ஒப்பிலியப்பன் திருக்கோவில், – தல வரலாறு

ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும். 17FCB9D1-E36D-4813-B455-977DAE7DA614_L_styvpf

தல வரலாறு :

மிருகண்டு முனிவரின் மகனான மார்க்கண்டேயர்,
துளசி வனமான இத்தலத்தில் வசித்து வந்தார்.
அவருக்கு லட்சுமி தேவியை தனது மகளாகவும்,
நாராயணரை மருமகனாகவும் அடைய வேண்டும்
என்ற ஆவல் ஏற்பட்டது.

இதற்காக அவர் இங்கு ஒரு திருத்துளாய் செடியின்
அடியில் அமர்ந்து கடும் தவம் இருந்தார். அவரது
தவத்தை கண்டு மனம் மகிழ்ந்த பெருமாள்,
பெரிய பிராட்டியை நோக்கி ‘தேவி! நீ சென்று
மார்க்கண்டேயருக்கு மகளாக இரு.

தக்க நேரத்தில் நான் வந்து உன்னுடன் உறைவேன்’
என்றார். அதன்படி லட்சுமி தேவி சிறு குழந்தையாக
அவதரித்து துளசி வனத்தை அடைந்தாள்.

மார்க்கண்டேயர் மனம் மகிழ்ந்து அந்தக்குழந்தையை
எடுத்து வளர்த்து வந்தார். குழந்தை வளர்ந்து பருவ
வயதை அடைந்ததும், அவருக்கு திருமணம் செய்து
வைக்க தக்க மணமகனைத் தேடினார்.
அவரிடம் நாராயணர் கொஞ்சம் விளையாடத்
தீர்மானித்தார்.

வயோதிக வடிவம் பூண்டு கந்தலான ஆடையை
உடுத்திக்கொண்டு முனிவரின் ஆசிரமத்தை
அடைந்தார் நாராயணர். அவரை வணங்கி வரவேற்ற
முனிவர், ‘தாங்கள் விரும்புவது யாது?’ எனக் கேட்டார்.

அதற்கு முதியவர், நான் உயர்ந்த குடியில் பிறந்தவன்.
வயதான காரணத்தால் தள்ளாமையால் வருந்துகிறேன்.
மனைவி இல்லாதவனுக்கு இல்லறமில்லை.
தங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து தர
வேண்டும்’ என்றார்.

இதைக் கேட்டு திடுக்கிட்ட முனிவர் ‘இதற்கு நான்
உடன்பட மாட்டேன்’ என்று உறுதியுடன் கூறி விட்டார்.

ஆனால் முதியவரோ ‘தங்கள் மகளை திருமணம்
செய்து தராவிட்டால் தங்கள் எதிரிலேயே உயிரை
விடுவேன்’ என்றார்.

செய்வதறியாது திகைத்த முனிவர் தனது மகளிடம்
சென்று நடந்ததை விளக்கினார். அதற்கு அவள்,
‘வயோதிகரை மணக்க சம்மதிக்கமாட்டேன்.
வற்புறுத்தினால் உயிரை விட்டு விடுவேன்’ என்றாள்.

மன கலக்கமடைந்த மார்க்கண்டேயர், பகவானை
சரண் அடைந்தார். பகவான் தனது நாடகத்தை
முடித்து அவர் முன்பு மகாவிஷ்ணுவாக காட்சி அளித்தார்.

‘முனிவரே! உமது ஆசையை நிறைவேற்றவே இங்கு
வந்தேன். உமது மகள் பூமாதேவியை எனக்கு திருமணம்
செய்து தரவேண்டும். உமது மகள் சிறு பெண்ணாதலால்
உப்பை சரியான விகிதத்தில் சேர்க்க முடியாது என்று
கூறினீர். ஆதலால் இந்த தலத்தில் யாம் உப்பை
மறுத்தோம். உப்பில்லாமல் எனக்கு நைவேத்தியம்
படைப்பவரும், உப்பற்ற பண்டங்களை உண்பவரும்
எனது அருளை பரி பூரணமாக பெறுவர்.

உமது மகளை எனக்கு மணம் செய்து தருவீராக’
என்றார்.-

இதைகேட்டு மகிழ்ந்த முனிவர், ‘பரந்தாமனே! எனது
புதல்வியை மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
நீர் எந்நாளும் எனது புதல்வியுடன் இத்தலத்திலேயே
இருக்க வேண்டும். இந்த தலம் எனது பெயரால்
அழைக்கப்பட வேண்டும். உப்பற்ற உனது உணவு
பக்தருக்கு, பெரும் சுவையுடன் இருக்க வேண்டும்’
என்ற வரங்களை கேட்டார். பெருமானும் அவர் கேட்ட
வரங்களை வழங்கி அருளினார்.

திருமால் பூமாதேவியை பிரம்மன் முன்னிலையில்
தேவர்கள் அனைவரும் கூடி நிற்க இந்த துளசி
வனத்தில் ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று
திருமணம் செய்து கொண்டார்.

இத்தலத்திற்கு வந்து ஸ்ரீனிவாசனை சரணடைந்தோர்
அவரது அருளை பரிபூரணமாய் பெறுவது திண்ணம்.
திருமணமாகாதவர்கள் இங்கு வந்து தங்கள் பெயருக்கு
அர்ச்சனை செய்து வழிபட்டால், அவர்களுக்கு விரைவில்
திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

—————————-
மாலைமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: