ஆதார் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி?

ஆதாரின் டிஜிட்டல் காப்பியை ஆன்லைன் மூலமாக
டவுன்லோடு செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

தனிமனித அடையாள ஆவணமான ஆதார் கார்டுகள்
இப்போது அனைத்துக்கும் கட்டாயமாக்கப்பட்டு
வருகின்றன.

சிம் கார்டு, வங்கிக் கணக்கு, பான் கார்டு, வருமான
வரிக் கணக்கு உள்ளிட்ட அனைத்துக்கும் ஆதார்
இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார்
கையில் இருப்பது மிகவும் அவசியமானதாகும்.

ஆதார் கார்டு உங்களது கையில் இல்லாவிட்டாலும்,
டிஜிட்டல் ஆதார் காப்பி இருந்தால் மிகவும் உபயோகமாக
இருக்கும். அதை ஆன்லைன் மூலமாக மிக எளிதாக
டவுன்லோடு செய்வது எப்படி என்று இங்கே
பார்க்கலாம்.

ஆதாரின் அதிகாரப்பூர்வ uidai.gov.in என்ற முகவரியில்
செல்ல வேண்டும்.

அதில் Get Aadhaar என்ற சேவையில் download Aadhaar
என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் நீங்கள் UID, EID அல்லது VID ஆகிய
மூன்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

என்பதை கிளிக் செய்தால் உங்களது பதிவுசெய்யப்பட்ட
மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும்.

அதைப் பதிவிட்டு verify and download என்பதை கிளிக்
செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

உடனடியாக உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டு PDF
வடிவத்தில் உங்களது கம்ப்யூட்டரில் டவுன்லோடு
ஆகிவிடும்.

இந்த PDF காப்பியை ஓப்பன் செய்வதற்கு நான்கு
இலக்கு பாஸ்வேர்டு கேட்கும். அதில் உங்களது பெயரின்
முதல் நான்கு எழுத்துகளை கேப்பிட்டல் லெட்டரிலும்,
அதைத் தொடர்ந்து உங்களது பிறந்த தேதிக்கான
வருடத்தையும் பதிவிட வேண்டும்.

mAadhaar மொபைல் ஆப் மூலமாகவும் இதே முறையைப்
பயன்படுத்தி நீங்கள் உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை
டவுன்லோடு செய்யலாம்.

நன்றி- சமயம் -செய்திகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

<span>%d</span> bloggers like this: