பரிச்சய வச்சிக்கிட்டு சிரிக்கிறியா?

சிரிப்பு வெடி! -  Vikatan%2F2019-05%2Fe1d9fc45-1fd5-4116-b18e-614263efe271%2Fp246a

ஒரு காலத்தில், சோகப் படங்களாக மக்கள் பாத்து
ரசிச்சாங்க. ஏன்னா வாழ்க்கை சந்தோஷமா
இருந்துச்சு.

ஆனா, இப்ப காமெடி சேனலா பாக்கிறாங்க.
காரணம் பிரச்னை புடுங்கித் திங்குது. வசதி பெருகிடுச்சி,
ஆனா மகிழ்ச்சி குறைஞ்சிடுச்சு. இந்தத் தீபாவளியில
பெரியவங்க யானை வெடி வெடிக்க முடியாட்டியும் சிரிப்பு
வெடியாவது வெடிச்சிக் கொண்டாடலாம்.

இதுக்காக ஒண்ணும் மெனக்கெட வேண்டியதில்லை.
நம்மைச் சுத்தியிருக்கிறவங்களை உன்னிப்பா கவனிச்சாலே
போதும். அவ்வளவு சிரிப்பு நம்மைச் சுத்திக் கிடக்கு.

சின்னப் பசங்களுக்குக் கூட நகைச்சுவை உணர்வு உண்டு.
மனுசன் ஒருத்தனுக்குத்தான் அது இயல்புலயே இருக்கு.
ஆனா நாம்ப பொது இடத்துல சிரிச்சாலே குத்தம்ங்கற
மாதிரி நெனச்சிக்கிறோம்.

கோயிலுக்குள்ளே நின்று யாராச்சும் சிரிச்சா, நாம்ப உடனே
திரும்பி அவங்களை முறைச்சு முறைச்சுப் பாக்கறோம்.
சில வீட்டுல பரிச்சை நேரத்துல பசங்க சிரிச்சா,
‘பரிச்சய வச்சிக்கிட்டு சிரிக்கிறியா?’ அப்படீன்னு
பெத்தவங்க மொத்தி எடுப்பாங்க. ஏதோ சிரிச்சதுக்கே
ஸ்கூல்ல மார்க்கை குறைக்கிற மாதிரி!

சின்னப் பசங்கள மனசு நிறைய சிரிக்க வச்சிப் பாருங்க….
அவங்க எல்லாத்துலேயும் புத்திசாலியா இருப்பாங்க. ஏன்னா
இன்டெலிஜன்ஸ் அதிகமா இருக்கறவங்க மாத்திரந்தான்
சிரிக்கவும் முடியும், சிரிக்க வைக்கவும் முடியும்.

அடுத்தவங்களை அழவைக்கத்தான் எந்த புத்திசாலித்தனமும்
தேவையில்லை.

———————————இறையன்பு- விகடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: