள் சுமார் மூன்று நாட்கள் கடந்த பின்னரே
சிதையும்.
உறுப்பு சிதையாமல் இருந்தால்தான் உள்ளுறுப்புகளை
எடுத்து மாற்று உறுப்பு சிகிச்சை செய்ய முடியும்.
இறந்தவர் உடலில் இருந்து சிறுநீரகத்தை எடுத்து தாழ்
வெப்பநிலையில் அதிகபட்சம் 24 மணிநேரம்தான்
வைக்கமுடியும்.
அதேபோல கல்லீரல் 12-15 மணிநேரம்,
நுரையீரல் அதிகபட்சமாக 8 மணிநேரம்,
இதயம் 6 மணிநேரம் சிதையாமல் இருக்கும். விரைவாக
எடுத்து நோயாளியின் உடலில் பொருத்திவிட வேண்டும்.
வெங்கியைக கேளுங்கள்- (பட்டம்- தினமலர்)
மறுமொழியொன்றை இடுங்கள்