நடிகை ராஷ்மிகா மந்தன்னா

நடிகை ராஷ்மிகா மந்தன்னா E_09112018121344


* “டியர் காம்ரேட்’ படத்தில் விஜய் தேவரகண்டாவுடன்
ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா மந்தன்னா. இந்தப்
படத்தின் மூலமாகத் தமிழ், தெலுங்கு ரசிகர்களிடம்
பெரும் வரவேற்பைப் பெற்றார் ராஷ்மிகா.

அதற்கு முன்னரே விஜய் தேவரகொண்டாவுடன்
“கீதகோவிந்தன்’ படத்தில் நடித்த போதே, தெலுங்கில்
வரவேற்பைப் பெற்றிருந்தார். இப்போது தமிழில்
அவருக்கென சிறு அளவில் மார்க்கெட் உருவாகியிருக்கிறது.

கன்னடப் படங்களில் மட்டுமே நடித்து வந்த ராஷ்மிகாவுக்கு
இப்போது தமிழ், தெலுங்கு என இரு சினிமாக்களிலும் கதவு
திறந்திருக்கிறது. “பிகில்’ படத்தையடுத்து விஜய்யின் 64-
ஆவது படம் பற்றிய பேச்சுகள் எழுந்துள்ளன. இந்தப் படத்தில்
விஜய் ஜோடியாக நடிக்க, ராஷ்மிகாவின் பெயர்
பரிந்துரைக்கப்பட்டது. இதற்காக அவரது பெயர் ஆலோசிக்கப்
பட்டது.

ஆனால் ராஷ்மிகா இதற்குப் பிடிகொடுக்காமல் விலகி
போனதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் வேறு
படங்களுக்கு அவரது கால்ஷீட் ஒதுக்கியிருப்பதுதான். ஹிந்தியில்
வந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டதாலேயே விஜய் பட வாய்ப்பை
அவர் ஏற்க மறுக்கிறார்.

இது பற்றி பேசும் போது விஜய்யுடன் நடிக்க வந்த வாய்ப்பை தவற
விடுவது ஏமாற்றமாக இருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார்.

———————————-ஜி.அசோக்
நன்றி-தினமணி
படம் – இணையம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: