ஜோக்கர் படம் 11 ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரை

ஜோக்கர் படம் 11 ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரை 202001141607366570_Oscars-2020-predictions-and-snubs-Joker-The-Irishman-Once_SECVPF

கலிபோர்னியா

92-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா பிப்ரவரி
9 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை, ஹாலிவுட் & ஹைலேண்ட்
மையத்தில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்படும். உலகெங்கிலும்
உள்ள 225-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் ஆஸ்கார் விருது
விழா நேரடியாக ஒளிபரப்பப்படும்.

ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கான பட்டியலில்
அதிகபட்சமாக ஜோக்கர் (Joker) திரைப்படம்
11 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்
(Once Upon a Time in Hollywood), தி ஐரிஷ் மேன்
(The Irishman), 1917 ஆகிய படங்களும் 4 விருதுகளுக்கு
பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஜோக்கர் (Joker) படத்திற்காக ஜாக்குயின் போனிக்ஸ்
(Joaquin Phoenix), Once Upon a Time in Hollywood
படத்திற்காக லியோனார்டோ டிகாப்ரியோ
(Leonardo DiCaprio) உள்ளிட்டோர் சிறந்த நடிகர்களுக்கான
பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மேரேஜ் ஸ்டோரி (Marriage Story) படத்திற்காக
ஸ்கார்லெட் ஜான்சன் உள்ளிட்டோரும் சிறந்த நடிகைக்கான
பரிந்துரை பட்டியலில் உள்ளனர்.

92-ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழா பிப்ரவரி
9-ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

விருதுக்கான பரிந்துரையில் இடம் பெற்றுள்ள படங்கள் வருமாறு:-

சிறந்த திரைப்படம்:

ஜோக்கர் படம் 11 ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரை 202001141607366570_bestfilm._L_styvpf

ஃபோர்டு விஃபெராரி ( ( Ford v Ferrari)
தி ஐரிஷ்மேன் ( The Irishman)
ஜோ ஜோ ராபிட் ( Jojo Rabbit)
ஜோக்கர் ( Joker)
லிட்டில் உமன் (Little Women)
மேரேஜ் ஸ்டோரி (Marriage Story)
1917 (1917)
ஒன்ஸ் அப் ஆன் ஏ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time…in Hollywood)
பாராசைட் ( Parasite)

சிறந்த இயக்குநர்:

மார்டின் ஸ்கோர்செஸ் (த ஐரிஷ்மேன்)
டாட் பிலிப்ஸ் (ஜோக்கர்)
சாம் மென்டெஸ் (1917)
குயின்டின் டரன்டினோ (ஒன்ஸ் அப் ஆன் ஏ டைம் இன் ஹாலிவுட்)
போங் ஜூன் ஹோ (பாராசைட்)

சிறந்த நடிகை:

சைன்தியா எரிவோ (ஹாரியெட்)
ஸ்கேர்லெட் ஜான்சன் (மேரேஜ் ஸ்டோரி)
சேஷா ரோனன் (லிட்டில் உமென்)
சார்லிஸ் தெருன் (பாம்ஷெல்)
ரினீ ஷெல்வெஜெர் (ஜுடி)

சிறந்த நடிகர்:

ஜோக்கர் படம் 11 ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரை 202001141607366570_oscar-actress._L_styvpf

அன்டோனியோ பந்த்ராஸ் (பெய்ன் அன்ட் குளோரி)
லியார்னாடோ டிகாபிரியோ (ஒன்ஸ் அப்ஆன் ஏ டைம் இன் ஹாலிவுட்)
ஜோக்குயின் போனிக்ஸ் (ஜோக்கர்)
ஜோனோதன் ப்ரெஸ் (த டூ போப்ஸ்)
ஆடம் டிரைவர் (மேரேஜ் ஸ்டோரி)

சிறந்த குணசித்திர நடிகை:

காதி பேட்ஸ் (ரிச்சர்ட் ஜுவல்)
லவுரா டெரன் (மேரேஜ் ஸ்டோரி)
ஸ்கேர்லெட் ஜான்சன் (ஜோ ஜோ ரேபிட்)
ஃப்ளோரென்ஸ் புக் (லிட்டில் உமன்)
மார்கோட் ராப்பி (பாம் ஷெல்)

சிறந்த குணசித்திர நடிகர்:

டாம் ஹென்க்ஸ் (எ பியூட்டிஃபுல் டே இன் த நெய்பர்ஹுட்)
அன்தோனி ஹோப்கின்ஸ் (த டூ போப்ஸ்)
அல் பசினோ (த ஐரிஷ்மேன்)
ஜோ பெஸ்சி (த ஐரிஷ்மேன்)
ப்ராட் பிட் (ஒன்ஸ் அப்ஆன் ஏ டைம் இன் ஹாலிவுட்)

நேரடி திரைக்கதை:

ரைன் ஜான்சன் (நைவ்ஸ் அவுட்)
நோவா பவும்பாக் (மேரேஜ் ஸ்டோரி)
சாம் மென்டெஸ், க்ரெஸ்டி வில்சன் கார்ன்ஸ் (1917)
குயின்டின் டரன்டினோ (ஒன்ஸ் அப்ஆன் ஏ டைம் இன் ஹாலிவுட்)
பாங் ஜூன் ஹு, ஹான் ஜின் உன் (பாராசைட்)

தழுவல் திரைக்கதை:

கிரிடா ஜெர்விக் (லிட்டில் உமென்)
அந்தோனி மெக்கார்டென் (த டூ போப்ஸ்)
டோட் பிலிப்ஸ், ஸ்கார்ட் சில்வர் (ஜோக்கர்)
தைய்கா வைடிடி (ஜோ ஜோ ரேபிட்)
ஸ்டிவன் சைலியான் (த ஐரிஷ்மேன்)

சிறந்த திரைப்பட எடிட்டிங்

த ஐரிஷ்மேன்
ஜோ ஜோ ரேபிட்
ஜோக்கர்
ஃபோர்டு விஃபெராரி
பாராசைட்

இதைத்தவிர சிறந்த இசை, ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்,
சிறந்த ஒளிப்பதிவு, அனிமேஷன் திரைப்படம், காட்சி அமைப்புகள்,
சர்வதேச திரைப்படம், ஆவணப்படம் உள்ளிட்ட பல விருதுகளுக்கான
பரிந்துரைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தினத்தந்தி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: