முகம்மது ஆல்வியின் உருது கவிதைகள்

முகம்மது ஆல்வி உருதுமொழியில் முக்கியமான
கவிஞராக கருதப்படுகிறார். குஜராத் மாநிலத்தில்
வசிப்பவர்.

1940களில் இடதுசாரிக்கவிஞராகத் தன் கவிதைப்
பயணத்தைத் துவங்கியவர். தரமான கவிதைகள்
தனக்கு எழத வரவில்லையென்று
பதினைந்தாண்டுகள் எழுத்துத்துறவு பூண்டவர்.

1963ல் துவங்கி நீண்டயிடைவெளிகளில் காலிவீடு,
கடைசி நாளைத்தேடி மூன்றாவது புத்தகம்,
நான்காவது வானம் என்று 4 கவிதைத் தொகுப்பகளை
வெளியிட்டிருக்கிறார். நான்காவது வானம்
கவிதைகளுக்காக 1991ல் சாகித்ய அகாதெமி பரிசு
பெற்றவர்.

அசாதாரண எளிமை,சொற்சிக்கனம், மெல்லிய
நகைச்சுவை இவர் கவிதைகளின் சிறப்பம்சங்கள்.
வாசகனைக் கிள்ளிவிட்டு ஒரு காட்சியைக் காண
வைத்து அப்பாவியாய் முகத்தை வைத்துக்
கொள்கின்றன முகம்மது ஆல்வியின் கவிதைகள்.

முபைதார் பக்த், மேரி ஆனி எர்கி இருவராலும்
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு
The wind knocks and other poems என்ற
தலைப்பில் சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ள
நூலிலிருந்து மூன்று கவிதைகள் தமிழில்.

—————————

  முகம்மது ஆல்வியின் உருது கவிதைகள் Scholar_sm

நினைவுக்கல் – கவிதை
——————
என் புதைகுழியிலிறங்கி
வசதியாக என் கால்களை அகட்டி
மகிழ்ந்தேன்.
யாரும் இங்கு
எனக்கு ஆபத்து விளைவிக்கமாட்டார்களென்று.
இந்த இரண்டு கஜ மண்
என் சொத்தாக இருந்தது
எனக்குமட்டும் சொந்தமாக
சாவகாசமாக
நான் கரையத் துவங்கினேன் மண்ணில்
காலவுணர்வு
இங்கு மறைந்துவிட்டது
நான் நிம்மதியாயிருந்தேன்
ஆனால் நீண்டநேரத்துக்கல்ல
நான் இன்னும்
முழுதும் மண்ணாகவில்லை. அதற்குள்
இன்னொருவன்
என் கல்லறையை ஆக்கிரமித்துக் கொண்டான்
இப்போதென் க(ல்லறையின்மீது
இன்னொருவனின் நினைவுக்கல் இருக்கிறது

———————–ஆங்கில வழி மொழிபெயர்ப்பு : லாவண்யா, எஸ்.காயத்ரி)
நன்றி-சொல்வனம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: