ஓ பேபி – சினிமா விமரிசனம்

57

காட்சியும் கானமும் - புதிய பாடல்.  Ohbaby-tihlUoaadfchg_small


காட்சியும் கானமும் - புதிய பாடல்.  201908210859086031_OH-BABY-MOVIE-REVIEW-IN-TAMIL_MEDVPF


இளம் வயதிலேயே கணவனை இழந்து விதவையாகும்
லட்சுமி, மகன் மட்டுமே உலகம் என வாழ்ந்து வருகிறார்.
கஷ்டப்பட்டு மகனை வளர்த்து, படிக்க வைத்து, கல்யாணம்
செய்து கொடுக்கிறார்.

அவரது மகனுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.
மகன் மீதான அதீத பாசத்தால் தனது மருமகளை பகைத்து
கொள்கிறார் லட்சுமி. இதனால் மனமுடையும் லட்சுமியின்
மருமகள், லட்சுமியை முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு
தனது கணவரிடம் சொல்கிறார்.

இதை அறியும் லட்சுமி, வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
அந்த சமயத்தில் ஒரு மாயசக்தியினால் இளம் பெண்ணாக
(சமந்தா) மாற்றமடைகிறார். அதன்பின்னர், தான் இளம் வயதில்
தவறவிட்ட விஷயங்களை எல்லாம் அனுபவித்து ஜாலியாக வாழ
தொடங்குகிறார். இதையடுத்து காணாமல் போன லட்சுமியை
குடும்பத்தினர் தேடி அலைகின்றனர்.

இறுதியில் லட்சுமி இளம்பெண் சமந்தாவாக மாறியதையடுத்து
என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்? லட்சுமி இளம்பெண்
சமந்தாவாக மாறியதை குடும்பத்தினர் கண்டுபிடித்தார்களா?
லட்சுமி கடைசி வரை இளம் பெண் சமந்தாவாக இருந்தாரா?
என்பதே மீதிக்கதை.

படத்துக்கு மிகப் பெரிய பலம் சமந்தா.
70 வயது மனநிலையுடன் கூடிய 24 வயது பெண்ணாக பேச்சு,
நடை, உடை, பாவணை என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார்.
படத்தில் 70 வயது பேபி கேரக்டரில் நடித்துள்ள லட்சுமி, மகன் மீது
பாசம் காட்டுவது, நண்பன் ராஜேந்திர பிரசாத்தை கலாய்ப்பது என
நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

புதுமையான கதைக்களம், சுவாரசியமான திரைக்கதை என
கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் நந்தினி ரெட்டி. மனித வாழ்க்கையில்
ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதை அந்தந்த
மனநிலைக்கு ஏற்றவாறு அணுக வேண்டும் என்பதை சுவாரசியமாக
சொல்லியிருக்கும் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

வீட்டின் முதியோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்க்கும்
இந்த காலத்தில், ஒரு முதியவர் இளமை திரும்பினாலும், தனது
குடும்பத்தை எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதை கற்பனை கலந்து,
ஜனரஞ்சகமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்
நந்தினி ரெட்டி.

சிறப்பான பின்னணி இசை மற்றும் பாடல்கள் மூலம் படத்துக்கு
பலம் சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயர்.
ரிச்சர்டு பிரசாத்தின் நேர்த்தியான ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது

-மாலைமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: