ரிலையன்ஸ் ஜியோவின் புதிய சலுகைகள் அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவன வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளும் வாய்ஸ் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டண அறிவிப்பு அமலாகி சில நாட்களாகிவிட்டது. 


இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ சார்பில் புதுவித சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய சலுகைகளில் ஏற்கனவே வழங்கிய பலன்களுடன் கூடுதலாக ஆஃப்நெட் ஐ.யு.சி. நிமிடங்கள் வழங்கப்படுகின்றன. 


அதன்படி புதிய ஆல் இன் ஒன் சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்., செயலிகள் மற்றும் 1000 நிமிடங்களுக்கான ஆஃப்நெட் ஐ.யு.சி. காலிங் சேவை வழங்கப்படுகிறது. ஐ.யு.சி. காலிங் மதிப்பு ரூ. 80 ஆகும்.

ரிலையன்ஸ் ஜியோ ஆல் இன் ஒன் சலுகை

ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கும் சலுகைக்கு வாடிக்கையாளர்கள் தற்சமயம் ரூ. 444 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகைக்கான கட்டணம் ரூ. 448 ஆக இருந்தது.

தற்சமயம் புதிய சலுகை ரூ. 444 விலையில் 1000 நிமிடங்களுக்கான ஐ.யு.சி. அழைப்புகளுடன் வழங்கப்படுகின்றன.
இரண்டு மாதங்களுக்கான சலுகை ரூ. 333 விலையில் வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகைக்கான கட்டணம் ரூ. 396 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த சலுகையிலும் வாடிக்கையாளர்களுக்கு 1000 நிமிடங்களுக்கான ஐ.யு.சி. அழைப்புகள் வழங்கப்படுகின்றன.


புதிய சலுகைகள் போட்டி நிறுவன சலுகைகளுடன் ஒப்பிடும் போது 20 முதல் 50 சதவிகிதம் வரை விலை குறைவு தான் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் 82 நாட்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கும் சலுகையை ரூ. 499 விலையில் வழங்கி வருகிறது.


ஆஃப் நெட் டாக்டைம் தேவைப்படாதவர்கள் தொடர்ந்து ரூ. 399 சலுகையை பயன்படுத்தலாம். ரிலையன்ஸ் ஜியோவின் ஆஃப்நெட் அழைப்புகளுக்கான கட்டணம் ரூ. 10 முதல் துவங்குகிறது.

மாலைமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: