நாயகனோ நாயகியோ அல்லது வேறு கதாபாத்திரமோ அங்கத்தில் குறைபாடுடன் சித்தரிக்கப்பட்டதுண்டு. சில நேரங்களில் கதையின் மையமாகவும் பல நேரங்களில் அனுதாப அலை வீச ஒரு Prop ஆகவும் இடம் பெரும் விஷயம். இதை வைத்து காமெடி செய்யும் insensitive காட்சிகளும் உண்டு. கதையின் முக்கிய அம்சமாக வந்தால் திரைப்பாடல் இதை அழகாக Soft ஆக கையாள்கிறது என்றே தோன்றுகிறது.. பாகப்பிரிவினையில் கண்ணதாசன்தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ
என்று இது ஒரு மேட்டரே இல்லை என்பது போல் ஆறுதல் சொல்லும் பாடல் இந்த கோலத்தின் முக்கிய புள்ளி. தொடர்ந்து ‘கால்களில்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா, இரு கைகளில்லாமல் மலர்களை அணைத்து காதல் தரவில்லையா’ என்று கவிதையாய் ஒரு motivation செய்தி சொல்கிறார். என் தம்பி படத்தில் முத்து நகையே என்று ஒரு குழந்தையை வர்ணிக்கும் பாடலில்கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு?
கையழகு பார்த்தால் பூ எதற்கு?
காலழகு ….
மேலே பாட முடியாமல் குறைபட்ட காலை பார்த்து வருந்திய கவிஞர் கோபப்பட்டு முடிக்கும் வரிகளை பாருங்கள்.காலழகு பார்த்தால் தெய்வத்துக்கு
கருணை என்றொரு பேரெதற்கு ?
இறைவனை உரிமையோடு சாடும், நிஜமான நியாயமான கோபம் காட்டும் கேள்வி. பேசும், கேட்கும் சக்தி இல்லாத நாயகன் நாயகி பற்றி உயர்ந்தவர்கள் பட பாடலில் ‘ இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட’ என்றதும் வைரமுத்துவின் ‘கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது’ என்பதும் இதே கோபம்தான்.
நாயகி பேசாமடந்தையாய் இருக்கும் நிலையில் கண்ணதாசன் எழுதிய இரண்டு பாடல்கள். முதலில் கொடி மலர் படத்தில்மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
பேசமுடியாத காதலியை ‘மௌனமே’ என்று அழைத்து ஜாடையே போதும் நாம் பேச என்று சொல்லும் காதலன். அடுத்துமுத்துச்சரமே என் பக்கமிருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னமிருக்கும் இந்த சின்ன முகத்தில்
பல மொழிகள் பாடம் பெற வரவேண்டும்
கண்ணதாசன் சின்ன முகத்தில் கண்டதை சமீபத்தில் வைரமுத்துவும் இதயத்தில் பார்க்கிறார் மொழி படத்தில் இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதனின் மொழிகள் தேவையில்லை,இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை என்று தீர்மானம் போடுகிறார்.
அடுத்த பாடல்வாழ்வு என் பக்கம் படத்தில் . மௌனம் என்பது ஒரு வகை மொழியின் பதம் என்று விளக்கும் வரிகள்.வீணை பேசும் அதை மீட்டும் விரல்களை கண்டு
தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்றுதீபம் எப்போது பேசும் கண்ணே
தோன்றும் தெய்வத்தின் முன்னே
தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
தீபம் சொல்லாதோ கண்ணே
சில அற்புதமான உரையாடல்களில் வார்த்தைகளே இல்லை என்பதை எவ்வளவு அழகாக சொல்கிறார். இதை கேட்டால் அந்த பெண்ணே ‘குறையொன்றுமில்லை’ என்று நினைத்திருப்பாளோ என்று தோன்றுகிறது. அதை சொல்லத்தான் MSV அந்த பாடலில் பெண்ணின் குரலில் ஒரு சந்தோஷமான ஹம்மிங் சேர்த்திருப்பார்.
மோகனகிருஷ்ணன்
நன்றி-
மறுமொழியொன்றை இடுங்கள்