மாட்டு வண்டியில் வலம் வந்த வெளிநாட்டுப் பயணிகள்!

மாட்டு வண்டியில் வலம் வந்த வெளிநாட்டுப் பயணிகள்! Foreigners_travelling_in_bullock_cart_at_tanjore_1

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள வீரசிங்கம்பேட்டையில்
சுற்றுலாத்துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் விழால்
பங்கேற்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாட்டு வண்டியில் பயணம்
செய்து கிராமத்தை வலம் வந்தனர்.

இதில், பிரான்ஸ், இங்கிலாந்து, டென்மார்க், இத்தாலி, மெக்ஸிகோ,
அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச்
சேர்ந்த 48 பேர் கலந்து கொண்டனர்.

இவர்களுக்குத் தமிழர் பாரம்பரிய முறைப்படி கிராம மக்கள் மாலை
அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு வரவேற்பு அளித்தனர். பின்னர்,
நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தனர்.

இதையடுத்து, கிட்டத்தட்ட 10 மாட்டு வண்டிகளில் வெளிநாட்டுப்
பயணிகள் ஏறி கிராமத்தை வலம் வந்தனர். ஏறத்தாழ ஒரு கி.மீ.
தொலைவுக்கு மாட்டு வண்டிகளில் வெளிநாட்டுப் பயணிகள்
வலம் வந்ததை கிராம மக்களும் திரண்டு வேடிக்கை பார்த்தனர்.

மாட்டு வண்டியில் பயணம் செய்தது வித்தியாசமான அனுபவமாக
இருந்தது என்றனர் வெளிநாட்டுப் பயணிகள். இந்த விழாவில்
வேளாண்மைத்துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு,
மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.

தினமணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: