பிஞ்ச், வார்னர் அசத்தல் சதம்; ஆஸி., அணி அபார வெற்றி

பிஞ்ச், வார்னர் அசத்தல் சதம்; ஆஸி., அணி அபார வெற்றி Tamil_News_large_2457938

மும்பை:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள்
போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில்
தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியாவின் வார்னர், பின்ச் சதம் அடித்து மிரட்டினர்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று
போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
இரு அணிகள் மோதிய முதல் போட்டி மும்பை, வான்கடே
மைதானத்தில் நடந்தது.

‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச்,
பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல்,
கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பன்ட், ஜடேஜா, ஷர்துல் தாகூர்,
குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா இடம் பெற்றனர். ஆஸ்திரேலிய
ஒருநாள் அணியில் லபுசேன் அறிமுக வாய்ப்பு பெற்றார்.

இந்திய அணியின் ரோகித் சர்மா 10 ரன் எடுத்தார். ஷிகர் தவான்
28 வது அரைசதம் அடித்தார். லோகேஷ் ராகுல் 47 ரன்னுக்கு
அவுட்டானார். தவான் 74 ரன் எடுத்தார். கோஹ்லி 16, ஸ்ரேயாஸ்
4 ரன்னுக்கு ஏமாற்றினர்.

இந்திய அணி ஒருகட்டத்தில் 27 ஓவரில் 1 விக்கெட்டுக்கு
134 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து 30 ரன் எடுப்பதற்குள்
4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா (164/5).

இதன் பின் சரிவில் இருந்து இந்திய அணி மீளவே இல்லை.
ஜடேஜா 25, ரிஷாப் பன்ட் 28 ரன்கள் எடுத்தனர். ஷர்துல் தாகூர் (13),
குல்தீப் (17) நீடிக்கவில்லை. கடைசியில் ஷமி (10) அவுட்டாக,
இந்திய அணி 49.1 ஓவரில் 255 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

எளிய இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர்,
பின்ச் ஜோடி ‘சூப்பர்’ துவக்கம் கொடுத்தது. முதலில் வார்னர்,
அடுத்து பின்ச் சதம் விளாசினர்.

முடிவில் ஆஸ்திரேலிய அணி 37.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி
258 ரன்கள் எடுத்து, 10 விக்கெட்டில் வெற்றி பெற்றது. வார்னர்
(128), பின்ச் (110) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி 17ம் தேதி
ராஜ்கோட்டில் நடக்க உள்ளது.

தினமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: