சிரிப்பு வெடி! –

சிரிப்பு வெடி! -  Vikatan%2F2019-05%2F7af13d7b-ac1a-4fa0-a6a3-579845b1da9f%2Fp247a

ஒரு வீட்டுக்கு என்னோட சின்னப் பையனோட
போயிருந்தோம்
வீடுன்னா வீடு அப்புடி ஒரு வீடு. எல்லா ரூமூலேயும்
ஏகப்பட்ட கலைப் பொருளுங்க. அது எல்லாமே க
ண்ணாடியால செஞ்சது. அந்த வீட்டு டாக்டரும்,
அவரு பொண்டாட்டியும் வெளிநாடு போகும்போது
வாங் கிட்டு வந்திருக்காங்க.

வீட்டுல நடக்கக்கூட இடமில்லாத மாதிரி பொருட்கள்.
‘இவங்க பொருட்களை வைக்கிற ஒரே நோக்கத்துலதான்
வீடு கட்டுனாங்களோ!’னு சந்தேகம் வந்துடும்.

பொருளையெல்லாம், உடை யாமல் இருக்க எல்லோரும்
ராத்திரி வெளியில கார் ஷெட்டுல போய்
படுத்துக்குவாங்களோன்னு கூட நான் நெனைச்சேன்.

அந்த டாக்டருக்கு ஒரு மகன். கல்யாணமாகி ரெண்டு
மூணு வருஷமிருக்கும். இன்னும் குழந்தை யில்லை.

என்னோட சின்னப் பையனை அந்த வீட்டுக்குள்ளே
கொஞ்சம் நேரம் வச்சிக்கறதுக்குள்ளே படாதபாடு
பட்டுட்டோம்.

அவன் ஓடினா எங்களுக்கு ஹார்ட் அட்டாக் வர்றாப்பல
ஆயிடுச்சு. எந்தப் பொருளாவது அவன் கைபட்டு,
கால்பட்டு உடைஞ்சிடுமோ… வந்த இடத்துல ரசாபாசம்
ஆயிடுமோனு நடுக்கம்.

அவனைக் கன்ட்ரோல் பண்றதுலேயே எங்க நேரம்
போயிடுச்சி. அந்த வீட்டுல இருந்தவங்களும்,
‘பத்திரம்டா தம்பி… பாத்துடா தம்பி’னு பல்லைக்
கடிச்சு மேய்ச்சுக்கிட்டே இருந்தாங்க. ஒரு வழியா
அங்கயிருந்து கிளம்பும்போது டாக்டர் வீட்டு
இளம்ஜோடிகளைப் பார்த்து என் பையன்,

‘ஏன் இன்னும் குழந்தை பெத்துக்காம இருக்கீங்க!
குழந்தை வந்தா பொருளையெல்லாம் உடைச்சிடும்னு
பயமா?’னு கேட்டானே பார்க்கலாம்.


—————————-

இறையன்பு
-விகடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: