நான் டோனியின் தீவிர ரசிகை’ – சானியா மிர்சா

‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா 202005060114598198_Sania-mirza-reveals-she-is-a-huge-dhoni-fan_SECVPF

ஐதராபாத்,

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா,
சமூக வலைதளமான ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் நடந்த
உரையாடலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த ருசிகர
பதில்கள் வருமாறு:-

கேள்வி:
எந்த கிரிக்கெட் வீரருடன் மதிய உணவு சாப்பிட ஆசை?

பதில்:
டோனியை தேர்வு செய்கிறேன். டோனியிடம் சில தடவை
ஹலோ சொல்லி இருக்கிறேன். ஆனால் நாங்கள்
நண்பர்களாக இல்லை. அவருடன் அமர்ந்து மதிய உணவு
சாப்பிட விரும்புகிறேன். நான் டோனியின் மிகப்பெரிய ரசிகை.

கேள்வி: உங்களது சாதனை பட்டியலில் விடுபட்டது?

பதில்: ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்ல வேண்டும்
என்பதே எனது லட்சியம்.

கேள்வி: உங்களது வாழ்க்கையில் கடினமான தருணம்?

பதில்: 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர்
அரைஇறுதியில் தோற்றது, அதன் பிறகு நடந்த வெண்கலப்
பதக்கத்துக்கான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது மிகப்பெரிய
ஏமாற்றத்தை அளித்தது.

கேள்வி:
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் நிறைய டென்னிஸ்
வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள். ஆனால் வீராங்கனைகளை
அந்த அளவுக்கு பார்க்க முடியவில்லை. அதற்கு காரணம்?

பதில்: இளம் வயதில் பெண்களை விட ஆண்கள் உயர்மட்ட
பயிற்சியை பெறுவது தான் காரணம்.

கேள்வி: உங்களுக்கு பிடித்தமான டென்னிஸ் வீராங்கனை?

பதில்: ஸ்டெபி கிராப் (ஜெர்மனி).

கேள்வி: நீங்கள் டென்னிஸ் வீராங்கனையாக உருவெடுக்காமல்
இருந்திருந்தால்….?

பதில்: உள் அலங்கார வடிவமைப்பாளராகி இருப்பேன்.

இவ்வாறு சானியா கூறினார்.

தினத்தந்தி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: